சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

வெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்!

வெடிங் கேக்

முன்பெல்லாம் கிறிஸ்தவ திருமணங்களில் மட்டுமே கேக் வெட்டுவதையும் மணநாளின் ஒரு சந்தோஷ அங்கமாகக்கொண்டிருந்தனர். ஆனால், இப்போதோ அனைத்துத் திருமணங்களிலும் ‘கேக் கட்டிங்’ நிகழ்கிறது. இந்தக் காலத்து மணமக்கள் அதை ரொம்பவே ரசனையுடன் செய்ய விரும்ப, அதற்கென தனியாக பேக்கரிகளும் வந்துவிட்டன. விதவிதமாக வெடிங் கேக் செய்து பல கஸ்டமர்களை தன் வசம் வைத்துள்ள, அசோக் நகர் ‘தி பெக்மன் பிகின்ஸ்’ பேக்கரியின் உரிமையாளர் கார்த்திகா ஷ்ரவந்தியிடம் பேசினோம்.

வெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்!

‘‘நான் ஒரு மென்பொருள் பொறியாளர். ஒரு வருடம் பெங்களூரில் வேலை செய்யும்போதே, பகுதி நேரமாக பேக்கிங் படித்தேன். அதில் ஈடுபாடு அதிகமாக, லண்டன் சென்று ஃபிரெஞ்சு பேக்கிங் பற்றிய கோர்ஸ் முடித்தேன். ஒரு வருடம் `ஐடிசி சோலா’ ஹோட்டலில் பணிபுரிந்த பின், சொந்தமாக பேக்கரி துவங்கிவிட்டேன்!’’ என்று சுருக்கமாக அறிமுகம் தந்தவர்,

வெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்!
வெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்!

“முன்பெல்லாம் பிறந்தநாள் கேக் ஆர்டர்கள்தான் நிறைய வரும். இன்றோ அதற்கு இணையாகக் குவிகின்றன வெடிங் ஆர்டர்கள். அவ்வளவு ஏன்... அறுபதாம் கல்யாண கேக் ஆர்டர்கள்கூட வருகின்றன. ரிசப்ஷன், முகூர்த்தம், நிச்சயதார்த்தம் என்று ‘கேக் கட்டிங்’ ஒரு திருமணச் சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. கஸ்டமர்கள் தங்களின் திருமண தீம் அடிப்படையில் கேக் கேட்கிறார்கள். அல்லது, மணமக்களுக்கு விருப்பமான ஸ்போர்ட்ஸ், கார்ட்டூன் போன்ற உருவங்களில் கேக் ஆர்டர் செய்வார்கள். அந்த வகையில் இப்போது மினியான்ஸ் கார்ட்டூன் கேக் ஹிட். சிலர் மிகவும் ரசனையாக, அவர்களது காதல் கதையை எழுதி அலங்கரிக்கச் சொல்வார்கள். இப்படி ஒவ்வொரு கேக்குமே எங்களுக்கு சேலஞ்ச்தான்!’’ என்கிறார் ஷ்ரவந்தி.

வெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்!
வெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்!

பொதுவாக, அடுக்குகள் கொண்ட கேக்குகள் மிகப் பிரபலம். அதில் முழுவதும் வெள்ளை நிறத்தில், உச்சியில் பெண்-பிள்ளை நிற்பதுபோல க்ரீமால் பொம்மைகள் செய்து கொடுத்து அசத்துவது, ஷ்ரவந்தி ஸ்பெஷல். டிசைன் மட்டுமின்றி ஒவ்வொரு ஆர்டரிலும் ஃப்ளேவரில் இருந்து நிறம்வரை, மணமக்களே மறந்தாலும் அவர்களின் விருப்பங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கேக்கில் வார்க்கிறார்.

வெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்!

“ஒரு கிலோ கேக், ரூபாய் 2,000 முதல் கிடைக்கும். அலங்காரத்துக்கு ஏற்ப விலையும் அதிகரிக்கும்.

வெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்!

எனினும், விரும்பும் டிசைன்கள் பட்ஜெட்டுக்குள் வந்துவிடும்” என்று சிரிக்கும் ஷ்ரவந்தி, மறக்க முடியாத ஆர்டர் பற்றிச் சொல்லும்போது, ‘‘மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு இந்து திருமண ஆர்டர் அது. மூன்று அடுக்குகள்கொண்ட அந்த கேக்கின் கீழ்த்தளத்தில் மல்லிகைப்பூ போன்றும், நடுப்பகுதியில் மாங்காய் போன்றும், மேல் பகுதியில் கோயில் கலசம் போன்றும் வடிவமைத்தோம். இப்படி புதுமையான அம்சங்கள்தான் இந்தத் தொழிலில் சுவாரஸ்யமும், சந்தோஷமும்!’’ என்கிறார் ஷ்ரவந்தி, ஸ்வீட் அண்ட் சாஃப்ட்டாக!

- தா.நந்திதா