ரிமோட் ரீட்டா
படங்கள்: ப.சரவணகுமார்

'நளினி வீட்டில் டும்.. டும்.. டும்..!'னு ஒரு செய்தி காதுக்கு வர, போன்புக்கைப் புரட்டி, நளினி மேடத்துக்கு போனைத் தட்டினேன்.

''ரீட்டா கண்ணு சௌக்கியமா... நல்லாயிருக்கியா...''னு அநியாயத்துக்கு நலம் விசாரிச்சு என்னை புல்லரிக்க வெச்ச மேடம்,

''ஆமாண்டி செல்லம்... எம்பொண்ணு அருணாவுக்குத்தான் கல்யாணம். நவம்பர் 27-ம் தேதி நாள் குறிச்சாச்சு. இப்பக்கூட கல்யாண ஷாப்பிங்லதான் இருக்கேன். ஷார்ப்பா ஈவ்னிங் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வாயேன்.... நேர்லயே பேசலாம்!''னு அழைப்பு வெச்சாங்க.

டாண்னு அஞ்சு மணிக்கு போய் நின்னதும்... புன்னகையோடு வரவேற்றவங்க,

''சைல்ட் ஆர்ட்டிஸ்டா சினிமாக்குள்ள வந்ததாலதான், படிப்பை முறையா தொடர முடியாம போச்சு! அந்த நிலை என்னோட குழந்தைங்களுக்கு வரக்கூடாதுனு நல்லா படிக்க வெச்சேன். பொண்ணு அருணா எம்.ஏ. பி.எல் அண்ட் ஏ.சி.எஸ். முடிச்சிருக்கா. பையன் அருண் சி.ஏ. முடிச்சிருக்கான். ரெண்டு பேரும் டுவின்ஸ்ங்கறதுதான் உனக்குத் தெரியுமே''னு சொன்னவங்ககிட்ட,''ரெண்டு பேரோட மேரேஜையும் ஒண்ணாவே வெச்சுருக்கலாமே!''னு கேட்டேன்.

''என்ன ரீட்டா இப்படி சொல்லிட்டே... நம்ம தமிழ்நாட்டோட பாரம்பரியபடி முதல்ல பொண்ணுக்குதானே கல்யாணத்தை முடிப்போம்! பையனுக்கு மூணு வருஷம் கழிச்சு பார்த்துக்கலாம்னு இருக்கேன்''னவங்க,

''மாப்பிள்ளையோட போட்டோவைக்கூட அருணா பார்க்கல! 'நீ எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்மா!'னு ஒரு வார்த்தைதான் சொன்னா! பிள்ளைங்களுக்கு நல்ல அம்மாவா இருக்கோம்கிற சந்தோஷத்துல பூரிச்சிட்டேன்!

மாப்பிள்ளை பேரு ராமச்சந்திரன். அழகான ஃபேமிலி... அவங்க வீட்ல எல்லோரும் அவ்ளோ அன்பா பழகுறாங்க! அவர், குவைத்ல ஒரு கம்பெனியில மேனேஜரா வொர்க் பண்றார்!''னு நளினி மேடம் சொல்லிக்கிட்டிருக்க,

''ஹாய்!''னு காபியோட அருணாவும், அருணும் வந்தாங்க.

''அம்மாவைப் பிரிஞ்சு ஒரு நாள்கூட இருக்க மாட்டேன். இனி எப்படி இருக்க போறேனோனு நெனைக்கிறப்போ... மனசுக்கு கஷ்டமா இருக்கு! எந்த நாடு, எந்த ஊர்ல இருந்தாலும்... அம்மாவைப் பார்க்கணும்னு தோணுச்சுனா... உடனே கௌம்பிடுவேன்னு அவர்கிட்டே இப்பவே 'ஓ.கே’ வாங்கி வெச்சுருக்கேன்''னு உருகித்தள்ளிட்டாங்க அருணா!

சரியான அம்மா... பொண்ணு!

''ரீட்டா அக்கா!''னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தா, ஸ்கூல் பேக்கை மாட்டிக்கிட்டு நின்னா... கவிதாஸ்ரீ! சின்னத்திரையோட செல்லக்குழந்தை, 'இதயம்’ (சன்), 'மாதவி’ (சன்) இப்படி கலக்கிட்டிருக்குற குட்டி தேவதை!

''ஷூட்டிங் இல்லையாடா இன்னிக்கு?''னு கேட்டதுதான் தாமதம்...

''இப்பல்லாம் என்னோட ஷூட் போர்ஷனை சாட்டர்டே, சண்டேல வர்ற மாதிரி டைரக்டர் அங்கிள்ஸ் ஃபிக்ஸ் பண்ணிக் கறாங்க. ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்ல... நிறைய லீவ் போடக்கூடாதுல்ல... அதான்!''னு சொன்ன குட்டி,

''ஸ்கூல்ல எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ். ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்சதும், 'எங்க வீட்டுக்குப் போகலாம் வா...’, 'இல்லை... இன்னிக்கு என்னோட வீட்டுக்குத்தான்’னு போட்டிப் போட்டு கூட்டிட்டுப் போவாங்க!''னு குஷியான கவிதாஸ்ரீகிட்ட,

''படிச்சு முடிச்சதும் பெரிய நடிகையா ஆகணும்னுதானே ஆசை?''னு கேட்டா,

''இல்லை... பெரிய்ய்ய்ய டாக்டராகணும்!''னு சொல்லிட்டு கிளாஸுக்கு கிளம்பிச்சு அந்தச் சிட்டு!

