ம.மோகன்
படம்: ப.சரவணகுமார்
ஓவியங்கள்: ஹரன்

''ஊருக்குள்ள ரெண்டு பேர்கிட்டயாவது வம்புக்குப் போயி, திட்டு வாங்காம இருந்தா... என்னங்க அது தீபாவளி..?!''

- குண்டு கன்னங்கள் குலுங்கக் கேட்ட ஆர்த்தி வெடித்த, அவரின் தீபாவளி டும் டமீல் அனுபவங்கள் இங்கே...

'கண்டபடி தண்ணீரை செலவழிக்கக்கூடாது; மொட்டை மாடியில நிக்கக்கூடாது, வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வரக்கூடாது'னு கண்டிஷன் மேல கண்டிஷன் போடுற ஹவுஸ் ஓனர் ஜாதி... எப்பவுமே நமக்கு வில்லன்கள்தான். அப்படி எங்களைப் படுத்தின ஒரு ஹவுஸ் ஓனரை, ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு பழிவாங்கின தீபாவளியை, மறக்கவே முடியாது.

அப்போ பத்தாவது படிச்சுட்டிருந்தேன். ரோட்டுல யாரும் இல்லாத நேரமா பார்த்து, கண்ணாடி பாட்டிலை படுக்கை வாக்குல வெச்சு, ஹவுஸ் ஓனர் வீட்டு ஜன்னலை நோக்கி ராக்கெட்டை குறி வெச்சு, பத்த வெச்சுட்டோம் நெருப்பை. 3, 2, 1, 0... ஸ்ஸ்ஸ்ஸ்... சரியா இலக்கை அடைஞ்சுடுச்சு நம்ம ராக்கெட். ஆனா, ஒரு சத்தத்தையும் காணோம். கொஞ்சம் நேரம் கழிச்சு, படத்துல வடிவேல் வருவாரே... அந்த மாதிரி முகம் எல்லாம் புகை அப்பி வந்தாரு ஹவுஸ் ஓனர்.

பிறகென்ன... அடுத்த நாளே அந்த வீட்டுக்கு 'டாடா பை பை’தான்!

தீபாவளி அன்னிக்கு, தௌசண்ட் வாலாவுல இருந்து, ஆட்டம் பாம் வரைக்கும் தெகிரியமா வெடி போட்டு, பொண்ணுங்கள இம்ப்ரஸ் பண்ண மெனக்கெடுற பசங்க, எல்லா ஏரியாவுலயும் இருப்பாங்க. அப்போ நான் காலேஜுல படிச்சுட்டு இருந்தேன். பொண்ணுங்க எல்லாரும் சேர்ந்து எங்க வீட்டுக்கு முன்னால ஜாலியா வெடி வெடிச்சுட்டு இருக்க, அத்தனை ஃபிகர்களையும் பிராக்கெட் போடற பேராசையோட, எதிர்வீட்டுல இருந்து எழுந்து வந்தது ஒரு வாலுப் பட்டாளம். அதுல ஒருத்தன், ''இப்பப் பாருங்கடா!''னு ஒவ்வொரு வெடியா வாய்ல இருந்த சிகரெட் நெருப்புல பத்த வெச்சு தூக்கி எறிய... பொண்ணுங்க எல்லாரும் வாய் பிளந்துட்டோம்.

கடைசியில அவனே 'வாய்பிளக்கற’ மாதிரி ஆனதுதான் ஆன்ட்டி க்ளைமாக்ஸ்! வாய்ல வெச்சுருந்த 'தம்’ல வெடிக்கு நெருப்புப் பத்தவச்சவன், ஆர்வ கோளாறுல வெடிக்குப் பதிலா சிகரெட்டைத் தூக்கி எறிஞ்சுட்டான்!

என்ன நடந்திருக்கும்..? அதேதான்!

டைரக்டர் ஹரி சார் இயக்கின 'தாமிரபரணி’ படத்தோட ஷூட் காரைக்குடியில நடந்தது. அந்த வருஷ தீபாவளி, அங்கதான். கஞ்சா கருப்பு சாருக்கு, காரைக்குடி பக்கத்துலதான் சொந்த ஊரு. ''தீபாவளி அன்னிக்கு எல்லோருக்கும் எங்க வீட்ல இருந்துதான் சாப்பாடு. யார் யாருக்கு என்னென்ன வேணுமோ லிஸ்ட் கொடுத்துடுங்க!''னு பகுமானமா கேட்க, காரைக்குடி அயிட்டங்கள் அருமையா இருக்குமேனு பலகாரங்கள் தொடங்கி பிரியாணி வரைக்கும் ஆசை ஆசையா ஒவ்வொருத்தரும்... ஒவ்வொண்ணு எழுதிக் கொடுத்தோம்.

தீபாவளி விடிஞ்சுடுச்சு. மணி 10 ஆச்சு, 12 ஆச்சு, சாயங்காலம் 4-ம் ஆச்சு. கஞ்சா கருப்பு சார் வரல. போன் போட்டா, மொபைல் ஸ்விச்டு ஆஃப். கொலைப் பசியில பொறுமை இழந்து, 'பார்ட்டி அல்வா கொடுத்துடுச்சுடா'னு புலம்பிக்கிட்டே ஒருவழியா ஹோட்டல்ல ஆர்டர் கொடுத்துச் சாப்பிட்டோம்.

அடுத்தநாள் ஒண்ணுமே தெரியாத புள்ளை கணக்கா கஞ்சா கருப்பு சார் வர, ''என்னதாங்க ஆச்சு..?''னு எல்லாரும் டெரராக,

''ம்... ஒரு கல்யாணப் பந்திக்குப் போடுற அளவுக்கு அயிட்டங்களை குறிச்சுக் கொடுத்தீகனா... எப்புடி? இப்பத்தேன் மளிகை சாமான்களுக்கே ஆர்டர் கொடுத் திருக்கேன். ஷூட்டிங் முடியுறதுக்குள்ள எப்படியும் வந்துடும்''னு குற்ற உணர்ச்சியே இல்லாம அவர் சொல்ல, எல்லாரும் அடிக் கல... சிரிச்சுட்டோம்!