Election bannerElection banner
Published:Updated:

'அது என் குழந்தை இல்லை...பாலூட்டுவது போல் நடித்ததே நெகிழ்ச்சி'' - கேரள பெண் மாடல் ஜிலு ஜோசப்

'அது என் குழந்தை இல்லை...பாலூட்டுவது போல் நடித்ததே நெகிழ்ச்சி'' - கேரள பெண் மாடல் ஜிலு ஜோசப்
'அது என் குழந்தை இல்லை...பாலூட்டுவது போல் நடித்ததே நெகிழ்ச்சி'' - கேரள பெண் மாடல் ஜிலு ஜோசப்

'அது என் குழந்தை இல்லை...பாலூட்டுவது போல் நடித்ததே நெகிழ்ச்சி'' - கேரள பெண் மாடல் ஜிலு ஜோசப்

பெண்களின் மார்பகம் என்பது, குழந்தைக்கான உயிர்ப்பால் சுரக்கும் இடம். ஆனால், எல்லாக் காலங்களிலும் அது வெறும் காமத்துக்கான தசைக் குவியலாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணத்தின் தலையில் அழுத்தமாகக் குட்டு வைத்திருக்கிறது, 'கிரஹ லக்ஷ்மி' என்ற மலையாள பத்திரிகையின் அட்டைப் படம். அப்படியென்ன அதில் இருக்கிறது என்கிறீர்களா? 

மாடல், முன்னாள் ஏர்ஹோஸ்டஸ், நடிகை, கவிஞர்,  எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்டவர், ஜிலு ஜோசப் என்கிற 27 வயது இளம்பெண். ஒரு பிஞ்சுக் குழந்தைக்குப் பாலூட்டுவதுபோல பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம்பெற்றுள்ளார். தேவைப்பட்டால் பொது இடங்களில் குழந்தைக்குப் பாலூட்ட தயங்க வேண்டியதில்லை என்ற பாசிட்டிவ் கருத்தை வலியுறுத்தி இந்தப் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் புகைப்படம் இடம்பெற்ற பத்திரிகையை ஆதரித்தும் எதிர்த்தும்,  சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். கூடவே அதில் நடித்த மாடலான ஜிலு ஜோசப்பின் தைரியத்தைப் பாராட்டி ஒரு சாராரும், அதை விமர்சித்து மற்றொரு சாராரும் போஸ்ட், கமென்ட் என பொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

''செக்ஸ், மாதவிடாய், குழந்தைக்குப் பாலூட்டுவது போன்ற சாதாரண நிகழ்வுகளையும் நம் சமுதாயத்தில் பெண்கள் மறைத்து மறைத்து செய்யவேண்டியிருக்கிறது. அதனால், இப்படியொரு முயற்சியை நாம் பாராட்டியே வேண்டும்'' என ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. 

சிலர், ''இந்த போட்டோ ஷூட்டுக்கு அந்தக் குழந்தையின் நிஜ தாயையே பயன்படுத்தியிருக்கலாமே. அதுதானே ரியலாக இருந்திருக்கும். பாலூட்டும் கைக்குழந்தையை வைத்திருக்கும் ஒரு பெண் தன் உடைகளைப் பற்றியோ, தன் அழகு பற்றியோ அக்கறையில்லாமல் இருப்பார். உண்மையான தாயின் கண்கள் பல இரவுகள் தூக்கத்தை இழந்ததினால் சோர்ந்து கிடக்கும். அந்த உண்மைத்தன்மை இந்தப் புகைப்படங்களில் இல்லையே'' என்று வருந்தியிருக்கிறார்கள். 

இன்னும் சிலர், ''பொது இடங்களில் பாலூட்டுவது கிராமப்புறங்களில் காலங்காலமாக சர்வசாதாரணமாக நடைபெற்றுவரும் விஷயம்தான். நகர்ப்புறங்களில்தான் இந்தப் பிரச்னை இருக்கிறது'' என்று சிம்பிளாக தங்கள் கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்கள். 

இதற்கிடையில், மாடல் ஜிலுவின் அப்பாவான ஜோசப், ஆங்கில நாளிதழ் ஒன்றில் பேசும்போது, ''இந்த போட்டோ ஷூட் தொடர்பாக என் மகளை அப்ரோச் செய்யும்போது, இது ஒரு பெருமைமிக்க வாய்ப்பு என்றே நினைத்தார்'' என்று பெருமிதமாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஜிலு ஜோசப், ''இந்த போட்டோ ஷூட்டுக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டதும் யோசிக்காமல் வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். அது என் குழந்தை இல்லை. ஆனால், பாலூட்டுவதுபோல நடித்ததே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேவைப்படும்போது பொதுவெளியில் குழந்தைக்குப் பாலூட்டுவதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? இதைக் காமம் கலந்த கண்களுடன் பார்ப்பது தவறு. இது ஓர் அழகான விஷயம் இல்லையா நண்பர்களே...'' என உணர்வுபூர்வமாகப் பேசியதோடு, ''என் உடல் வடிவம்மீது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை இருக்கிறது. நான் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பதால் இந்த புராஜெக்ட்டில் நடிக்க எந்தவித தயக்கமும் ஏற்படவில்லை'' என்று போல்டாக மீடியாக்களில் பேசியிருக்கிறார். 

 ஜிலுவின் இந்த பாசிட்டிவ் முயற்சிக்கு அவரது அம்மா மற்றும் சகோதரிகள் மத்தியிலேயே வரவேற்பு இல்லை  என்ற நிலையில் ஜிலுவின் கருத்துகளை அறிய, நாம் போனில் தொடர்பு கொண்டோம். மிகுந்த சந்தோஷமான குரலில், ''யெஸ், தட் வாஸ் வெரி ஹேப்பியஸ்ட் மொமென்ட். அது என்ட பேபி இல்லா. பட் ஞான் நெகிழ்ச்சியாயிட்டு ஃபீல் செய்றேன்!'' என்றார். 

Pic Courtesy: கிரகலக்‌ஷ்மி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு