இரா.முத்துநாகு

குழந்தைகள், காலண்டரைத் திருப்பி, 'தீபாவளிக்கு இத்தனை நாள் இருக்கிறது' என்று கணக்குப் பார்க்க, புதுமணத் தம்பதிகள் 'தலை தீபாவளி’ அழைப்புக்குக் காத்திருக்க, ஜவுளிக் கடைகளிலும், பட்டாசுக் கடைகளிலும் கூட்டம் மொய்க்க... நாடே தயாராகிக் கொண்டு இருக்கிறது தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு!

இந்தப் பரபரப்பு எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள்... தமிழ்ச் சமுதாயத்தின் ஓர் அங்கமான மலைவாழ் பளியர் இன மக்கள். அவர்களின் பாரம்பரியத்தில் 'தீபாவளி' என்கிற குறிப்பே இல்லை!

ஆச்சர்யம் பொங்க, ஆராய்ச்சியில் இறங்கினோம்...

மலைகளுக்குச் சொந்தக்காரர்களான பளியர்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் வருசநாடு, கொடைக்கானல், பழனி என 50-க்கும் மேற்பட்ட ஊர்களில் வசிக்கிறார்கள். ஒரு காலத்தில் மலை இடுக்குகள், மரப்பொந்துகளில் குடியிருந்து, வனங்களில் கிடைக்கும் கிழங்கு, தேன் இவற்றை உண்டு வாழ்ந்தார்கள். தற்போது அரசு கட்டிக் கொடுத்துள்ள இலவச வீடுகளில் குடியமர்ந்து, நாகரிக (!) மக்களுடன் கலந்துவிட்டார்கள். இருந்தாலும் தங்களது காலாசாரத்தை இழக்காமல், மனதில் வனவாசம் சுமக்கிறார்கள்.

கொடைக்கானலில் இருந்து பழனி செல்லும் வழியில் உள்ள கடமன்ராவு, கோம்பைக்காடு, செம்பராங்குளம், சவரிகாடு கிராமங்களில் முழுக்க முழுக்க பளியர் இன மக்களே இருக்கிறார்கள். ஊர் எல்லையில் உயரமான சிறுமேடை. அதன் மீது நான்கு நடுகற்கள், முக்கோண வடிவிலான குச்சி, சுற்றிலும் பிரம்பு மற்றும் மூங்கிலான தடுப்பு. அந்த நடுகற்களுக்கு சிவப்பு துணி சுற்றப்பட்டுள்ளது. இதுதான் பளியர் சமூகத்தின் குலதெய்வமான பளிச்சியம்மன் மற்றும் கோயில். இந்த தெய்வத்தைத் தவிர வேறு தெய்வ வழிபாடோ, பண்டிகைகளோ இல்லை.

கோம்பைக்காடு ஊர்ப் பெரியவர் மோலையனிடம், ''என்ன தாத்தா தீபாவளி வந்துருச்சா..?!'' என்றோம்.

பொக்கை வாயிலிருந்து எச்சில் தெறிக்கச் சிரித்தவர், ''அடப் போங்கய்யா நீங்க வேற..! இந்த மலைப் பளியங்களுக்கு... பளிச்சியம்மனைத் தவிர வேறெதுவும் தெரியாது'' என்று தன் எழுபது வயது தேகத்தை நிமிர்த்தி அமர்ந்தார்.

''மலைக்குள்ள இருந்த காலத்துலயும் சரி... பின்னால தோட்டம், காடுகள்ல மொதலாளிகள அண்டித் தோட்ட வீடுகள்ல தங்கி இருந்த காலத்துலயும் சரி... எங்க பாட்டன், பூட்டனோ, நாங்களோ தீபாவளி கொண்டாடினது கெடையாது. வெடி வெடிக்குறது, புதுத் துணி கட்டுறதெல்லாம் பழக்கத்துல இல்ல'' என்றவர்,

''வெளியூர்கள்ல கலப்பு கடைகள்ல (ஹோட்டல்) வேலை பார்க்குற எங்க எளவட்டப் பையனுக, தீபாவளிக்குப் 'போனஸ்’ வாங்கி வந்து வெடி போடுறதை ரெண்டு, மூணு வருசமா பாக்குறேன். முந்தியெல்லாம் தோட்ட வேலைக்குப் போனா... கஞ்சி மட்டுந்தேன் ஊத்துவாக. இப்ப வெளிக்கௌம்பி வேலைக்குப் போற பயலுகளுக்கு கையில காசும் கெடைக்குது. அதை எளசுக நெனச்ச மாதிரி

செலவழிக்குதுக''

- சலிப்புத் தெரிகிறது குரலில்.

''அதுக்காக நாங்க கொண்டாட்டமே தெரியாத பயலுகனு நெனச்சுராதீக. கோடையில (சித்திரை) வர்ற பௌர்ணமிக்கு பளிச்சியம்மனுக்கு சாமி கும்புடு நடக்கும். அப்ப மட்டும் வீட்டுக்கு வீடு துணிமணி எடுத்துக் கட்டிக்கிருவோம். தை மாத பொறப்பை வரவேத்து, பளிச்சியம்மனை ஆத்து தண்ணியில கழுவி, புதுத்துணி கட்டுவோம். இதைத் தவிர வேறெந்தக் கொண்டாட்டமும் எங்களுக்குக் கெடையாது.

தீபாவளி அன்னிக்கு கொடைக்கானலுக்கு கார், மோட்டார் பைக்குல போறவக 'அப்பி தீபாவளி (ஹேப்பி தீபாவளி)’னு கத்தி கும்மரச்சம் போட்டுக்கிட்டே போறத... வருசா வருசம் எங்க சனங்க பார்த்துக்கிட்டுத்தேன் இருக்குதுக. ஆனாலும், எங்களுக்கு தீபாவளி கொண்டாடணும்னு நெனப்பு வந்ததில்ல!'' என்றார் உறுதியாக.

பளியர்களின் தாலியான கருகுமணியை வாயில் கடித்தபடி பேசிய நாகு, ''முந்தி எல்லாம் ஆதிவாசிகளுக்காக நடத்துற பள்ளிக்கூடத்துக்கு வாத்தியார்மார் எப்பவாச்சும் வருவாக. இப்ப பரவாயில்ல. பளியங்க குடியில இருந்து செல புள்ளைக காலேசுல படிக்குதுக. அதுக தீபாவளிக்கு லீவு விட்டிருக்காகனு ஊருக்கு வருங்க. ஆனா, அதுககூட தீபாவளி கொண்டாடணும்னு ஆசப்படாதுக. ரெண்டு, மூணு வருசமா ஏதோ இயக்கத்துக்காரங்க வந்து, சின்னப் புள்ளைகளுக்கு இனிப்பு, வெடி எல்லாம் கொடுத்துட்டுப் போனாக. எங்களையும் தீபாவளி கொண்டாட வெச்சுடுவாக போல!''

- சிரிப்புத் தாளவில்லை நாகுவுக்கு.