சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

நட்சத்திர தம்பதிகள்!

நட்சத்திர தம்பதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நட்சத்திர தம்பதிகள்!

வி.ஐ.பி வெடிங்

புதுப்பெண், புதுமாப்பிள்ளை களையுடன் இருக்கும் ஸ்டார் தம்பதிகளுடன் ஒரு ஸ்வீட் சந்திப்பு...

நிஷா - கணேஷ் வெங்கட்ராமன்

நட்சத்திர தம்பதிகள்!

‘‘வேந்தர் டி.வி-யில ‘வேந்தர் வீட்டுக் கல்யாணம்’ நிகழ்ச்சியை நானும் வெங்கட்ராமனும் தொகுத்து வழங்கி, இப்போ நாங்களே தம்பதியா நிக்கிறோம்!’’

- வெட்கம் படர ஆரம்பித்தார் நிஷா...

‘‘ஆரம்பத்தில் நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ். தினமும் ஒண்ணா சேர்ந்து டான்ஸ் கிளாஸுக்குப் போவோம். அடிக்கடி லாங் டிரைவ் போவோம். ஒருமுறை கிறிஸ்துமஸுக்கு அப்படி ரெண்டு பேரும் லாங் டிரைவ் போனப்போ, ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டோம். முதல் முதலா ரெண்டு பேரும் சேர்ந்து மொபைல்ல ஒரு செல்ஃபி எடுத்துக்கிட்டோம். அப்புறம், பக்கத்துல இருந்த ஒரு சர்ச்சுக்குப் போனோம். அங்க ப்ரே பண்ணி முடிச்சதும் கணேஷ் எங்கிட்ட புரொபோஸ் பண்ணிட்டார். எனக்கும் அவரைப் பிடிக்கும். இருந்தாலும், அழுகைதான் வந்தது. சர்ச்ல இருந்து வெளியவந்து, நான் எங்க வீட்டுக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். அவரும் அவங்க வீட்டுக்குப் போன் பண்ணிச் சொன்னார். ரெண்டு வீட்டிலும் எங்களைப் பத்தி தெரியும் என்பதால, க்ரீன் சிக்னல் கிடைச்சிருச்சு.

உடனடியா நிச்சயதார்த்தம். எட்டு மாசம் கழிச்சுக் கல்யாணம். அந்த இடைப்பட்ட நாட்களில் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டோம்!’’ என்று நிஷா பூரிக்க,

‘‘என் சொந்தங்கள் பலரும் வெளிநாடுகளில் இருக்கிறதால, அவங்களால நிச்சயதார்த்தத்துக்கு வரமுடியல. ஆனா, அஞ்சு வயசுக் குழந்தையில் இருந்து பெரியவங்க வரை அவங்க எல்லோரும் எனக்கு வாழ்த்துச் சொல்ற வீடியோவை ரெடி பண்ணி, எனக்கு நிச்சயதார்த்த கிஃப்ட்டா கொடுத்து சர்ப்ரைஸ் ஆக வெச்சாங்க நிஷா... விஸ்காம் ஸ்டூடன்ட்டாச்சே! எங்க ரிசப்ஷன், சென்னை வெள்ளத்தப்போ நடந்தது. நிஷாவுக்குப் பிடிச்ச பாடல்களுக்கு என் ஃப்ரெண்ட் ஜான் பிரிட்டோ டீமை சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேரை, வந்திருந்த கெஸ்ட்ஸோட சேர்ந்து ஆடவெச்சு, ‘எப்படி என் கிஃப்ட்?!’னு நிஷாகிட்ட கேட்க, பொண்ணுக்கு செம சந்தோஷம்!’’ என்று கண்ணடிக்கிறார் வெங்கட்ராமன்.

‘‘ஃப்ரெண்ட்ஸ், காதலர்கள் ஆகிறது இயல்புதான். ஆனா, காதலர்கள் ஆன பின்னும், கல்யாணம் செய்துகிட்ட பின்னும் ஃப்ரெண்ட்ஸா இருக்கிறதுதான் சிறப்பு!’’ - க்யூட் மெசேஜ் சொல்கிறார்கள் நிஷாவும் வெங்கட்ராமனும்!

ஷிவதா நாயர் - முரளி கிருஷ்ணா

நட்சத்திர தம்பதிகள்!

‘‘சத்தமே இல்லாம திடீர்னு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களேனு பலரும் கேட்டாங்க. நல்ல விஷயத்தை தள்ளிப்போடக்கூடாதுதானே?!’’

- சந்தோஷமாக ஆரம்பித்தார் ‘நெடுஞ்சாலை’ நாயகி ஷிவதா நாயர், தன் கல்லூரித் தோழன் முரளி கிருஷ்ணாவை கைப்பிடித்த பூரிப்பில்!