க்யூட் பேபி!

ராஜ் டி.வி. 'கொடிமுல்லை’ சீரியலில் அசிஸ்டென்ட் கமிஷனரா வர்ற சிவாகிட்ட, ''ஈரமான ரோஜா படத்துல பார்த்த மாதிரியே, இப்பவும் இருக்கீங்களே சிவா!''னு ஆச்சர்யமா கேட்டேன்.

''தினமும் எட்டு கிலோ மீட்டர் ஸ்பீட் வாக்கிங் போவேன்... வேற ஒண்ணும் பிரத்யேக பயிற்சி எல்லாம் இல்லை ரீட்டா!''னு சிரிச்சவர்,

''சினிமா போலத்தான் ரீட்டா சீரியலும். நம்ம கேரக்டரை பெர்ஃபெக்டா பண்ணணும்... அவ்ளோதான். சின்ன வயசுல இருந்தே எனக்கு நடிப்பு மேல விருப்பம். திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்து, எம்.சி.சி. காலேஜில் ஃபிலிம் டெக்ஸ்ட் கோர்ஸ் பண்ணிட்டு இருந்தப்போ, டைரக்டர் கேயார் சார் நடத்தின டெஸ்ட்ல பாஸ் பண்ணினதால் கிடைச்சதுதான் 'ஈரமான ரோஜா’ பட வாய்ப்பு. நிறைய நாள் சினிமா இண்டஸ்ட்ரி என்னைத் தாங்குச்சு. அப்புறம் எல்லாரையும் போல எனக்கும் ரெஸ்ட் கொடுத்துடுச்சு. 'கொடிமுல்லை’ சீரியல் எனக்கு சின்னத்திரையில ஒரு ஓபனிங் கொடுத்திருக்கு. தேவயானிக்கு ஜோடி. சீக்கிரமே என்னை இன்னும் ஒரு சேனல்லயும் பார்க்கலாம் ரீட்டா!''னு சன்ஸ்பென்ஸ் வெச்சு முடிச்சார் சிவா!

வா... சிவா... வா!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

வாசகிகள் விமர்சனம்

சின்னத்திரைக்கு சென்ஸார் இல்லையா?

''விஜய் டி.வி-யில் தினமும் 6-30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'மகாராணி’ தொடரில் ராணிக்கும் தோப்பியாஸுக்கும் நடக்கும் சண்டை, படுபயங்கரமாக இருக்கிறது. கத்திக் குத்து, ரத்தக் களறி என பார்க்கும்போதே அலற வைக்கிறார்கள். சினிமாவுக்கு சென்ஸார் இருப்பதுபோல... சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு கிடையாதா? வீட்டில் பொழுதுபோக்குக்காக பார்க்கும் சீரியலில் எதற்கு இத்தனை வன்முறை... களேபரங்கள்?!'' என அதிர்ச்சியோடு கேள்வி எழுப்புகிறார் மதுரையில் இருந்து ஆர்.பானுமதி

மூடநம்பிக்கையின் உச்சம்!

''சன் டி.வி-யில் தினமும் இரவு ஒளிபரப்பாகும் 'தங்கம்’ தொடர் வரவர மூடத்தனத்தின் உச்சமாக போய்க் கொண்டிருக்கிறது. கங்கா மற்றும் அவருடைய பிறந்த வீட்டினர், செல்வக்கண்ணன், அவர் தந்தை என குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் கலெக்டர்களாக இருந்தபோதிலும்... பிரச்னை என்று வந்தால் மட்டும் அம்மன் முன் நின்று தீ மிதிப்பது, சாமி ஆடுவது, அம்மனுக்கு மிளகாய் அரைத்து பூசுவது என மூடநம்பிக்கைகளின் உச்சத்துக்கு போய்விடுகிறார்களே! என்ன கொடுமை இது?'' என்று நொந்துகொள்கிறார் சென்னையில் இருந்து அஸ்வினி ஆனந்த்

கண்களை உருட்டாதீர்கள் வில்லிகளே!

''வில்லியாக வரும் பெண்கள், கண்களை அகலமாக்கி உருட்டுவது, பெரிதாக நெடுநேரம் சிரிப்பது, தாயே தன் மகன், மருமகளை பழிவாங்குவது என சின்னத்திரையில் பெரும்பாலான மெகா தொடர்களில் அரைத்த மாவையே அரைக்கிறார்கள். பார்த்துப் பார்த்து சலிப்பாக இருக்கிறது. நல்ல கதையம்சமும், சூப்பரான நகைச்சுவை உணர்வும் இருந்தால்தானே ரசிகர்களை ஈர்க்க முடியும். கதைக் குழுவினருக்கும் தயாரிப்பார்களுக்கும் இதுகூடவா தெரியாது...?'' என விளாசுகிறார் பி.என்.புதூரில் இருந்து எல்.வசந்தா