ரொமான்ஸ் ரகசியங்கள்!

ஒரு பிரபலமான குட்டிக்கதை இருக்கிறது. இத்தாலியில் ஒரு ஓவியர் இருந்தார். இயேசு பிறப்பது முதல், அவர் சிலுவையில் அறையப்படும் நிகழ்வு வரை ஒவ்வொரு கட்டமாக வரைந்து கொண்டே இருந்தார்.

குழந்தை இயேசுவை வரைய, தெய்வ அழகு நிரம்பிய ஒரு குழந்தை அவருக்கு மாடலாகக் கிடைத்தது. அதை மாடலாக வைத்து வரைந்தார். அதில் ஆரம்பித்து இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு கட்டமாக வரைந்துகொண்டே வந்தவர், இயேசு சிலுவையில் அறையப்படும் காட்சிக்கு வந்தபோது, 25 வருடங்கள் ஓடியிருந்தன.

இயேசுவை சிலுவையில் அறைந்து, அவரைச் சாட்டையால் அடித்தவனை வரைவதற்காக ஒரு மாடல் அவருக்கு அப்போது தேவைப்பட்டது. பார்ப்பதற்குக் கொடூரமான தோற்றமும், பயங்கரமும் சேர்ந்து அவன் இருக்க வேண்டும் என்று நினைத்தார் ஓவியர். இத்தாலி முழுக்கச் சுற்றியலைந்து அப்படி ஒருவனைக் கண்டுபிடித்தார். காண்பதற்கே அச்சமூட்டும்படியாக அவன் இருந்தான். ஆனால், ஓவியருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சிறு வயதில் ஒரு குழந்தையைத் தெய்விக மாடலாக வைத்து குழந்தை இயேசுவை வரைந்தாரே, அந்தக் குழந்தைதான்... வாழ்க்கை என்னும் புயலில் சிக்கி அப்படிச் சின்னாபின்னமாகி இருந்தது. வாழ்க்கை அனுபவங்கள் ஒருவனை எப்படி எல்லாம் கூறுபோட்டு விடுகின்றன என்பதை, அவரால் நம்ப முடியவில்லை!

திருமணமும் அப்படிப்பட்ட ஒன்றுதான்! என் கல்லூரித் தோழி ஒருத்தி இருக்கிறாள். எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது அவளின் அடையாளம். ஏதாவது ஜோக் சொல்லிவிட்டாலோ, சுவாரஸ்யமாக ஏதாவது நடந்துவிட்டாலோ அந்தச் சூழலே அதிரும்படி சத்தம் போட்டுச் சிரிப்பது அவளது இயல்பு. அவள் சிரிப்பதைப் பார்த்து அந்தச் சூழலே சந்தோஷமாக மாறுவதை நாங்கள் பலமுறை உணர்ந்திருக்கிறோம். அவளுக்கு 'ஸ்மைலி’ எனச் செல்லப் பெயர் கிடைத்ததும் அதனாலேயே.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், மற்றொரு தோழி மூலமாக ஸ்மைலியின் தொடர்பு எண் கிடைத்து, அவளைப் பார்க்கச் சென்றேன். வாசல் கதவைத் திறந்து ஸ்மைலி வெளியே வந்தபோது, சுத்தமாக அடையாளம் தெரியவில்லை. காரணம், அவள் முகத்தில் சிரிப்பில்லை. உற்சாகம் இல்லை. மிகவும் அளவான மெல்லிய புன்னகையை அவள் முகம் தாங்கிக் கொண்டிருந்தது... அவ்வளவே! அதிர்ச்சியில் திரும்பிப் போய்விடலாமா என்றுகூட யோசித்தேன். அன்று அவள் வீட்டில் வேறு யாருமில்லை. அதனால் அவள் மனம் திறந்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாள்.

'இதென்ன பழக்கம் எப்பப் பாரு 'ஈ’னு பல்லைக் காட்டிக்கிட்டு’, 'பொம்பளப் புள்ளயா அடக்கமா இருக்கத் தெரியுதா?’ 'குலுங்கி குலுங்கி சிரிக்கிறதப் பாரு...’

- திருமணத்துக்குப் பின் இப்படி பல கேள்விகளையும், அடக்குமுறைகளையும் அவள் எதிர்கொண்டாள். அவள் சிரிப்பதை நோட்டம் விடுவதற்கென்றே மாமியார் வீட்டில் ஒரு கும்பல் இருந்தது. சிரிப்பைக் கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி அவள் முகம் இறுகிப் போய்விட்டது. ஓரிரு ஆண்டுகளில் அவள் தன் இளமையைத் தொலைத்து விட்டாள்.

திருமணத்துக்கு பின் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப் போவதன் காரணம்... இயல்பைத் தொலைப்பதுதான்.

