இரா.வினோத்
படங்கள்: சு.குமரேசன்

அகில உலக மோட்டார் பைக் காதலர்களின் பெரும் கனவு... 'ஹார்லி டேவிட்சன்’ (Harley Davidson) பைக் ஓட்ட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்! காரணம்... ஜேம்ஸ் பாண்ட் ஹீரோக்கள் துவங்கி, அர்னால்ட் வரை ஹாலிவுட்டின் அத்தனை 'டமால் டுமீல்’ ஆக்ஷன் ஹீரோக்களின் ஃபேவரைட் பைக் இதுதான்!

ஆண்களுக்கு இந்த ஆசை கை கூடுவதே சவாலான விஷயம். ஆனால், இந்தியாவில் முதல் முறையாக 'ஹார்லி டேவிட்சன்' பைக் வாங்கி, சாலைகளில் தடதடக்கிறார் ஒரு பெண். 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த பைக்கில்தான் தினமும் அலுவலகம் சென்று வருகிறார். அந்த தில் லேடி... ஷீஜா மேத்யூ!

பெங்களூருவில் உள்ள தன் அபார்ட்மென்ட்டில் மலையாள மணம் கமழ நம்மை வரவேற்றார் ஷீஜா!

''சொந்த ஊர் கேரளாவில் உள்ள கோட்டயம். அப்பா, இந்தியன் ஏர்ஃபோர்ஸில் ஆபீஸர். அம்மா, ஹோம் மேக்கர். எனக்கு ரெண்டு அண்ணன்கள். பிறந்தது கோட்டயம், வளர்ந்தது... இந்தியா. அட ஆமாங்க! டெல்லி, டேராடூன், மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூருனு பறந்து பறந்து வளர்ந்தவ. இப்போ 8 வருஷமா பெங்களூருவாசியாகிட்டேன்!'' என வார்த்தைகளுக்கு இடையில் வேகத்தடை இல்லாமல் ஹை ஸ்பீடில் பறக்கிறார் ஷீஜா.

''சின்ன வயதில் இருந்தே ரொம்ப துறுதுறு பொண்ணு. 8 வயதில் சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சேன். 12 வயதில் அப்பாவோட லூனா மொபெட், 17 வயதில் கார்னு எல்லாமும் ஓட்டினேன். டபுள்ஸ், ட்ரிபுள்ஸ்னு பயங்கர ஸ்பீட் வேற. காலேஜுக்கே நான்தான் பைக் ரேஸர். இப்போ ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை. வெரிகுட் சேலரி. என் காதல் கணவர் பேர் சஞ்சய் ஜோசப். 'சாஃப்ட்வேர் இன்ஜினீயர்’னு அறிமுகப்படுத்துறதவிட, 'டிராக் பைக் ரேஸர்’னு அறிமுகப்படுத்தினா ரொம்ப சந்தோஷப்படுவார். 5 வயதில் என் செல்ல மகன்... உன்னிராய்!'' என்று குடும்பக் குறிப்புக் கொடுத்த ஷீஜா, 'ஹார்லி டேவிட்சன்’ கதைக்கு கியரை மாற்றினார்.

''சின்ன வயதில் ஹாலிவுட் படங்கள் பார்க்கற போதே 'ஹார்லி டேவிட்சன் பைக்' மேல செம கிரேஸ். சூப்பர் கம்பீரமா, மேன்லியா, செம ஸ்ட்ராங், ரிச் லுக்னு... பார்க்கவே பத்த வைக்கும் பைக். வாழ்க்கையில ஒரு முறையாவது ஓட்டிப் பார்க்கணும்னு தீராத ஆசை பத்திக்கிச்சு. இந்த காதல் என் கனவிலும் கலையாமல் இருந்ததுனுதான் சொல்லணும். அப்புறம்...''

- திடீர் என வெட்கப்படுகிறார் ஷீஜா!

