சாரதா நம்பி ஆரூரன்
ஓவியங்கள்: மணியம் செல்வன்

பாரம்பரியம் பேசும் பக்தி தொடர்

'தீபாவளி' என்ற சொல்லுக்கு... 'தீபங்களின் வரிசை’ என்பது நாமறிந்ததே! விழா நாட்களில் எல்லாம் தீபமேற்றி வழிபாடு செய்வது... தமிழர் மரபு. இப்படி விளக்கேற்றி வழிபடுவதன் தத்துவம்தான் என்ன..?

'அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் - நாரணர்க்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்’ என்று பூதத்தாழ்வார் போற்றுகின்றார். அன்பாகிய விளக்கில், ஆர்வமெனும் நெய்யூற்றி, மனமெனும் திரிபோட்டு, ஞான விளக்கை ஏற்றினால், அறியாமை அகலும் என்கிற நம் முன்னவர்களின் நம்பிக்கையைத்தான் இப்படி பாடுகிறார் பூதத்தாழ்வார்!

தீபாவளிக் கதைகள்!

தீபாவளி பற்றிய நம்பிக்கை கதைகள் மாநிலத்துக்கு மாநிலம் ஒவ்வொன்றாக கதைக்கப்படுகிறது. தீபாவளி அன்று வரிசையாக தீபங்களை ஏற்றும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. திருக்கார்த்திகை அன்றுதான் அதைச் செய்கிறோம் நாம். ஆனால், வடமாநிலங்களில் தீபத் திருவிழாவாகத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி மாதத் தேய்பிறை காலத்தின் 14-ம் நாளில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது; 'நரகா - சதுர்த்தசி ஸ்நானம்’ என்றும் வழங்கப்படுகிறது.

'பிராக்ஜோதிஸ்புரம்’ (இன்றைய அசாம் மாநிலத்தில் இவ்வூர் இருந்ததாக கூறப்படுகிறது) என்கிற ஊரை ஆண்டு வந்தவன் நரகாசுரன். 'இருள் சூழ்ந்த நகரம்’ என்பது இதன் பொருளென்றும் கூறப்படுகிறது.

தேவர்களுக்கு எண்ணற்ற வகையில் இன்னல் இழைத்து வந்த இவ்வரக்கன், தன்னைப் பெற்ற தாயைத் தவிர யாராலும் கொல்லப்படக் கூடாது என்கிற வரத்தையும் பெற்றிருந்தான். எனவே,நரகாசுரனின் தாயான பூமாதேவியை சத்தியபாமாவாக அவ தரிக்கச் செய்த விஷ்ணு, கிருஷ்ணாவதார காலத்தில் அவரை மணந்துகொண்டார். சத்தியபாமாவைத் தன் தேரோட்டியாக்கிக் கொண்டு நரகாசுரனை அழிக்கக் கிளம்பினார். பூமிதேவியான சத்தியபாமா, எதிரே நிற்பது தன்னுடைய மகனென அறியாமல், ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாளில் நரகாசுரனை அழித்ததாகவும், தன் மகன் இறந்த நாளை தீபத்திருநாளாகக் கொண்டாட வரம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. கண்ணபிரான் தன் சக்ராயுதத்தால் நரகாசுரன் கோட்டை, கொத்தளங்களைப் பிளந்தபோது எழுந்த ஓசையை எதிரொலிப்பதற்காகவே வெடிச் சத்தத்துடன் தீபா வளி கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில், நசிகேதனுக்கு உயிர்ப்பிச்சையும், சாவித்திரிக்கு புத்திர வரத்தையும் எமன் அளித்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை இல்லத்தின் வாசலில் விளக்கேற்றி வழிபட்டால், எமன் மகிழ்வான் என்று பவிஷ் யோத்திர புராணம் கூறுகிறது. கோவர்த்தன மலையைக் கண்ணன் குடையாக எடுத்து யாதவர்களைக் காத்த தினமாக பீகார் மக்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

மூன்றடி நிலம் கேட்டு வாமனனாக வந்த திருமால், வானத்தையும், பூமியையும் இரண்டடிகளால் அளந்து, மூன்றாவது அடியால் மகாபலியை காலால் மிதித்து ஆட்கொண்டபோது, அவன் திருமாலிடம், ஆண்டுக்கு ஒரு முறை தான் பூலோகத்துக்கு வர வேண்டும் எனவும், அந்த நாளில் பூவுலக மக்கள் புத்தாடை உடுத்தி, விளக்கேற்றி, கோலாகலமாகத் தன்னை வரவேற்க வேண்டுமென்று விண்ணப்பித்ததாகவும், அந்த நாளே தீபாவளித் திருநாள் என்றும் கூறப்படுவதுண்டு.

கங்கா ஸ்நான காரணம்!

சனீஸ்வர பகவானுக்கு உகந்தது, எள். தீபாவளியன்று அதிகாலையில் பலவகைக் கோள்களும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும்போது, சனிக்கோள், தனக்குப் பிடித்தமான எள்ளுக்குப் புத்துயிர் அளிப்பதாகவும், எனவே, தீபாவளியன்று அதிகாலையில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் நோயற்ற வாழ்வைப் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன் நீராடுவது, புனித நதியாகிய கங்கையில் நீராடுவதற்குச் சமம். அதனால்தான் தீபாவளியன்று 'கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று ஒருவரை ஒருவர் கேட்பது வழக்கமாயிற்று!

குபேரனும், தீபாவளியும்!