பெண்கள் சிரிப்பதை குற்றமாகவும், சுமையாகவும் பார்க்கும் சமூகம் இது. ஒரு பெண் சிரித்தால், அவள் ஆண்களைக் கவரவே சிரிக்கிறாள் என்ற கற்பிதம், பல பெண்கள் வாய்விட்டுச் சிரிப்பதற்குத் தடையாக இருக்கிறது.

உண்மை என்னவென்றால், வாய்விட்டுச் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்கிறவர்கள்... நீண்ட ஆயுளைப் பெறுகிறார்கள். கோபம், துக்கம், பொறாமை, மன அழுத்தம் மாதிரியான நெகட்டிவ் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, நம் தசை அதிக அழுத்தத்துக்கு உண்டாகி தோற்றத்தில் ஒரு முதிர்ச்சி உண்டாகிறது என்பதும், சிரிக்கும்போது அவை மிக மென்மையாக வேலை செய்வதால் தோற்றம் எப்போதும் இளமையாக இருக்கும் என்பதும் மருத்துவரீதியான உண்மை. இது புரியாமல் சிரிப்பைத் தடுக்க பலரும் பலவிதமான ஆயுதங்களோடு திரிகிறார்கள். ஸ்மைலி மீது செலுத்தப்பட்டதும் இதே வன்முறைதான்.

சிரிப்பது ஒருவரின் இயல்பு என்றால், அதைத் தடுக்கும்போது அவரின் மனநிலை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். வாழ்க்கை மீதான பிடிப்புக் குறைந்து எதிலும் ஆர்வமின்றி இயந்திரத்தனமாக மாறிப்போவார்கள்.

'சிரிக்கிறது ஒரு சாதாரண விஷயம். இதுக்கெல்லாம் நிம்மதி போச்சுனு அலுத்துக்கிட்டா எப்படி?’ என சிலர் கேட்கக்கூடும். சாதாரண விஷயங்களிலும், சின்னச் சின்ன விஷயங்களிலும்தான் ஒரு மனிதனின் முழுமையான சந்தோஷம் அடங்கியிருக்கிறது. சிலர் தன் இயல்புப்படியே நிறைய நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். நிறைய மனிதர்களுக்கு நடுவில் 'ஜேஜே’ என வாழ்வதுதான் அவர்களின் இயல்பாக இருக்கும்.

'படிக்கிறப்போ நான் எப்படி சந்தோஷமா இருந்தேன் தெரியுமா?’ என நிறையப் பேருக்கு கல்லூரிக் காலம் என்பது பசுமை நிறைந்த நினைவாக இருக்கிறதுதானே! எதையும் செய்யத் துணியும் அந்த வயது, யாருக்கும் கட்டுப்படாத அந்த மனசு, நண்பர்கள், உற்சாகம், சந்தோஷம் எல்லாமும் சேர்ந்து வாழ்க்கையை அனுபவிக்கச் செய்யும். அந்த மனசை எப்போதும் இழக்காமல் இருப்பது, எத்தனை தடை நிர்ப்பந்தம் வந்தாலும் பாதுகாப்பது... எப்போதும் இளமையாக இருக்க உதவும்.

விஜய் டிவி 'நீயா... நானா’ நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில், 'எப்படிப்பட்ட ஆணைக் கணவனாக அடைய விரும்புகிறீர்கள்..?’ என்று பேச வந்திருந்த பெண்களிடம் கேட்கப்பட்டது. அதில் ஒரு பெண், தனக்கு ஹீல்ஸ் அணிவதென்றால் ரொம்பப் பிடிக்கும் என்றும், அதை அனுமதிக்கும் நபரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார். கேட்பதற்கு சந்தோஷமாக இருந்தது. 'இதெல்லாம் ஒரு விஷயமா?’ என நாம் நினைக்கக்கூடும். ஆனால், அவருக்கு அதுவொரு முக்கியமான விஷயம். அதனால்தான் அதை அவர் குறிப்பிட்டுச் சொல்கிறார். ஸ்மைலிக்கு சிரிப்பு மாதிரி, அந்தப் பெண்ணுக்கு ஹீல்ஸ்.

இப்படி ஒவ்வொருவருக்கும் அபிமானமாக, மனசுக்கு இதமும் சந்தோஷமும் தருகிற சின்னச் சின்ன விஷயங்கள் நிறைய இருக்கும். அவையே ஒரு தொகுப்பாகி, நம் வாழ்க்கை இனிமையாக்க உதவுகின்றன.

கிடைக்கும் ஒரு நாளையும் ஈசல் எத்தனை உற்சாகமாக வாழ்ந்து கழிக்கிறது? ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாக நினைத்து நாமும் வாழத் தொடங்குவோம். இந்த வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க நினைக்கிறவர்கள், இயல்பை இழக்காமல் இருங்கள். அதுதான் ஆனந்தமும் நிம்மதியும்!

- நெருக்கம் வளரும்...