சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

`ஆஹா’ கல்யாணம்... 55 கோடி!

`ஆஹா’  கல்யாணம்... 55 கோடி!
பிரீமியம் ஸ்டோரி
News
`ஆஹா’ கல்யாணம்... 55 கோடி!

ரிச் வெடிங்

கேரளாவில், 55 கோடி ரூபாய் செலவில் நடந்த தொழிலதிபர் ரவி பிள்ளை மகளின் திருமணம்தான் கடந்த ஆண்டில் நடந்த கல்யாண ஹைலைட். இவர் தன் மகளின் திருமணத்தை முன்னிட்டு பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவியும் செய்துள்ளார் என்பது, குட் நியூஸ்! 

கடந்த 2014-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் 988-வது பணக்காரராக ரவி பிள்ளையைத் தேர்வு செய்தது. இவர் இந்தியாவைப் பொறுத்தவரை லிஸ்ட்டில் 30-வது பணக்காரர். வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை லிஸ்ட்டில் மிகவும் சக்தி வாய்ந்த 4-வது இந்தியப் பிரமுகர். கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தற்போது 62 வயதாகும் ரவி பிள்ளை - கீதா தம்பதிக்கு கணேஷ், ஆர்த்தி என இரண்டு பிள்ளைகள். ஆர்த்திக்கும், மருத்துவர் ஆதித்யா விஷ்ணுவுக்கும் இடையே நடந்த திருமணம்தான், அந்த 55 கோடி ரூபாய் பட்ஜெட் திருமணம்!

`ஆஹா’  கல்யாணம்... 55 கோடி!

திருமணத்துக்காக கொல்லம் ஆஷ்ரம் மைதானத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 3.50 லட்சம் சதுரடியில் பிரமாண்டமான செட் போடப்பட்டது. ‘பாகுபலி’ பிரமாண்ட செட்டிங்ஸில் நம்மை அசத்திய ஆர்ட் டைரக்டர் சாபு சிரில், தன் மூன்று மாத உழைப்பில் இந்த விஸ்வரூப செட்டை எழுப்பினார். மும்பையில் முதலில் களிமண்ணால் மாதிரியாக உருவாக்கப்பட்ட இந்த செட்கள், பின் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் இணைக்கப்பட்டன. இதற்கே 40 நாட்கள் பிடித்துள்ளது. திருமண செட்டுக்கு மட்டுமே ஆன செலவு, 23 கோடி. அதோடு 30 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வகையில் பிரமாண்ட பந்தலும் போடப்பட்டிருந்தது. மணமேடை, விரிந்த தாமரை இதழ் போல அசத்தல் அழகில் மலர்ந்திருந்தது.

`ஆஹா’  கல்யாணம்... 55 கோடி!

சவுதி, அமீரகம், குவைத், கத்தார் அரச குடும்பத்தினர் பலர் தனி விமானங்களில் திருமணத்தில் பங்கேற்க வந்திருந்தனர். மற்றும் ஏராளமான வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் திருமணத்தில் பங்கேற்றனர். ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள், மம்மூட்டி உள்ளிட்ட கேரள நட்சத்திரங்களும் திருமணத்தில் விருந்தினர்கள். நடிகைகள் மஞ்சு வாரியர், ஷோபனா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள், கர்னாடக இசை புகழ் காயத்ரியின் பக்தி இசை கச்சேரி என... ரிச் என்டர்டெயின்மென்ட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

`ஆஹா’  கல்யாணம்... 55 கோடி!

திருமணப் பாதுகாப்புப் பணியை கேரள போலீஸாருடன் இணைந்து தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருமண விருந்தில் உள்நாட்டு உணவு வகைகளுடன் வெளிநாட்டு உணவுகளும் இடம் பெற்றிருந்தன. இந்த திருமணத்துக்காக மொத்தம் 55 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

`ஆஹா’  கல்யாணம்... 55 கோடி!

‘‘என் மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்திக்காட்ட வேண்டுமென்பது மட்டும் எனக்கு நோக்கமில்லை. இந்த திருமணத்தையொட்டி பல்வேறு மக்கள் நலப்பணிகளையும் மேற்கொண்டுள்ளேன். முக்கியமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டளைகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரூபாய் 10 கோடிக்கு மேல் நிதியுதவி அளித்துள்ளேன்!’’ என்கிறார் பூரிப்புடன் ரவி பிள்ளை.

செம கெத்து கல்யாணம்தான்!

- பொன்.விமலா

படங்கள் உதவி: பி.முரளிகிருஷ்ணன்

(மாத்ரூபூமி ஸ்டார் அண்ட் ஸ்டைல் )