சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

வெளிநாட்டில் ஹனிமூன் ட்ரிப்!

ஹனிமூன்

புது மாப்பிள்ளையும் புது மணப்பெண்ணும் தங்களுக்குள் மனம்விட்டுப் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, இல்லற வாழ்க்கையை இனிதாகத் துவங்க வழிவகுப்பது... ஹனிமூன். முன்பெல்லாம் ஹனிமூன் என்றால் பெரும்பாலும் வட இந்தியாவின் குளுகுளு இடங்கள் டிக் செய்யப்படும். இப்போது வெளிநாடுகளுக்கு ஹனிமூன் செல்வது ஃபேஷனாகி வருகிறது. அப்படி தாய்லாந்தில் தங்கள் தேனிலவைக் கொண்டாடிய சென்னையைச் சேர்ந்த தீபா, சிவபிரகாஷின் அனுபவங்கள் இங்கே...

வெளிநாட்டில் ஹனிமூன் ட்ரிப்!

‘‘கொஞ்சம் அட்வன்ச்சர் கலந்த ரொமான்டிக் ஸ்பாட்னா... அது தாய்லாந்துதான்!’’ என்று ஒரே குரலில் ஆரம்பித்த இருவரும், மாறி மாறி உற்சாகம் பொங்க அனுபவங்களை பகிர்ந்தனர். ‘‘தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகில் இருக்கும் பட்டயா சிட்டிதான், எங்களோட முதல் விசிட். அங்க இருக்கிற அண்டர்வாட்டர் வேர்ல்ட், செம த்ரில்லிங். உலகத்துல இருக்கிற எல்லா வகை மீன்களையும் அங்க பார்க்கலாம். நாங்க ரெண்டு பேரும் மீன் குறித்த எங்களோட நினைவுகளை ஷேர் செய்துட்டே அதைச் சுத்தி வந்தோம். முழுசா முடிக்க, ஒரு நாள் தேவைப்பட்டது. அவ்ளோ பெருசு!

வெளிநாட்டில் ஹனிமூன் ட்ரிப்!

அடுத்த நாள் பிளான், மினி சயாம் (Mini Siam). உலகத்தில் இருக்கிற பெரும்பாலன புகழ்பெற்ற கட்டடங்களின் மினியேச்சர் மாடல்கள் இங்க இருக்கு. அவ்ளோ ரியலிஸ்டிக். ஈஃபில் டவர், லிபர்ட்டி சிலைனு ஒரே கூரைக்குக் கீழே சின்னச் சின்னதா பூத்திருந்த அந்தக் கலையை, ரெண்டு பேரும் கைகோத்து ரசிச்சோம்.

வெளிநாட்டில் ஹனிமூன் ட்ரிப்!

உலகத்தில் இருக்கிற முக்கிய பிரபலங்களின் மெழுகுச் சிலைகளும் இருக்கிற, பாங்காக் மெடம் டூஸாட்ஸ் (Madame Tussauds) மியூசியம் போகாமலா?! ஸ்பைடர்மேன், மிஸ்டர் பீன், புரூஸ்லீனு பார்த்து ரெண்டு பேரும் குழந்தைகளாகி குதூகலிச்சோம். ‘நாளைக்கு நம்ம பிள்ளைங்களுக்குக் காட்ட, இவங்ககூட எல்லாம் போட்டோஸ் எடுத்துக்கிட்டா இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்ல’னு அங்கயும் கொஞ்சம் ஃபன் சேர்த்துட்டோம்ல!

வெளிநாட்டில் ஹனிமூன் ட்ரிப்!

பட்டயாவில் இருக்குற பிலீவ் இட் ஆர் நாட் (Believe it or not) மியூசியத்துக்குப் போனப்போ, நம்ம கண்களை நாமளே நம்பமுடியாத அளவுக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம், அழகுனு மூணும் கலந்த அனுபவம் கொடுத்த விஷயங்களால நிறைஞ்சிருந்தது அந்த இடம். உதாரணமா, ஒரு லட்சம் தீக்குச்சிகளால் ஆன டைட்டானிக் கப்பல், நான்கு கண்கள்கொண்ட மெழுகு உருவம், மனிதத் தோலால் உருவான மாஸ்க்னு ரெண்டு பேரும் வாய்பிளந்து நின்றோம். ஒரு அட்வன்சர் டிராவல் போகலாம்னு கிளம்பின எங்களுக்கு, ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங், அண்டர் வாட்டர் டைவிங்னு செம்ம த்ரில்லிங் அனுபவம் தந்தது தாய்லாந்து. ரெண்டு பேரும் த்ரில்ல ஒருத்தர் கையை ஒருத்தர் அவ்ளோ இறுக்கமா பிடிச்சுக்கிட்டது, அதுதான் முதல் முறை. இதெல்லாம் முடிச்சுட்டு ரிலாக்ஸ் பண்ண தாய்லாந்து புகழ் தாய் மசாஜ் போனோம். ரொம்ப ரிலாக்ஸிங்கா இருந்தது.

வெளிநாட்டில் ஹனிமூன் ட்ரிப்!
வெளிநாட்டில் ஹனிமூன் ட்ரிப்!

‘சஃபாரி வேர்ல்ட்’டில் முழுக்க முழுக்க விலங்குகள்தான். அடுத்ததா, அமைதியான சூழலில் அமைந்திருந்த புத்தர் கோயிலில் ரம்மியமான ஒரு தரிசனம். ரெண்டு பேரும் எதுவும் பேசிக்காம அருகருகில் அமர்ந்திருந்த அந்த நிமிடங்களில், ரெண்டு பேர் மனசிலயும் தோன்றினது இதுதான்... ‘தேங்க்யூ தாய்லாந்து’!’’ - புகைப்பட ஆல்பத்தின் கடைசிப் பக்கத்தை மூடியபடி முடித்தார்கள், தீபா-சிவப்பிரகாஷ் தம்பதி.

- சு.கற்பகம்

கவனிக்க..!

வெளிநாட்டில் ஹனிமூன் ட்ரிப்!

‘‘தாய்லாந்தில் எலெக்ட்ரானிக் அயிட்டங்கள், விலை கம்மியா இருக்கும்; ஷாப்பிங்கின்போது நினைவில் வெச்சுக்கோங்க. நூடுல்ஸ், பன், மேங்கோ ரொம்ப டேஸ்டா இருக்கும்; ஹோட்டல் போகும்போது நினைவில் வெச்சுக்கோங்க. இந்தியன் உணவகங்களும் இருக்கு. தாய்லாந்தில் டிராஃபிக் ரொம்ப அதிகம். அதனால ஏர்போர்ட்டுக்கு, ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே கிளம்புறது நல்லது’’ என்று டிப்ஸ் தருகிறார் தீபா.