சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

'அடடே' ஹனிமூன் ரிசார்ட்ஸ்!

ஹனிமூன் ரிசார்ட்ஸ்

திருமணத்துக்குப் பின் பொதுவாக இந்தியா மேப்பில் இருந்து வேர்ல்டு மேப் வரை வைத்துக்கொண்டு ஹனிமூன் ஸ்பாட் தேடுவது வழக்கம். கொஞ்சம் வித்தியாசமாக, ரொம்ப சௌகரியமாக பிரபலமாகி வருகின்றன ஹனிமூன் ரிசார்ட்ஸ். அதாவது, கடல் கடந்து மலை கடந்து தம்பதி ஒர் இடத்துக்குச் சென்று தேனிலவு காண்பதற்குப் பதில், அதிகப் பயண அலுப்பின்றி அருகிலேயே ஒரு ரிசார்ட்டில் தங்களின் ஹனிமூனைக் கொண்டாடுவது. அப்படி இரண்டு டேஸ்ட்டில் இரண்டு ரிசார்ட்களின் அறிமுகம் இங்கே!

'அடடே' ஹனிமூன் ரிசார்ட்ஸ்!

அட்வென்சர் விரும்பிகளுக்கு... டமாரா!

இளமை, புதுமை விரும்பும் தம்பதி ஜங்கிள் எஃபெக்டில் ஜமாய்க்கக்கூடிய இடம், டமாரா (TAMARA). கர்நாடக மாநிலம், கூர்க் நகரத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் மலையும் மலைசார்ந்த பகுதியுமான கபிநாடு என்ற ஊருக்கு அருகில் உள்ளது, இந்த விடுதி. ரிசார்ட் என்றவுடன், `இங்கே தம்பதியாகச் சென்று ஓய்வெடுக்கலாம்... அவ்வளவுதான்’ என்று நினைக்க வேண்டாம். சுற்றிப்பார்க்கக் கூடிய இடங்களும், சுறுசுறுப்பாக இயங்க ஆக்டிவிட்டீஸ்களும் நிறைய நிறைய இருக்கின்றன.

'அடடே' ஹனிமூன் ரிசார்ட்ஸ்!

இங்கு விருந்தினராக வரும் தம்பதிக்கு ஸ்பா, ட்ரெக்கிங், பேர்ட் வாட்ச்சிங், பிரைவேட் யோகா செஷன், கேண்டில் லைட் டின்னர், சிக்னேச்சர் காபி தெரபி என்று பொழுதுபோக்க இருக்கின்றன பல விஷயங்கள். மேலும் இந்தக் காட்டுப்பகுதிக்கு அருகே சுற்றிப்பார்க்கவும் உண்டு பல சுவாரஸ்யமான இடங்கள். நல்காட் அரண்மனை, இகுதப்பா கோயில், செல்லவாரா அருவி, தடியண்டமோல் மலைச்சிகரம், டுபாரா யானைகள் வாழ்விடம், நாகர்ஹோல் தேசிய பூங்கா, ஓம்காரேஷ்வரா கோயில் என்று இளம் தம்பதி இயற்கையை இணைந்து ரசிக்கவும், வியக்கவும் முடியும்.

'அடடே' ஹனிமூன் ரிசார்ட்ஸ்!

டமாராவில் தங்குவதற்கான பேக்கேஜ், ரூபாய் 18,000 முதல் துவங்குகிறது. ஹனிமூன் பேக்கேஜை பொறுத்தவரை தங்கும் நாட்களுக்கு ஏற்ப 25,000 ரூபாய் முதல் துவங்குகிறது. மூன்று வேளை உணவு மற்றும் 12 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு தங்கும் வசதி ஆகியவை இதிலேயே அடங்கும். ஆஃப் சீஸன் டிஸ்கவுன்ட்டும் உண்டு.

பாரம்பர்யப் பிரியர்களுக்கு இன்டெகோ!

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில், பாரம்பர்ய அழகுடன் அமைந்துள்ளது இன்டெகோ (INDECO). சுமார் 1800-களில் இப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகள்தான், இன்று எழில்கூட்டி விடுதிகளாக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ மூன்று கிராமங்களை மீட்டு, அந்தக் கட்டடங்களைப் பேணி காட்டேஜ் ஆக்கியிருக்கிறார்கள். 30 தனித்தனி காட்டேஜ்கள் உள்ளன. ஒன்றைப்போல மற்றொன்று காட்டேஜ் கிடையாது, ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இந்த விடுதி ‘குளோபல் ஈக்கோ டூரிஸம்’ அவார்டு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

'அடடே' ஹனிமூன் ரிசார்ட்ஸ்!

இந்திய உணவகம், ஸ்பா, ஸ்விமிங் பூல், யோகா மற்றும் தியானக்கூடம், சிறிய அருங்காட்சியகம் என்று பல வசதிகள் மற்றும் பொழுதுபோக்குகள் இங்குண்டு. இன்டெகோவின் தனிச்சிறப்பு... யுனெஸ்கோ’ (UNESCO) அமைப்பால் தொன்மையான புராதான இடங்களாக அங்கீகரிக்கப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களுக்கு அருகில் இது அமைந்திருப்பதுதான். பாரம்பர்ய ரசனையுள்ள தம்பதிகளுக்கு, இது ஒரு நல்ல தேர்வாக அமையும்.

'அடடே' ஹனிமூன் ரிசார்ட்ஸ்!

மான், அன்னம், பசுக்கள், குருவிகள், வாத்து போன்ற விலங்குகளும் பறவைகளும் சூழ, பிஸியான சிட்டி வாழ்க்கையில் இருந்து சற்று விலகி அமைதியாக தேனிலவையோ, ஒரு விடுமுறையையோ கழிக்கலாம், இன்டெகோவில்... கவிதையாக! காஞ்சி சங்கராச்சாரியார், இந்தக் கிராமத்தில் தங்கிய வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன. அவரின் பல்லக்கு இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

'அடடே' ஹனிமூன் ரிசார்ட்ஸ்!

நாள் ஒன்றுக்கு 3,000 ரூபாய் முதல் 15,000 வரை வாடகையில் காட்டேஜ் உள்ளது. மூத்த குடிமக்களுக்கு சிறப்புச் சலுகைகளுடன் வார நாட்கள், ஆஃப் சீஸன் என்று சில தருணங்களில் தள்ளுபடிகளும் எதிர்பார்க்கலாம்.

'அடடே' ஹனிமூன் ரிசார்ட்ஸ்!
'அடடே' ஹனிமூன் ரிசார்ட்ஸ்!
'அடடே' ஹனிமூன் ரிசார்ட்ஸ்!

‘கல்யாணம் முடிஞ்சிருச்சு... ஆனா ஹனிமூன் போக நேரம் இல்லையே’ எனும் பிஸி கப்பிள்ஸ், இனி உங்கள் ஏரியாவைச் சுற்றியே ஒரு நல்ல ரிசார்ட் ஆக புக் செய்துவிடலாம், தேனிலவுக்கு!

- ச.சந்திரமௌலி, படங்கள்: கே.ராஜசேகரன்