‘‘நான் திருச்சியில பிறந்து, சென்னையில் ஸ்கூல் படிச்சு, கேரளாவில் செட்டில் ஆன பொண்ணு. அதனால தமிழ் நல்லா பேசுவேன். முரளிக்குத் தமிழ் ஓரளவுக்குத்தான் தெரியும். நாங்க ரெண்டு பேரும் கேரளாவுல ஒரு இன்ஜினீயரிங் காலேஜ்ல, வேற வேற கிளாஸ்ல படிச்சோம். காலேஜ்ல எங்கிட்ட புரொபோஸ் பண்ற பசங்களை எல்லாம் திட்டி அனுப்பிட்டே இருப்பேன். அப்படித்தான் முரளியும் எங்கிட்ட திட்டு வாங்கினார். இருந்தும் விடாம, `வேலன்டைன்ஸ் டே’-க்கு எனக்கு ஒரு கார்டு கொடுத்தார். அதை தூக்கி வீசிட்டு, ‘என் பேரன்ட்ஸ்கிட்ட சொல்லி சம்மதம் வாங்கிட்டு அப்புறம் கார்டு கொடுங்க’னு கடுப்படிச்சேன். பார்த்தா... பையன் அடுத்த நாள் நெஜமாவே எங்க வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொல்லியிருக்கார். ‘நல்லா படிச்சு, நல்ல வேலையோட வாங்க; அப்புறமா இதைப்பத்தி பேசிக்கலாம்’னு என் அப்பா, அம்மா சொல்லி அனுப்பியிருக்காங்க. அவரோட அந்த ஆட்டிட்யூட் எனக்குப் பிடிச்சிருந்தது. காலேஜ்ல நான் வைஸ் சேர்மன், அவர் ஸ்டூடன்ட்ஸ் கோ-ஆர்டினேட்டர் என்பதால, கல்ச்சுரல் ஈவன்ட்களில் ஒண்ணா சேர்ந்து வேலை பார்த்தப்போ, காதல் பூத்திருச்சு. அது கல்யாணம் வரை வந்திருச்சு!’’ என்று ஷிவதா புன்னகைக்க,

‘‘எங்க லவ்வுக்கு ரெண்டு குடும்பமுமே சம்மதம் சொல்லிட்டாலும், ஒண்ணா  சேர்ந்து எங்கேயும் வெளியில் போனதில்லை. அவ்வளவு ஏன்... இதுவரை ஒரு ‘ஐ லவ் யூ’கூட சொல்லிக்கிட்டதில்லை. போன்ல மட்டும்தான் பேசிக்குவோம். காலேஜ் முடிச்சதும் ஷிவதா மாடலிங் செய்தாங்க. நான்தான், சினிமாவுக்கு அவங்களை லைன் திருப்பினேன். மலையாளத்தில் பத்து இயக்குநர்கள் இயக்கிய ‘கேரளா கஃபே’ படத்தில் அறிமுகமானாங்க. அடுத்து பாசில் சார் இயக்கத்தில் ‘லிவிங் டுகெதர்’ படத்தில் ஹீரோயின் ரோல். அப்புறம் ‘நெடுஞ்சாலை’. நானும் மூணு மலையாளப் படங்களில் நடிச்சிருக்கேன். கூடவே, பிசினஸ், ஸ்கிரிப்ட், டைரக்‌ஷன்  பரபரப்பா போயிட்டிருந்த வாழ்க்கை, ஷிவதா இணைஞ்சதுக்கு அப்புறம் ஸோ பியூட்டிஃபுல் ஆயிருச்சு!’’ என்கிறார் முரளி கிருஷ்ணா காதல் மனைவியைப் பார்த்து.

‘‘கல்யாணத்துக்கு மறுநாளே நான் ஷூட்டிங்குக்கு கிளம்பிட்டேன். இப்போ ‘ஜீரோ’, ‘வல்லவனுக்கு வல்லவன்’ படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். இந்த சுதந்திரம்தான், முரளி எனக்குக் கொடுத்திருக்கிற பெரிய பரிசு!’’ எனும் ஷிவதாவை, ரசித்துச் சிரிக்கிறார் முரளி.

அஞ்சனா - ‘கயல்’ சந்திரன்

நட்சத்திர தம்பதிகள்!

‘கயல்’ படத்தின் நாயகன் சந்திரனுக்கும், சன் மியூசிக் அஞ்சனாவுக்கும் நிச்சயதார்த் தம் முடிந்து, மார்ச் மாதம் நடக்கவுள்ள திருமணத்துக்காகக் காத்திருக்கிறார்கள்.

‘‘ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியிலதான் சந்திரனை முதன் முதலா கவனிச்சுப் பார்த்தேன். ஆனா, அவர் நாங்க ரெண்டு பேரும் சூரியன் எஃப்.எம்-ல வேலை பார்த்துட்டு இருந்தப்பவே என்னைக் ஓரக்கண்ணால் பார்த்துட்டு இருந்திருக்கார். அந்த விஷயம் எனக்குத் தெரியாமப் போச்சு. ‘கயல்’ படம் பார்த்துட்டு, ‘ரொம்ப நல்லா இருக்கு’னு அவருக்கு ட்வீட் பண்ணினேன். அப்புறம் ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். திடீர்னு ஒருநாள் எங்கிட்ட, ‘நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா அஞ்சனா?’னு கேட்டுட்டாரு. எங்க வீட்ல கேட்டேன். சினிமாவில் இருந்தாலும், நல்லா படிச்சிருக்கார், எப்படியும் சமாளிச்சிடுவார்னு நம்பி, கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. அவங்க வீட்டுலயும் சந்தோஷமா சம்மதம் சொல்ல, உடனடியா நிச்சயதார்த்தத்தை முடிச்சுட்டோம். இப்பவே அவங்க வீட்டுல நானும் ஒருத்தி, எங்க வீட்டுல அவரும் ஒருத்தர் ஆகிட்டோம்!’’ என்று கல்யாணப்பொண்ணு கலகலக்க,

‘‘அஞ்சனாவை கம்பேர் பண்ணும் போது, எனக்கு டிவிட்டர்ல ஃபாலோயர்ஸ் குறைவுதான். ஆனா, எங்க ரெண்டு பேருக்கும் வந்த வாழ்த்துகளைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தோம். நிச்சயதார்த் தத்துக்கு நான் கொடுத்த மோதிரம், அஞ்சனாவுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சமீபத்தில் அவங்க எனக்கு ஒரு ஸ்மார்ட்ஃபோன் வாங்கிக் கொடுத்தாங்க. முகூர்த்தநாளுக்காக சந்தோஷமா காத் துட்டு இருக்கோம். அஞ்சனா இயல்பா காம்ப்யர் செய்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும். திருமணத்துக்குப் பிறகும் அவங்க நிச்சயமா அதைக் கன்டின்யூ பண்ணு வாங்க!’’ என்கிறார் சந்திரன் உற்சாகமாக.

‘‘எங்களுக்குள்ள ஒளிவுமறைவு என்பதே இல்லை. அதனாலதானோ என்னவோ, லவ் பண்ண ஆரம்பிச்சு கொஞ்சம் மாசமே ஆகியிருந்தாலும், பல வருஷமா காதலிக்கிற ஃபீல்!’’ எனும்போது, சேர்ந்து புன்னகைக்கிறார்கள் சந்திரனும் அஞ்சனாவும்!

சாந்தனு - கீர்த்தி

நட்சத்திர தம்பதிகள்!

‘‘நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். ஸ்கூல், காலேஜ்ல ஒண்ணா சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கோம். இப்போ வாழ்க்கையிலும் ஒண்ணு சேர்ந்துட்டோம்!’’ - புதுப்பெண் கீர்த்தியின் குரலில் கொஞ்சல்.

‘‘சாந்தனு, எங்கம்மா ஜெயந்திகிட்ட டான்ஸ் கத்துக்கிட்டாரு. ரெண்டு குடும்பமும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். நாலு வருஷத்துக்கு முன்னாடி ரகுராம் மாஸ்டர் ஒருங்கிணைத்த ஒரு நடன நிகழ்ச்சிக்காக நானும் சாந்தனுவும் ஆடினோம். அப்போதான், சாந்தனு எங்கிட்ட புரொபோஸ் செய்தார். ‘எங்க வீட்டுல கேளுங்க’னு சொன்னேன். அடுத்த நாளே எங்க வீட்டுக்குப் பொண்ணுகேட்டு வந்துட்டார். எங்கப்பா, யோசிக்க கொஞ்சநாள் டைம் கேட்டார். அதுக்குள்ள அவர் வீட்டுலயும் சம்மதம் வாங்கி, எனக்கு எந்த டென்ஷமும் இல்லாம செஞ்சுட்டார். நிச்சயம் முடிஞ்சு, கல்யாணத்துக்குக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் இடைவெளி இருந்தது. திகட்ட திகட்ட போன்ல பேசி, நான் அவருக்கு ஷூ, வாட்ச், டிரெஸ்னு கிஃப்ட் பண்ணியது, அவர் எனக்கு டெடி பியர், பெர்ஃப்யூம்னு கிஃப்ட் கொடுத்ததுனு, ஹேப்பி டேஸ்! திருமணத்துக்கு அவர் வாங்கித்தந்த டைமண்ட் ரிங், ரொம்ப ஸ்பெஷல் எனக்கு!” என்று சிலிக்கிறார், கீர்த்தி.

