எம்.குணா

இயக்குநர், நடிகர் என்று இரண்டு முகங்கள் கொண்டவர்... மணிவண்ணன். தமிழ் சினிமாவின் அடையாளக் கலைஞர். தான் இருக்கும் சூழலை எப்போதும் கலகலக்க வைக்கும் நகைச்சுவையாளர். தமிழர் பிரச்னைகளில் அக்கறையுடன் களம் இறங்கும் உணர்வாளர். இதெல்லாம் அவரின் அடையாளங்கள்.

மணிவண்ணனின் பலம்..? ''என் குடும்பம்!'' என்கிறார் நிறைந்த மனதுடன்!

மனைவி செங்கமலம், இல்லத்தரசி. மகள் ஜோதி, திருமணமாகி மலேசியாவில் வசிக்கிறார். மகன் ரகுவண்ணன், 'தமிழ் தேசம்’, 'கோரிப்பாளையம்’, 'முத்துக்கு முத்தாக’ என பெரியதிரையில் வளர்ந்து வரும் இளைஞர். தன் குடும்பம் பற்றிப் பேசும்போது, மணிவண்ணனுக்குள் அத்தனை நவரசங்களும் அமர்ந்துகொள் கின்றன.

''பாரதிராஜா சார்கிட்ட உதவி இயக்குநரா வாழ்க்கையைத் தொடங்கினவன் நான். 'நிழல்கள்’ படத்துல உதவி டைரக்டரா வேலை பார்த்தப்போ, வீட்டுல கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாங்க. ரிலீஸான படம் சரியா போகல. ஒரு படம் ஜெயிச்சதுக்கு அப்புறம்தான் கல்யாணம்னு வைராக்கியம் வெச்சுக்கிட்டேன். அடுத்து வெளிவந்த பாரதிராஜா சாரோட 'அலைகள் ஓய்வதில்லை’ படத்துக்கு நான்தான் கதை, வசனம். படம்... சில்வர் ஜூப்ளி. உதவி இயக்குநர் மணிவண்ணனுக்கு, 'கணவன்’னு புரமோஷன்!''

- தாடிக்குள் ஒளிர்கிறது அவரின் சிரிப்பு. தொடர்ந்தார் செங்கமலம்.

''குடித்தனம் நடத்த வீடு தேடி அலைஞ்சோம். அப்போ இளையராஜா சார், கங்கை அமரன் சார், பாஸ்கர் சார் எல்லாரும் மயிலாப்பூர் காரணீஸ்வர் கோயில் தெருவுல 100-ம் நம்பர் வீட்ல குடியிருந்தாங்க. அவங்க வேற வீட்டுக்குப் குடி மாறிபோக, அந்த வீட்டுல எங்க வாழ்க்கையை ஆரம்பிச்சோம்'' என்ற செங்கமலத்தை மறித்த மணிவண்ணன்,

''ரொம்ப எளிமையாதான் ஆரம்பிச்சது வாழ்க்கை. ஆனாலும், செங்கமலம் அவ்ளோ நிறைவா இருப்பாங்க. முகம் கோணாத மனைவி, கணவனுக்கு வரம். கலைஞனுக்கு, பெரும் வரம். வீட்டுக்குள்ள எனக்குக் கிடைச்ச அந்த ரம்மியமான, நிம்மதியான சூழல்தான், என் தேடல் தளங்கள்ல என்னைச் சோர்வில்லாம ஓட வெச்சது. 'கோபுரங்கள் சாய்வதில்லை’ படம் மூலமா, என்னை இயக்குநர் அந்தஸ்துக்கு உயர்த்துச்சு!''

- முதல் வெற்றியை மனைவிக்கு காணிக்கையாக்குகிறார் மணிவண்ணன்.

''முதல் பட ரிலீஸும், எங்க குடும்ப ரிலீஸும் ஒரே சமயத்துல நடந்துச்சு!''

- வெட்கம் படரத் தொடர்ந்தார் செங்கமலம்.