தீபாவளியன்று திருமகளின் அருளைப் பெற, குபேர பூஜை செய்வதுமுண்டு. லஷ்மி கடாட்சத்தை அருளும் குபேரனுக்கு, ராஜாதிராஜன் என்கிற பெயரும் உண்டு. மகாலட்சுமியின் அஷ்ட நிதிகளில் சங்க நிதி, பதும நிதி இருவரும் இவருடைய இருபக்கங்களில் வீற்றிருப்பார்கள். சிவனை வழிபட்டதன் பயனாக வட திசைக்கு அதிபதியாகும் பேற்றினைப் பெற்றவர் இவர். குபேரனை வழிபடுவதால் தனலட்சுமி, தைரியலட்சுமி அருளைப் பெறலாம்!

தீபாவளி நன்னாளில் தொடங்கப்படும் வேலைகள் வெற்றிகரமாக அமையும்; நல்ல வளமும் செல்வமும் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. வட இந்தியாவில் வாழும் வணிகப் பெருமக்கள், தீபாவளியன்று மகாலட்சுமியை வணங்கிப் புதுக்கணக்கைத் துவக்குவார்கள். நண்பர்களை அழைத்து அன்பளிப்புகளையும் வழங்குவார்கள். தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் வாழும் வட இந்தியர்களிடமும் இப்பழக்கம் காணப்படுகிறது.

கேதார கௌரி விரதம்!

தீபாவளி சமயத்தில், 'கேதார கௌரி விரதம்' என்கிற பெயரில் நோன்புத் திருவிழா ஒன்றும் சத்தமில்லாமல் சங்கமிக்கும். இது குறிப்பிட்ட சில பிரிவினருக்கு தீபாவளியை இரட்டைக் கொண்டாட்டமாக மாற்றி வைக்கும்!

விஜயதசமி தொடங்கி ஐப்பசி மாதத்தின் அமாவாசை வரை, 21 நாட்கள் 'கேதார கௌரி விரத’ நாட்களாகும். தீபாவளியன்றோ... அல்லது அதற்கு அடுத்த நாளோதான் அமாவாசை வரும். அந்த நாளில் இந்த கௌரி விரதம் முடிவுக்கு வரும். தீபாவளிக்கு இணையான உற்சாகத்தோடு இதுவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

கயிலையில் சிவபெருமானும் பார்வதியும் அமர்ந்திருக்க, முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கி ஆசி பெற்றனர். பிருங்கி என்ற முனிவர் கயிலைநாதனை மட்டும் வணங்கிச் சென்றார். சக்தியை வணங்காததால் சினம் கொண்ட உமையம்மை, கயிலைநாதனிடம் முறையிட்டார். பிருங்கி முனிவர் வீடு பேற்றை மட்டுமே விழைவதால், தன்னை மட்டுமே வணங்குவ தாகக் கயிலைநாதன் கூறினார். பிருங்கி முனிவர் அடுத்த முறை வழிபட வந்தபோது, உமையவள் பெருமானுடன் மிகநெருக்கமாக அமர, முனிவரோ ஒரு வண்டின் வடிவெடுத்து சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார்.

சிவனுடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்ள வேண்டுமென்ற வைராக்கியத்துடன், புரட்டாசி மாதம் வளர்பிறை பத்தாம் நாள் முதல் (விஜயதசமி முதல்), ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி வரை (தீபாவளி வரை) சிவனை எண்ணி கடுமையான தவத்தை உமையவள் மேற்கொண்டாள். அவள் தவத்தைக் கண்டு மகிழ்ந்த கயிலைநாதன், தனது உடலின் இடது பாதியைப் பார்வதி தேவிக்கு அளித்தான். தோடுடைய செவியனாக, உமையரு பாகனாக, அர்த்த நாரீஸ்வரராக அருள் செய்தான்.

இறைவியே மேற்கொண்ட இவ்விரதத்தைக் 'கேதார கௌரி விரதம்’ என்பர். 'கேதாரம்’ என்றால் வயல். 'கௌரி’ என்ற பார்வதி, வயல்வெளியில் தவமிருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால், இவ்விரதம் 'கேதார கௌரி விரதம்’ என்றழைக்கப்படுகிறது. இல்லற வாழ்வு இனிமை பெறவும், கணவரின் நீண்ட ஆயுள் வேண்டியும், மாங்கல்ய பலத்துக்காக வும் மங்கையர் கேதாரீஸ்வரரை நினைந்து மேற்கொள்ளும் விரதமே, கேதார கௌரி விரதம்.

விரதம் மேற்கொள்வது எப்படி?

21 நாளும் ஒரு பொழுது பால், பழம் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிப்பார்கள் பெண்கள். 21-ம் நாள் அன்று ராகு காலம் முடிந்ததும், தலை வாழை இலை போட்டு அதில் அரிசி பரப்பி, தண்ணீர் நிரப்பிய கலசம் வைத்து, அதன்மேல் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து அதனைச் சுற்றி மாவிலை மற்றும் பூ சுற்றி அலங்கரிக்க வேண்டும். இலையில் 21 எண்ணிக்கையில் ஆன வெற்றிலை, பாக்கு, கயிறு கட்டிய மஞ்சள் கிழங்கு, பழங்கள், இனிப்புகள் வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் மஞ்சள்கிழங்கை ஆண்களும் பெண்களும் கட்டிக்கொள்வார்கள்.

தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
- கொண்டாடுவோம்...