பி.ஆரோக்கியவேல்
படங்கள்: எம்.உசேன்

நமது நாட்டில் ஆபரணங்கள் செய்யும் பாரம்பரியத்துக்கு வயது 5,000 ஆண்டுகள் என்கிறது ஒரு வரலாற்றுக் கணிப்பு!

அந்தத் தங்க தருணத்தை நினைவுகூரும் வகையில்... தங்க நகைகள் செய்வதில் புகழ்பெற்ற 'டாடா’வின் 'டைட்டன்’ நிறுவனம், தங்களின் சகோதர நிறுவனமான டாடா மோட்டார்ஸின் தயாரிப்பான 'நானோ’ காரையே, தங்க காராக மாற்றி, பலரையும் அதிசயிக்க வைத்துவிட்டது!

80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி இதையெல்லாம் வைத்து இழைத்ததோடு... வைரம், வைடூரியம், கோமேதகம், பவழம், முத்து, மாணிக்கம்... என்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நவரத்தினங்களையும் பதித்து, அந்த 'தங்க நானோ' காரை உருவாக்கியிருக்கின்றனர்!

இதை வடிவமைத்த டைட்டன் நிறுவனத்தின் தங்க நகை டிசைனரான தீக்ஷா மற்றும் அவரது குழுவினருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லியிருக்கிறார், ரத்தன் டாடா!

''இதன் டிசைனிங் வாய்ப்பை பெறும் போட்டியில் எங்கள் நிறுவனத்தின் பல டிசைனர்கள் கலந்து கொண்டார்கள். அதில் எங்கள் டிசைன் உட்பட ஐந்து டிசைன்களைத் தேர்வு செய்தனர். அடுத்த கட்டமாக, அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பொதுமக்களிடம் விட்டார்கள். மக்கள் எங்கள் டிசைனைத் தேர்வு செய்தது, நம்பமுடியாத சந்தோஷம்!'' என்று தீக்ஷா சொல்ல, டிசைனின் தாத்பர்யத்தை விளக்கினார் டிசைனர்களில் ஒருவரான சரவணன்.

''இந்த 'தங்க நானோ’வில் இந்தியாவில் இருக்கும் அத்தனை தங்க நகை வேலைப்பாடுகளும் பிரதிபலிக்க வேண்டும் என்று மெனக்கெட்டோம். அதனால் தமிழ்நாட்டின் 'டெம்பிள் செட்டிங்’, குறிப்பாக, காரைக்குடியின் 'க்ளோஸ்டு செட்டிங்’, ஆந்திராவின் 'பிதிரி’ வேலைப்பாடு, ராஜஸ்தானின் 'குந்தன் ஸ்டைல்’, மேற்குவங்கத்தின் 'ஃபிலிகுரி’ நேர்த்தி... என்று நாட்டின் அத்தனை அடையாளங்களையும் இந்த டிசைனில் கொண்டு வந்தோம். நமது தேசிய பறவை மயில், தேசிய மலர் தாமரை ஆகியவற்றையும் இந்த காரில் பார்க்க முடியும்!'' என்றார் பெருமையுடன்.

''கம்ப்யூட்டரில் படம் வரைந்து இந்த டிசைனை கற்பனை செய்தது ஒரு கட்டம் என்றால், அதை காருக்கு உயிரோவியமாக இடம் மாற்றியது அடுத்த கட்டம். அதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து திறமையான 30 பொற்கொல்லர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களை, இந்த தங்க ரதம் உருவான ஓசூருக்கு கொண்டு வந்து, வேலைகளைச் செய்து முடித்தோம். இந்தக் காரை நாடு முழுவதும் கொண்டுசென்று, பொதுமக்கள் இதில் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளவும், சின்னதாக ஜாலி ரைடு செல்லவும் அனுமதிக்கலாம் என்றுகூட திட்டம் இருக்கிறது!'' என்று சொல்லி ஆர்வத்தைத் தூண்டினார்... டைட்டன் டிசைன் துறைக்கு தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் ரேவதி.

டாடாவின் 'கோல்டு பிளஸ்’ நகைக் கூடங்கள் நம் மாநிலத்தில்தான் அதிகம் என்பதால், நம்மூரில்தான் இந்த ரதம் அதிகமாக ரவுண்ட் அடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

என்ன... தங்க ரதத்தில் ஊர்கோலம் போக ரெடியா..?!