தமிழச்சி தங்கபாண்டியன்
படங்கள்: சு.குமரேசன்

'ரோ’ என நான் செல்லமாகக் கூப்பிடும் ரோகிணியின் அறிமுகம்... ஓர் அழகான மாலையில் எனக்குக் கிடைத்தது. என்னுடைய மிக முக்கிய மான தோழியும், சிறந்த மனுஷியுமான பிரசன்னா ராமசாமிதான், அந்தச் சந்திப்புக்குக் காரணம். பாரதியாரின் கவிதைகளை மேடையேற்றுகின்ற ஒரு நிகழ்வின் முதல் ஒத்திகை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இதே போன்றதொரு மழை மாதத்தில் தொடங்க, 'ரோ’ என் நட்பு வட்டத்தில் குளிர்ச்சியான தூறலாக நுழைந்தாள்!

இன்று வரை... 'காற்றே’ என அவள், என்னை அழைப்பதும்; 'ஒளியே’ என நான், அவளை மறுமொழிவதும் தொடர்கிறது (நாங்கள் நடித்த முதல் நாடகத்தில், இருவரும் ஏற்றிருந்த பாரதியின் பாத்திரங்கள் அவை)!

அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை. தொடர்ந்து உரையாடுவதும் இல்லை. திடீரென ஒரு குறுஞ்செய்தி - அன்பு மொத்தமும் அதில் வழியும். எந்த சமயம் என்றிருக்காது - ஒரு தொலைபேசி... அக்கறை கூடுதலாக அதில் தொனிக்கும். இருவருக்குமான நட்பு இப்படித்தான் - செழுமையாய்க் கிளைத்திருக்கிறது. அவளுடைய துக்கத்தில் நானும், என்னுடைய மகிழ்வில் அவளுமென - அந்தக் கிளையில் பூக்கள் மலர்ந்தும், உதிர்ந்தும், மொட்டுக்களாய்ப் புதுப்பித்துக் கொண்டும் இருக்கின்றன.

ரோகிணியின் ஆளுமை பன்முகப்பட்டது. ஒரு திரைப்பட நடிகையாக அவளது பயணத்தைத் தொடர்ந்து கவனித்தவள் அல்ல நான். ஆனால், ஒரு நிகழ்த்துகலை கலைஞராக (Theatre Artist) அவளது நடிப்பைக் கண்டு பிரமித்திருக்கிறேன். கவிதை எழுதுவதில் அவ ளுக்கு ஈடுபாடு உண்டு. எனது 'வனப்பேச்சி’ புத்தக வெளியீட்டு நிகழ்வில், தன்னை முன்னிறுத் தாமல் ஒரு ரசிகையாக, தொகுப்பாளினியாக உடனிருந்தாள். என் கவிதைகளை அவள் ரசிப்பது போலவே, 'பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அவள் முதன்முதலாக எழுதிய 'உனக்குள் நானே’ எனும் பாடலை நான் வெகுவாக ரசித்தேன்.

தன் மகன் ரிஷிக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும் அவள் இருக்கிறாள். Single Parent எனும் வலி மிகுந்த சுமையை அவள் எந்தவித புகார்களுமற்று ஏற்றுக் கொண்டவள். கணவனைப் பிரிந்திருந்தபோது, ரிஷியின் தந்தைக்கான இடத்தை வலிந்து தான் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த அவள் முனைந்ததில்லை. ரிஷியும், அவனது தந்தையுமே அதை நிரப்பிக்கொள்ளும் அளவுக்கான தைரியத்தை, அவளுடைய தாய்மை கொடுத்திருந்தது.

'பொம்மைகளை மட்டுமே கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கும்’, 'அம்மாவைக் கேளுங்க’ எனும் நடிகையாக அவள் இல்லை. சமூக நிகழ்வுகள் குறித்துத் தொடர்ந்து கவனித்துத் தனது கவலையையும், கருத்துகளையும் அவ்வப்போது பதிவு செய்பவள் ரோகிணி. பி.டி. கத்திரிக் காயை இந்தியாவில்... குறிப்பாக, தமிழ்நாட்டில் தடைசெய்ய வேண்டும் என்கிற விஷயத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டவள்.