''சஞ்சயை நான் லவ் பண்ணினதுக்கு, பைக், கார்னு ஆட்டோமொபைல் மேல் அவருக்கும் இருந்த பிரியமும் காரணமா இருக்கலாம். அப்போ அவர் யமஹா ஆர்.எக்ஸ். பைக் வெச்சுருந்தார். எப்படி ஓட்டணும், கியர் எப்படி, கிளட்ச் எப்படினு கேட்டுட்டு, சின்னத் தடுமாற்றம்கூட இல்லாம கியர் பைக்கை முதன்முதல்ல ஓட்டினேன். அதிலிருந்து கியர் பைக்னா எனக்கு ஒரே பைத்தியம். ஆபீஸ்ல யாராவது புது பைக் வாங்கினாக்கூட... கேட்டு வாங்கி ஒரு ரவுண்ட் அடிப்பேன். படிப்படியாக 150 நீநீ, 180 நீநீ, 350 நீநீனு எல்லா வண்டிகளையும் ஹாயா ஓட்டுவேன். வண்டியின் 'நீநீ’ எகிற எகிற, எனக்கு 'தில்’லும் படபடக்கும்!'' என்றவர்,

''ஹார்லி டேவிட்சன் பைக் கம்பெனி, 2009-ம் வருஷம் பெங்களூருல ஷோரூம் ஓபன் பண்ணினாங்க. உடனடியா ஓடிப்போய் அந்த பைக்-ஐ தொட்டுப் பார்த்து, ஏறி உக்கார்ந்துனு பிரமிச்ச அப்போவே... 'எப்படியாவது வாங்கியே தீரணும்'னு முடிவெடுத்துட்டேன். சஞ்சய்கிட்ட சொன்னப்போ, முதலில் ஜெர்க் ஆனார். அவருக்குத்தான் என்னோட பைக் காதல் தெரியுமே?! கையில் இருந்த பணத்துடன் லோன் போட்டு, ஆறே மாசத்தில் பைக் ஆர்டர் கொடுத்தேன். ஆறு மாசம் கழிச்சு, 'ஹார்லி டேவிட்சன்’ என் வீட்டுக்கு வந்தது... சரியா என் பிறந்த நாளுக்கு முதல் நாள்!''

- பல ஆண்டுக் கனவு பலித்த மகிழ்ச்சி அவர் முகத்தில்.

''இந்தியாவிலேயே முதல் முறையா இந்த 8 லட்சம் ரூபாய் பைக்கை வாங்கின பொண்ணுங்கற பெருமையோட... நான், என் கணவர், பையன்னு என் குடும்பமே சிட்டிக்குள்ள பிரபலமாயிட்டோம் இந்த பைக் புண்ணியத்துல. பெங்களூரு டிராஃபிக்கில் பைக் ஓட்டும்போது, 'அதோ... அதுதான்!’னு எல்லாரும் என் பைக்-ஐ கண்ணால துரத்துறாங்க'' என்று சொல்லும் ஷீஜா, கார் ரேஸிலும் கில்லாடி. நந்தி ஹில்ஸில் ஆண்டுதோறும் நடக்கும் பெண்களுக்கான கார் ரேஸில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இவருக்குத்தான் ஃபர்ஸ்ட் பிரைஸ்!

''இந்த பைக்ல இதுவரைக்கும் 80 கிலோ மீட்டர் வேகத்தில் போயிருக்கேன். பைக் நீளமா இருக்கிறதால் பெங்களூரு டிராஃபிக்கில் இதை ஓட்டுறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. அடுத்த மாசம் கோவாவுக்கு இந்த பைக்ல பறக்கப் போற சந்தோஷத்தில்... இப்பவே என் மனசு றெக்கை கட்டுது. ஏன்னா... பைக் பறக்கும் வேகம் 150 கிலோ மீட்டரை தாண்டும்! ஐ ரியலி லவ் மை ஹார்லி!''

- ஆனந்தமாகச் சிரிக்கிறார் ஷீஜா!