சாந்தனு, ‘‘வீட்டில் சம்மதம் சொன்னதுக்கு அப்புறம்கூட, நாங்க தனியா வெளிய எங்கேயும் போனது கிடையாது. ஃப்ரெண்ட்ஸ் இல்லைன்னா ஃபேமிலிகூடதான் போவோம். இப்பக்கூட அப்படித்தான். கல்யாணத்துக்கு முன்னும் பின்னும் என் கரியருக்கு ஃபுல் சப்போர்ட்டா இருக்காங்க. ‘மானாட மயிலாட’ சீஸன் 10 வரைக்கும் காம்பியர் பண்ணினாங்க. இப்போ வித்தியாசமான நிகழ்ச்சிக்காகக் காத்திட்டு இருக்காங்க. லவ்வரா இருந்த மாதிரியேதான் மனைவி ஆன பின்னும் இருக்காங்க கீர்த்தி!’’ என்கிறார் அன்புப் புன்னகையுடன்.

‘‘கல்யாணம் எங்களுக்குள்ள எந்த ஃபார்மாலிட்டீஸையும் கொண்டுவந்துடல. இப்பவும் நாங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்!’’ என்று கணவருடன் கைகோக்கிறார் கீர்த்தி!

அருள்நிதி - கீர்த்தனா

நட்சத்திர தம்பதிகள்!

‘‘அம்மா - அப்பாவுக்கு நான் ரொம்பப் பாசமான பையன். நான் யாரையாவது லவ் பண்ணி, அந்தப் பொண்ணு என்னோட பேரன்ட்ஸை ஒத்துழைச்சுப் போவாங்களானு தெரியாது. அதனால அவங்க பார்க்கிற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவுல இருந்தேன். எங்க வீட்டுக்கு ஏத்த பொண்ணா கிடைச்சாங்க, கீர்த்தனா. அவங்க கிடைக்க நாங்க கொடுத்து வெச்சிருக்கணும்!’’ என்று அருள்நிதி சொல்ல, ‘‘கொஞ்சம் ஓவர்ல!’’ என்று வெட்கிச் சிரிக்கிறார் கீர்த்தனா.

‘‘எங்க நிச்சயதார்த்தம் முடிந்த சமயத்தில், குடும்பத்தோட இவர் நடிச்ச ‘டிமான்டி காலனி’ படத்துக்குப் போனோம். அதுல நாடி ஜோதிடர் இவரைத் திட்டுற ஸீனைப் பார்த்து, எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம். அதுலயும் அந்த ஸீன்ல அவரோட எக்ஸ்பிரஷன்ஸ்... இப்பவும் சிரிப்பை அடக்க முடியலை (சிரிக்கிறார்). எங்க கல்யாணம் முடிந்த சமயத்துல கிரீஸ், ஸ்பெயின், பாரீஸுக்குப் போனோம். அரேஞ்சுடு மேரேஜ் கப்பிள்ஸ், லவ்வர்ஸ் ஆனது அங்கதான். அங்க இருந்து திரும்பின உடனேயே, இவர் ஷூட்டிங்கில் பிஸி ஆயிட்டார். ஆர்க்கிடெக்சர் கிராஜுவேட் ஆன நானும், இப்போ வேலைக்குப் போயிட்டு இருக்கேன். அதனால, சண்டேதான் எங்க வீட்டுல ஹேப்பி டே!’’ என்கிறார் கீர்த்தனா.

‘‘கீர்த்தனாவோட அப்பா நீதிபதிங்கிறதால, கொஞ்சம் பயந்து பயந்தேதான் கிண்டல் பண்ணணும்’’ என அருள்நிதி கிண்டல் செய்ய, அன்பாக முறைக்கிறார் கீர்த்தனா. ‘‘சும்மா சொன்னேங்க. அவங்க வீடும் சரி, எங்க வீடும் சரி... எப்பவும் கலகலனுதான் இருக்கும். என்னோட படத்துக்கு ஃபர்ஸ்ட் கமென்ட்ஸ் கொடுக்கிறதுதான் கீர்த்தனாதான். ஆனா, நடுநிலையான கமென்ட்ஸ்தான் கொடுப்பாங்க. சினிமாவில் இன்னும் நான் கத்துக்க வேண்டிய விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்வாங்க. அவங்களுக்கு என் ஷூட்டிங் ஸ்பாட்க்கு வரணும் என்பது ஆசை. அதுக்கான வாய்ப்பு இன்னும் அமையல. சீக்கிரமே அவங்க ஆசையை நிறைவேற்றணும்!’’ என்று மனைவிக்கு வாக்குறுதி கொடுக்கிறார், அருள்நிதி. முகம் பிரகாசமாகிறார் கீர்த்தனா!

- கு.ஆனந்தராஜ்

படங்கள்: கே.ராஜசேகரன், தி.குமரகுருபரன்