''எங்க முதல் பொண்ணு ஜோதி பிறந்தப்போ, எல்லா அப்பாக்களையும் மாதிரி இந்நேரம் நம்ம வீட்டுக்காரரும் ரூமுக்கு வெளிய கையைப் பிசஞ்சுட்டு காத்திருப்பார்னு லேபர் வார்டுல இருந்து வெளிய வந்தா, அவரைக் காணோம். அப்போதான் 'கோபுரங்கள் சாய்வதில்லை’ படம் ரிலீஸாகி இருந்ததால, அவர் அதுல ரொம்ப பிஸி. பக்கத்து பெட்லயெல்லாம் அவங்கவங்க வீட்டுக்காரங்க வந்து பிள்ளையைக் கொஞ்சி, மனைவிக்கு தைரியம் சொல்லினு நெகிழ்வா இருந்தாங்க. அதையெல்லாம் ஏக்கத்தோட பார்த்துட்டே இருந்தேன்...''

அவர் முடிக்கும் முன்பே... கதையைத் தான் தொடர்ந்தார் மணிவண்ணன்...

''அதை ஏன் கேட்கறீங்க..?! பட ரிலீஸ் வேலையில பரபரனு ஓடிட்டு இருந்தப்போ, எனக்குப் பெண் குழந்தை பிறந்திருக்குனு 10 மணிக்கு போன் வந்தது. உடனே ஓடிப்போய்ப் பார்க்கணும்னு ஆசை. இருந்தாலும், ராத்திரி ஒரு மணிக்குத்தான் வேலை முடிஞ்சுது. ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டு பதைபதைப்பும், பரவசமுமா நர்சிங் ஹோம் போனா, விசிட்டர் நேரம் முடிஞ்சுடுச்சுனு வாட்ச்மேன் உள்ள விடமாட்டேனுட்டாரு. அப்புறமென்ன... நான் பெத்த மகள பார்க்கறதுக்கு வாட்ச்மேனுக்கு லஞ்சம் கொடுத்து, நர்ஸுக்கு லஞ்சம் கொடுத்துனு ஒருவழியா உள்ளே போனேன். அப்படியும் ஜன்னல் வழியாதான் பார்க்கவிட்டாங்க. அந்தக் குட்டி உயிரை, என் உயிரை... முதல் முதலா பார்த்தப்போ நான் அடைஞ்ச சந்தோஷம் இருக்கு பாருங்க... சந்தோஷம்னு சின்னதா சொல்லிட முடியாது. அந்த உணர்வு ரொம்பப் பெருசு!'' என்று நெகிழ்ந்தவர்,

''ரகு பிறந்தப்போவும் படப்பிடிப்புக்காக (இங்கேயும் ஒரு கங்கை) வெளியூர்ல இருந்தேன். தகவல் வந்ததும், ஒரு நாள் லீவு போட்டுட்டு வந்து மகனைப் பார்த்துட்டு, மறுபடியும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிட்டேன். இப்படித்தான்... மிக முக்கியமான பல சமயங்கள்ல ஆப்சென்ட் ஆகி, செங்கமலத்தை ஏமாத்திடுவேன். நம்ம வேலை அப்படி. ஆனா, அதை அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. பழகிக்கிட்டாங்க. 'முக்கியமான விசேஷம்... அவன் இருக்கக்கூடாதா?’னு எங்க அப்பா, அம்மா என் மேல குற்றப்பத்திரிகை வாசிச்சாக்கூட விட்டுக்கொடுக்காம, 'இல்ல... அவருக்கு முக்கியமான வேலை...’னு ஆரம்பிச்சு, வாழ்க்கை முழுக்க எனக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்குற அன்பு வக்கீல் என் மனைவி!''

- செங்கமலத்தின் முகம் பார்க்கிறார் மணிவண்ணன்.

''என் வாழ்க்கையில் நான் சந்திச்ச அத்தனை தவறான கேரக்டர்கள்கிட்ட இருந்தும், எப்படி எல்லாம் வாழக்கூடாதுங்கற பாடத்தை கத்துக்கிட்டேன். அதன்படிதான் வாழறேன். அதனால, ரோல் மாடல்னு யாரும் இல்லை. ஆனா, எங்க குடும்பத்துக்கு ஒரு அக்கறையான வழிகாட்டி இருக்காங்க. அவங்க பழம்பெரும் நடிகை, அம்மா எம்.என்.ராஜம்''

- மணிவண்ணனை நிறுத்தித் தொடர்கிறார் செங்கமலம்...

