Published:Updated:

அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி: வாக்கெடுப்பை சந்திக்க மத்திய அரசு தயார்?

அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி: வாக்கெடுப்பை சந்திக்க மத்திய அரசு தயார்?
அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி: வாக்கெடுப்பை சந்திக்க மத்திய அரசு தயார்?
அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி: வாக்கெடுப்பை சந்திக்க மத்திய அரசு தயார்?

புதுடெல்லி: நாடாளுமன்ற முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக இன்று  நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம், ஒருமித்த கருத்து எட்டப்படாமல் தோல்வியில்  முடிவடைந்த நிலையில்,வாக்கெடுப்பை சந்திக்க மத்திய அரசு தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்த விவகாரம்  தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி  வருகின்றன.

ஆனால் இதனை ஏற்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது.இந்நிலையில் மூன்றாவது  நாளாக இன்றும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்ட்சிகள் தொடர்ந்து  அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை  ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் நாடாளுமன்ற முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக  ஆலோசிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி  கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய பா.ஜனதா உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள்,சில்லரை  வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக  வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை இரு அவைகளிலும் நடத்த வேண்டும் என்று  உறுதிபட தெரிவித்தனர்.

எதிர்கட்சிகளின் இந்த பிடிவாதம் காரணமாக ஒருமித்த கருத்து எட்டப்படாமலேயே  கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

அதே சமயம் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் மாய்வதியின்  பகுஜன் சமாஜ் மற்றும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளும்  இவ்விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிக்க தயாராகவே உள்ளதாக தெரிகிறது.

##~~##
அதே சமயம் இப்பிரசனையில் மத்திய அரசை தமது கட்சி ஆதரிக்க வேண்டுமானால்,  பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில்  நிறைவேற்ற வேண்டும் என மாயாவதி நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மேற்கூறிய இருகட்சிகளின் ஆதரவு இருப்பதால் எதிர்கட்சிகள்  கோருகிறபடி வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை அடுத்தவாரம் நடத்த மத்திய அரசு  தீர்மானித்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.