படம் பொன்.காசிராஜன்

பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர்

நிதி ஆலோசகர் அனிதா பட்

நாடு... வீடு... இரண்டும் வேறு வேறு இல்லை தோழிகளே..! எப்படி நாட்டுக்கு பட்ஜெட் போட்டு செலவு செய்கிறார்களோ, அதுமாதிரி வீட்டுக்கும் செய்வதுதான் சரியானது. ஆனால், பெரும்பாலான சகோதரிகள் அப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை. 'இதுவரை இல்லை' என்பது உங்கள் பதிலாக இருந்தால்... இனிமேலாவது போடலாமே பட்ஜெட்!

பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்தும்போதுதான், எதற்கு எல்லாம் அதிகமாக செலவு செய்கிறோம், எவ்வளவு சேமிக்க முடிகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

சின்ன சின்ன விஷயம்தான். அதில் எப்படி எல்லாம் சேமிக்க முடியும் என்பதற்கு சில உதாரணங்கள் இங்கே...

செலவாகாத பணமும் சேமிப்புக்கு!

என் தோழி தேவி, ஒரு குடும்பத் தலைவி. கணவரின் சம்பளம் மாதம்

10,000. அதில் பாலுக்குத் தேவையான பணம் ஒரு கவரில், மளிகைக்குத் தேவையான பணம் ஒரு கவரில், மருத்துவச் செலவுகளுக்கு, காய்கறிக்கு, நகைச் சீட்டுக்கு என தனித் தனியாக கவர்களில் பணத்தைப் பிரித்து வைத்துவிடுவாள். எல்லா செலவுகளும் போக மிச்சமாகும் பணத்தை அவசரத் தேவைக்கு வைத்திருப்பாள். மாத முடிவு வரை அது செலவாகவில்லை எனில், வங்கி சேமிப்புக் கணக்கில் சேர்த்துவிடுவாள். இப்படி மிச்சமான தொகையே கணிசமாகச் சேர்கிறது அவள் வங்கிக் கணக்கில்! திட்டமிடாமல்... கரன்ஸி தீரும்வரை செலவழித்து இருந்தால், அவளுக்கு இது சாத்தியமாகி இருக்குமா? பட்ஜெட்டின் பயன் இப்போது புரிந்ததா!

தக்காளி தொக்கு சொல்லும் பாடம்!

எங்கள் வீட்டில் தக்காளி தொக்கு என்றால் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். வாரா வாரம் காய் வாங்கும்போது சமையலுக்குப் போக, தனியாக தக்காளி ஒரு கிலோ வாங்கி தொக்கு செய்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்களுக்கு வைத்திருந்து டிபன், சாதம் என சேர்த்துச் சாப்பிடலாம். ஆனால், தக்காளி விலை அதிகமாக விற்கும்போது தொக்குக்கு தற்காலிமாக லீவு

விட்டுவிடுவேன். அதிக விலை கொடுத்து வாங்க முடியும்தான். ஆனால், அது அநாவசியச் செலவுதான் என்னைப் பொறுத்தவரை.

பழங்கள் கைகொடுக்குமே பர்ஸுக்கு!

பொதுவாகப் பெண்கள் 30-40% உணவுப் பொருட்களுக்குத்தான் செலவு செய்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சில பெண்கள் தேவைக்கு அதிகமாக சமைத்து, பிறகு மிஞ்சியதைக் கீழே கொட்டுவார்கள். முன்புதான் தகவல் தொடர்பு வசதிகள் மிகமிகக் குறைவு; யாரும் முன்னறிவிப்பின்றி திடீரென வீட்டுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று, சமைக்கும்போது கொஞ்சம் அதிகமாக சேர்த்து சமைப்போம். இப்போது அப்படியில்லையே..?! யார் வீட்டுக்குச் செல்ல நினைத்தாலும், உடனே அவர்களுக்கு தகவல் தருவதற்கு போன், மொபைல் என்று பலவசதிகள் இருக்கின்றனவே! அப்புறம் என்ன கவலை..?! அப்படியே ஓரிருவருக்கு உணவு குறைவாக வரும் போலத் தோன்றினால், ஏதாவது பழங்களையும் கொஞ்சம் கொடுத்து சமாளித்துவிடலாமே! தேவைக்குத் தகுந்த மாதிரி அளவாகச் சமைத்தால், சமையலறை குப்பைத் தொட்டிக்குள் கண்ணுக்குத் தெரியாமல் போகும் பணம் கையில் நிற்கும்தானே!

