சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

திருமணத்தில் `டிஜே’... ஸ்டார்ட் மியூசிக்!

திருமணத்தில் `டிஜே’...  ஸ்டார்ட் மியூசிக்!
பிரீமியம் ஸ்டோரி
News
திருமணத்தில் `டிஜே’... ஸ்டார்ட் மியூசிக்!

மியூசிக்

திருமணம் என்பது மணமக்களுக்கான திருவிழா மட்டுமல்ல... திருமண விழாவுக்கு வருகை தருபவர்களுக்கும் அது ஒரு கொண்டாட்டமாக அமைய வேண்டும் என்பதுதான் கல்யாண வீட்டினரின் விருந்தோம்பல் விருப்பமாக இருக்கிறது. அதற்கான வழிகளாக உருவாக்கப்பட்டவைதான் திருமணங்களில் மேள கச்சேரிகள் முதல் பாட்டுக் கச்சேரிகள் வரை. கர்னாடக சங்கீதம், லைட் மியூசிக் என்று மாறி வந்த ரசனை, இன்று `டிஜே’ (DJ - Disc Jockey) இசையை நோக்கித் திரும்ப ஆரம்பித்திருக்கிறது.

திருமணத்தில் `டிஜே’...  ஸ்டார்ட் மியூசிக்!

`டிஜே’ ஸென், 10 ஆண்டுகளாக இந்த ஃபீல்டில் இருப்பவர். ‘‘கல்லூரி நாட்களிலேயே பகுதி நேரமா பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நிகழ்ச்சிகளில் டிஸ்க் ஜாக்கியா வேலை பண்ணியிருக்கேன். ரோட்ராக்ட் கிளப்பில் வாலன்டியரா இருந்தப்போ, சில நண்பர்கள் இதே லைனில் அமைய, ஒருவரின் திறனை மற்றொருவர் மெச்சி குழுவா செயல்பட்டு, இன்னிக்கு சென்னையில் பலருக்கும் ஃபேவரைடான `டிஜே’ சர்வீஸாக (my wedding DJ) உருவாகியிருக்கோம்.

எங்கள் டீமின் பலம், நாங்க ஆறு `டிஜே’க்கள்தான். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்னு அனைத்து ரக இசைகளும், பல மொழிகளும் எங்களுக்கு அத்துப்படி. தவிர, எங்க குரூப்பில் ஷோ - ஸ்டீலர்ஸ் (show stealers) ரெண்டு பேர் இருக்காங்க. ‘தோல்’ நிதேஷ், டான்ஸ் ஃப்ளோரில் அலுப்பு ஏற்படும்போது குபீர்னு டோலக்குடன் என்ட்ரி கொடுத்து, `டிஜே’ வாசிக்கும் இசையின் ஸ்ருதிக்கு ஏற்ப டோலக் பீட்ஸை அதிரவிட்டு, ஆடியன்ஸை உற்சாகப்படுத்துவார்.

திருமணத்தில் `டிஜே’...  ஸ்டார்ட் மியூசிக்!

அடுத்தது... ஷோ ஸ்டீலர், ஆங்கர் பிரிட்டோ. சங்கீத், ரிசப்ஷன் போன்ற நிகழ்ச்சிகளில் இசை ஒருபுறம் செம பிட்ச்ல போயிட்டு இருந்தாலும், பார்வையாளர்கள் பலருக்கும் டான்ஸ் ஆடலாமா, வேண்டாமானு ஒரு தயக்கம் இருக்கும். அந்தத் தயக்கத்தை உடைச்சு குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், ஏன் மணமக்களைகூட ஆட்டம் போட வெச்சிடுவார் பிரிட்டோ!’’ என்ற ஸென், திருமணத்துக்கு `டிஜே’ மியூசிக்ஸ் முன்பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்களைச் சொன்னார்.

‘‘திருமண மண்டபத்தை `டிஜே’ டீமுக்கு ஒருமுறை முன்னரே காட்டிடுங்க. அப்போதான் இசைக்கருவிகளை அமைப்பதற்கான இடத்தை அவங்க முன்கூட்டியே முடிவெடுத்து, திருமண தினத்தில் டென்ஷன் இல்லாமல் இருப்பாங்க.

திருமணத்தில் `டிஜே’...  ஸ்டார்ட் மியூசிக்!

ஒருவேளை மின்சாரம் தவறினா, மண்டபத்தில் ஜெனரேட்டர் வசதி இருக்கானு உறுதிப்படுத்தணும். இல்லைன்னா, அதுக்கு மாற்று ஏற்பாடு ஏதாவது முன்னரே செய்து வைக்கணும்.

திருமணத்துக்கு முன்னரே `டிஜே’வுக்கு கல்யாண வீட்டினரின் ரசனை பற்றி எடுத்துச் சொல்லணும். அதுக்குத் தகுந்தாற்போல பிளே லிஸ்ட் செலக்ட் பண்ணச் சொல்லிக் கேட்கணும்.

திருமணத்தில் `டிஜே’...  ஸ்டார்ட் மியூசிக்!

`டிஜே’ மற்றும் ஆங்கர்கிட்ட அன்னியத்தன்மை தவிர்த்து, ஃப்ரெண்ட்லியா அப்ரோச் பண்ணினா, விழா நிச்சயமா களைகட்டும்.

மிகவும் மலிவான கட்டணத்தில் `டிஜே’ செய்தால், அத்தியாவசியக் கருவிகள் இல்லாம ஒலியின் தரம் குறைந்து இசை, வெறும் சத்தமா மாறிடும்கிறதையும் மறக்க வேண்டாம்’’

- ச.சந்திரமௌலி