படப்பிடிப்பு அல்லாத சமயங்களில் ஒப்பனை அற்று இருக்கின்ற அவளது முகம், பெரும் ஆச்சர்யம். புத்தியின் தெளிவையும், ரசனையின் உல்லாசத்தையும் அவள் அப்போது அணிந்து ரொம்பவே அழகாக இருப்பாள்.

'ஒரு படம் இயக்கி விரைவில் வெளியிட வேண்டும்' என்கிற நெடுநாள் கனவை, அவளுடைய நீண்ட ஜிமிக்கிகள் அசைய, மிக சமீபத்திய சந்திப்பு ஒன்றில் என்னோடு பகிர்ந்து கொண்டாள். சிறிய அகல் விளக்கு வரவேற்க, எளிமையும், புன்னகையும் மட்டுமே கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த அவளுடைய சின்னஞ்சிறு வீட்டில், எங்கள் தோழமையின் உல்லாசத்தைச் சுவர் பல்லிகள் பார்த்திருக்க, பலவற்றைப் பேசித் தீர்த்தோம்.

என்னைப் போலவே, கைவினைப் பொருட்களை நேசிப்பவள் அவள். மரக் கைப்பிடி கொண்ட, ஒரு கறுப்பு கதர் துணிக் கைப்பையை அவள் எனக்கு நீண்ட நாட்கள் முன்பு பரிசாத் தந்திருந்தாள். அது, அவள் ஆசை ஆசையாக தனக்கென வாங்கியது. ஞாபகமாக அதனை இந்தச் சந்திப்பின்போது எடுத்துப் போயிருந்தேன். துளசியின் மணம் கொண்ட பச்சைத் தேயிலை (க்ரீன் டீ) தயாரித்திருந்தாள்... கொஞ்சம் அவல் உப்புமாவும்கூட. ஆண்களற்ற ஓர் அந்தரங்கத்தில், நூற்றாண்டுகளாகப் பெண்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் ஒரு ரகசியமான சிநேகிதத்தையும், பரிவையும், ஆதங்கத்தையும், கேலியையையும், குபீர் சிரிப்பையும் பார்த்தபடி இருந்தது அந்தக் கைப்பை.

ஒரு சின்னச் சிரிப்புடன் அந்தக் கைப்பையைக் கையில் எடுத்தவள், அதை மடியில் வைத்துக் கொண்டாள் கொஞ்ச நேரம். ''நல்லாயிருக்கே... 'இந்தா, நீயே வெச்சுக்க'னு நீ அன்பாக கொடுத்தது இது'' என்றேன்.

''அன்பு வரும்போது, ஆசை தானாக வழிவிடுகிறது!'' என்றபடியே மீண்டும் என்னிடம் பையைக் கொடுத்தாள் ரோ.

எங்களது நாடக ஒத்திகையின்போது 'பிரக்ஞை’ என்ற வார்த்தையை துல்லியமாக என்னால் உச்சரிக்க முடியாது. மூக்கின் வழியாக (Nasal Tone) அவ்வார்த்தையைத் துப்புவதாக அவள் உரிமையோடு கிண்டல் செய்வாள். அவளுடைய வீட்டிலிருந்து கிளம்பியபோது ரோவிடம் சொல்ல நினைத்தேன் - ''இந்தக் கறுப்புக் கைப்பைக்கு நான் 'பிரக்ஞை’னு பேர் வெச்சிருக்கேன்'' என்று. பலதும் பேசியதில் அது மறந்தேபோனது.

ஆரத்தழுவியபின், வாசல் வரை வந்து வழி அனுப்பினாள். மெல்லிய இரவொளியில், வாழ்வின் பல இக்கட்டான படிக்கட்டுகளையும், ஏணிகளையும், பூச்செண்டுகளையும் கண்ணீரோடும், சிரிப்போடும் கடந்த அவள், தனியாக நிற்பதாகத் தோன்றவில்லை. காரில் ஏறிய பின்பு கை அசைத்தேன். எல்லையற்ற நட்சத்திரங்கள் மின்னுகின்ற வானமும், நிலவொளி தழுவும் நிலமும், வாழுகின்ற தாகமும் - இருவருக்கிடையே இருந்தது. நான் 'பிரக்ஞையுடன்’ வீடு திரும்பினேன். நிலா ஒரு கள்ளச் சிரிப்புடன் பின் தொடர்ந்தது!

- இறகு வருடும்...