32 ரூபாய் அரிசி டு 25 ரூபாய் அரிசி!

அவசரச் செலவுகள் வந்தால்... அதை சமாளிக்க என் வாடிக்கையாளர் ஒருவர் பக்காவாக பிளான் செய்வார். தன் வீட்டுக்கு கிலோ 32 ரூபாய்க்கு விற்கும் அரிசி வாங்குவது வழக்கம். ஒரு மாதத்துக்கு

அவருடைய வீட்டுக்குத் தேவையான அரிசி 30 கிலோ. திடீர் என்று ஏதாவது விசேஷம், செலவுகள் வந்துவிட்டால்... அந்த மாதம் மட்டும் 32 ரூபாய்க்கு பதிலாக 25 ரூபாய் அரிசிதான் வாங்குவார். இதனால் 210 ரூபாய் மிச்சமாகிவிடும். அதை திடீர் செலவுக்கு அட்ஜஸ்ட் செய்வார். அசைவப் பிரியரான அவர், அந்த மாதம் அதையும் கொஞ்சம் குறைத்துக் கொள்வார்.

இப்படி நம் கைக்குள்தான் இருக்கிறது... பணத்தைக் கையாளும் வித்தை.

டியூஷனுக்கு டியூன் ஆகுங்கள்!

சென்ற இதழிலேயே சொல்லியிருந்தேன்... நான் கேரளாவில் பிறந்தவள் என்று. சென்னை வந்தபோது எனக்கு சுத்தமாகத் தமிழ் தெரியாது. எனக்குப் பெண் குழந்தை பிறந்து, அவள் ஸ்கூல் போகும்போது

அவளுடன் படித்த குழந்தைகள் எல்லாம் டியூஷன் போவார்கள். ஆனால், நான் என் பெண்ணை டியூஷனுக்கு அனுப்பவில்லை. எனக்குத் தமிழ் தெரியாது என்றாலும்கூட, அவளுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்களை முதல் நாளே டிக்ஷ்னரி வைத்துப் படித்துப் புரிந்துகொண்டு, அடுத்த நாள் அவளுக்குச் சொல்லிக் கொடுப்பேன். இப்படி, பத்தாம் வகுப்பு வரை என் பெண் என்னிடம்தான் பாடங்கள் படித்தாள்.

எத்தனையோ பெண்கள் டிகிரி வரை படித்திருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு வீட்டிலேயே இருப்பார்கள். வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருக்கும் சூழலில்... தான் படித்த படிப்பை, தனது குழந்தைகளுக்குக் கடத்தினால்... மன திருப்தி அடைய முடியும்தானே! கொஞ்சம் இல்லை, நிறைய பணமும் மிச்சமாகும். அதுமட்டுமில்லை, குழந்தைகள் நம்ம மேல் அதிக அட்டாச்மென்ட்டாக இருப்பார்கள். இப்படி இரண்டு, மூன்று வருடங்கள் நீங்கள் டியூஷன் டீச்சராகத் தேறிவிட்டீர்கள் என்றால், வீட்டில் இருந்தபடியே அதை ஒரு தொழிலாகவும் மாற்றிக் கொள்ள முடியுமே..! உங்கள் குழந்தைக் கும் சொல்லிக் கொடுத்ததாகவும் இருக்கும், கையில் மாதம் சிறு தொகையும் கிடைக்கும்.

என்ன ஹோம் மினிஸ்டர்களே... செயலில் இறங்குவோமா?

- பணம் பெருகும்...