''ரத்தக் கண்ணீர் படத்துல கொடூரமான வில்லியா நடிச்சவங்க ராஜம் அம்மா. ஆனா, அவங்க மாதிரி நிஜத்துல அழகான, அன்பான குடும்பத் தலைவியை நான் பார்த்ததில்லை. இன்னிக்கும் எங்க குடும்பத்துல ஏதாவது பிரச்னைனா, நாங்க போய் அம்மாகிட்டத்தான் நிப்போம். எங்களை நேராக்கி அனுப்பி வைப்பாங்க!'' என்ற செங்கமலத்தின் முகத்தில் சந்தோஷம்.

''எல்லார் வீட்டுலயும் பசங்களுக்கு ஸ்கூல் லீவ் விட்டா, சொந்தக்காரங்க வீட்டுக்குப் போவாங்க. ஆனா என் வீட்டுல, நான் எந்த ஊர்ல ஷூட்டிங்ல இருக்கேனோ, அங்க வந்துடுவாங்க. எங்க வீட்ல என் அப்பா, அம்மானு எல்லாரும் கூட்டுக் குடும்பமா இருக்கோம். அதனால அவுட்டோர் ஷூட்டிங் போனாலும், அவங்க எல்லாருமா சேர்ந்து சிரிச்சுப் பேசி இருந்துக்குவாங்க. என் மக ஜோதி மட்டும் என்னைப் பார்க்காம தவிச்சுப் போயிடும். சமயங்கள்ல காய்ச்சல்கூட வந்துடும். என் மேல அவ்ளோ பாசமானு, எனக்கே ஆச்சர்யமா இருக்கும். ஆனா, அது கல்யாணத்தப்போதான், அதுமேல எவ்வளவு உயிரா இருந்திருக்கேங்கிறதை முழுமையா உணர்ந்தேன். எத்தனையோ படங்கள்ல பொண்ணு கல்யாணத்தப்போ அழற அப்பா கேரக்டர்களுக்கு ஸீன் சொல்லிக் கொடுத்திருக்கேன். ஆனா, என் மக கழுத்துல மாப்பிள்ளை தாலி கட்டினப்போ, கண்ணீர் வழியக் கலங்கி நின்னேன். சந்தோஷம், பரிதவிப்பு, சோகம்னு மனசுக்குள்ள கலவையான உணர்வு!'' என்று மணிவண்ணன் கண்கள் கசிய, பேச்சை மாற்றினார் செங்கமலம்.

''எங்க மகள் கல்யாணத்துக்கு, லதா மேடத்தையும் அழைச்சுட்டு வந்திருந்தார் ரஜினி சார். என் மகளுக்கு சுயமரியாதைக் கல்யாணம் நடந்துச்சு. 'இங்கே கடவுளை எதிர்த்துப் பேசுவாங்க... உங்க மனசு சங்கடப்படும்’னு இவர் தயங்கிட்டே ரஜினிசார்கிட்ட சொன்னார். 'அதனால் என்ன..?’னு முகம் மாறாம 3 மணி நேரம் பொறுமையா இருந்தார் அவர். அவரோட கையால தாலி எடுத்துக் கொடுத்தார். எங்க குடும்பத்துல எல்லாரும் நெகிழ்ந்துட்டோம். இப்படி இந்த ஃபீல்டுல இவர் சம்பாதிச்சு இருக்குற நல்ல மனசுகள் நிறைய. அவங்க எல்லாரையும்தான் நானும், என் பசங்களும் இவரு சம்பாதிச்ச பெரிய சொத்தா நினைக்குறோம்!'' என்றபோது, அந்தக் குடும்பம் அவ்வளவு அழகாகத் தெரிந்தது.

இன்னும் இன்னும் பல சந்தோஷங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது மணிவண்ணன் - செங்கமலம் வீடு!