Published:Updated:

"நடுங்கலாம் வாங்க..."

வெடவெட வட இந்தியா ...!

"நடுங்கலாம் வாங்க..."

கடும் மழையைத் தொடர்ந்து, தற்போது குளிர் ஆரம்பித்துவிட்டது தங்கத் தமிழ்நாட்டில். ஆங்காங்கே ஸ்வெட்டர் விற்பனை சூடுபிடித்துவிட்டது. பகல் ஒரு மணிக்குக்கூட காதுகளில் 'இயர் கேப்' மாட்டிக் கொண்டுதான் அலைகிறார்கள். இத்தனைக்கும் இங்கே குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்ஷியஸ்தான். இதுவே உத்தரபிரதேச மாநிலத்தின் நிலைமை என்ன தெரியுமா... அவ்வப்போது 6 டிகிரி செல்ஷியஸுக்கும் கீழே போய்க் கொண்டிருக்கிறது! 24 மணி நேரமும் குளிர் குளிர் குளிர் என்றே இருப்பதால்... வரலாறு காணாத உறைபனி; விமானங்கள் ரத்து... என்று அல்லோலகல்லோலப்படுகிறது வடஇந்தியா!

பரம்பரை பரம்பரையாக அங்கிருப்பவர்களே விறைத்துக் கிடக்கும்போது... தமிழ்நாட்டில்இருந்து வாழப் போயிருப்பவர்களின் நிலைமை எப்படி? உ.பி. மாநிலம், அலிகரில் செட்டிலாகி இருக்கும் தமிழ்ப் பெண்கள் சிலர், கடுங்குளிருக் காக மாறியிருக்கும் தங்களின் லைஃப் ஸ்டைல் பற்றி இங்கே பேசுகிறார்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கணவர், பன்னாட்டு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்க... அவருக்காக விருத்தாச்சலத்திலிருந்து இடம் பெயர்ந் திருக்கும் அமுதமொழி, ''குளிர்காலம் வந்தால் அரிசி சோற்றை மறந்துவிட வேண்டியதுதான்.

##~##
இங்குள்ளவர்கள் செய்வது போல் சோளம் மற்றும் முத்துசோள ரொட்டி, சக்ரவர்த்தி கீரை கலந்த ரொட்டி, முள்ளங்கி ரொட்டி என்று உடம்புக்கு சூடு தரும் பல வகையாக ரொட்டிகள் செய்து சாப்பிடுகிறோம். கொழுப்புச் சத்துகள் நிறைந்த நெய், வெண்ணெய் மற்றும் கோவா அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. காரணம், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு இல்லை எனில் குளிரைத் தாங்க முடியாது. உடலுக்குச் சூடு தருவதால், கடுகு எண்ணெயை எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறோம். பச்சை மிளகாயை நாம் பழைய சோற்றுக்கு தொட்டுக் கொள்வோம். இங்கே, அனைத்து உணவு வகைகளுடன் வெறும் வாயிலேயே கடித்துச் சாப்பிடுகிறார்கள்!'' என்று ஆச்சர்யப்பட்ட இந்த பி.இ. பட்டதாரி,
"நடுங்கலாம் வாங்க..."

''நமக்கு எதை மாற்றினாலும் இட்லி, தோசையை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அதன் மாவு குளிரில் புளிக்காது. இதற்காக தமிழ்நாட்டுப் பெண்கள் கண்டுபிடித்த டெக்னிக்... மாவை, அப்படியே பாத்திரத்துடன் கம்பளியில் சுற்றி ஹீட்டர் அல்லது புளோயரின் முன்பாக வைத்து புளிக்க வைப்பதுதான்!'' என்று சிரிக்கிறார்.

(லேடீஸ்... நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா.... நம்ம ஊருலயும் இது ஆத்திர அவசரத்துக்கு கைகொடுக்குமே!)

''சுமார் ஏழு மணி போல் தாமத விடியல் மற்றும் மாலை ஐந்து மணிக்கே சீக்கிரத்தில் இ

"நடுங்கலாம் வாங்க..."

ருட்டு என ஒரு நாளின் கால அளவே சிறியதாகி விடும். சில நாட்களில் சூரியனே தெரியாது!'' என்று குளிரில் நடுங்கிய குரலுடன் ஆரம்பித்த முஜுபுன்னிசா, சேலத்தைச் சேர்ந்தவர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கணவருக்காக 35 வருடங்களாக வடஇந்தியவாசியாகி இருப்பவர்.

''வழக்கமாக காலை ஏழு மணிக்கு துவங்கும் பள்ளிக்கூடம், சுமார் இரண்டு மணி நேரம் தள்ளிப் போய் விடும். குளிரின் உச்ச நாட்களான டிசம்பர் இறுதியில் சுமார் 15 நாட்களுக்காக 'வின்ட்டர் ஹாலிடே’ பள்ளிகளுக்குக் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டேஇருந்தால் நடுங்கும் குளிரில் உடம்பு 'வார்ம்’ஆக இருக்கும். இல்லையெனில், குளிரில் முடங்கி நோயாளி போல ஆகிவிடுவோம். குளிருக்கு ஏற்ற உடைகளை உடுத்தி, உணவு முறைகளையும் மாற்றிக் கொண்டால் சமாளித்து விடலாம். பெட்ஷீட்டுகள் எல்லாம் கதைக்காகாது. 'ரஜாய்’ என அழைக்கப்படும் பஞ்சு வைத்து அடைக்கப்பட்ட மெல்லிய மெத்தை போர்வைதான் கைகொடுக்கும்.

தமிழ்நாட்டில் மார்கழி மாதம் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பார்கள். இங்கு பெரும்பாலான திருமணங்கள் குளிரில்தான் நடைபெறுகின்றன. அதுவும் நள்ளிரவிலிருந்து விடியும் வரை. இதனால் இந்த சீஸனில் நான்-வெஜ் மற்றும் நெய், வெண்ணெய் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் விலை சற்று கூடிவிடும்'' என்றார்.

அலிகர் ஜவகர்லால் நேரு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நர்ஸ் பயிற்சிப் பள்ளியின் ஆசிரியராக இருக்கிறார் சோன்ஜா நேசமணி. ''குளிர், எலும்பை நொறுக்குமளவுக்கு தரையில் படர்ந்திருக்கும் என்பதால்தான் வடஇந்தியா முழுக்க 'ஃபர்னிச்சர் கல்ச்சர்’ அதிகம். வீட்டுக்குள்ளேயும் சாக்ஸ், செருப்பு என்றுதான் இருக்க முடியும். தொட்டவுடன் எலும்பில் உறைக்கும் ஜில் நீரில் இருந்து தப்பிக்க... கைகளில் பிளாஸ்டிக் கிளவுஸ் போட்டு பாத்திரம் தேய்ப்போம். மின்விசிறிகளுக்கு நான்கு மாதம் ரெஸ்ட்தான்!'' என்றவர்,

"நடுங்கலாம் வாங்க..."

''வயதானவர்கள் எல்லாம் குளிரைத் தவிர்க்க, சொந்த ஊரான தென் இந்திய பகுதிகளுக்குச் சென்று விடுகிறார்கள். குழந்தைகளுக்குச் சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். கொஞ்சம் ஏமாந்தால், நிமோனியா வரை போய் விடுகிறது!'' எனும் சோன்ஜா நேசமணி திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.

தனியார் நிறுவன உயர் அதிகாரியான கணவரின் வேலையின் பொருட்டு இங்கு வந்தவர் நாகர்கோயிலைச் சேர்ந்த பெனூலா மேரி. ''டிரெஸ்ஸுக்கு மேட்சான ஸ்வெட்டர் போட்டால்தான் அழகு என்பதால், நடுத்தர வகுப்பு குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணிடம்கூட சுமார் 15 ஸ்வெட்டர்களாவது இருக்கும். வெளியே கிளம்ப சட்டென உடை உடுத்த முடியாது. 'தெர்மோவேர்’ எனும் உள்ளாடைகள், பிறகு வழக்கமான ஆடைகள், அதன் மீது ஸ்வெட்டர், கடைசியாக லெதர் ஜாக்கெட் என உடுத்தவே அரை மணியாகி விடும். சேலை உடுத்தி குளிரை தாங்குவது கடினம். எனவே, சுடிதார் வகைகளே அதிகமாக பயன்படுத்த வேண்டி உள்ளது'' என உடைகளைப் பற்றி கூறியவர், அவர் களின் அழகு பராமரிப்புகளையும் பகிர்ந்தார்.

"நடுங்கலாம் வாங்க..."

''உடலில் சொர சொரப்பு மற்றும் பனி வெடிப்பு வராமல் இருக்க உடம்பு முழுவதுமாக வேஸலின் தடவுகிறார்கள். இதற்கு செலவிட முடியாதவர்கள் பன்னீர், கிளிசரின் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சமபங்காக கலந்து வைத்து பயன்படுத்துகிறார்கள். உதடு வெடிக்காமல் இருக்க லிப்ஸ்டிக் பழக்கம் இல்லாதவர்களும் இங்கு வந்தால் லிப்ஸ்டிக் போட வேண்டி இருக்கும். ஆடைகள், ஆபரணங்கள், காஸ்மெடிக் அயிட்டங்கள் என எல்லாவற்றிலும் டார்க் கலர்தான் வின்ட்டர் ஃபேஷன்!'' என்றார் பரபரவென கைகள் தேய்த்து!

ஆர்.ஷஃபி முன்னா
படங்கள்: ராஜு செய்னி