Published:Updated:

ஆறில் பட்ட அடி பன்னிரண்டில் பாதிக்கிறதே ..?

ஆறில் பட்ட அடி பன்னிரண்டில் பாதிக்கிறதே ..?

டியர் டாக்டர் 

'''தற்போது பன்னிரண்டு வயதாகும் என் மகன் ஏழாவது படிக்கிறான். அவனுடைய ஆறாவது வயதில், விளையாடும்போது தலையில் அடிபட்டு, இரு கண்களும் மேல்நோக்கி செருகிக் கொண்டுவிட்டன. உடனே கண் மருத்துவரிடம் காட்டி சரி செய்தோம். தற்போது திடீரென காது கேட்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கும், முன்பு அடிபட்டதற்கும் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் இருக்கிறது. இ.என்.டி. மருத்துவரிடம் சென்றபோது, சொட்டு மருந்து மட்டும் கொடுத்து, 'சரியாகிவிடும்’ என்றார். ஆனால், எந்தப் பலனும் இல்லை. இரண்டு, மூன்று முறை சத்தமாக அழைத்தால் மட்டுமே திரும்பிப் பார்க்கிறான். இது என்ன பிரச்னையாக இருக்கும்... தீர்வு என்ன..? சொல்லுங்கள் டாக்டர்...''

ஆறில் பட்ட அடி பன்னிரண்டில் பாதிக்கிறதே ..?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டாக்டர் மனோகரன், ஆடியாலஜிஸ்ட் (கேள்வியல் மற்றும் பேச்சியல் நிபுணர்), சென்னை:  

##~##

''பொதுவாக காது கேட்கும் திறனில் பிரச்னை ஏற்பட்டால்... காதின் நான்கு பகுதிகளில் (வெளிக்காது, நடுக்காது, உள்காது மற்றும் நரம்பு) ஏற்படும் பலவிதமான பாதிப்புகள் காரணமாக அது ஏற்படும்.

ஒன்று... வெளிப்புற காதில், அதாவது... காதின் நுழைவுப் பகுதியில் ஏற்படும் கொப்புளம், நீர்கோத்தல், அழுக்கு சேர்தல், சீழ்வடிதல் போன்ற பிரச்னைகளாக இருக்கலாம்.

இரண்டு... நடுக்காதில் உள்ள அசையக் கூடிய எலும்புகளில் பிடிப்பு ஏற்படுதல், எலும்புகள் துண்டிக்கப்படுதல், எலும்புகள் விலகுதல், நடுக்காதில் நீர்கோத்து அடைத்துக் கொள்ளுதல், செவிப்பறையில் ஓட்டை ஏற்பட்டு ஜலம் வெளிவருதல் மற்றும் சளி காரணமாக தொண்டைக் கட்டிக் கொண்டு, நடுக்காதுக்கும் தொண்டைக்கும் இடையில் உள்ள வெண்டிலேஷன் டியூப்பில் அடைப்பு ஏற்படுதல் போன்ற காரணங்களால் காது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.

ஆறில் பட்ட அடி பன்னிரண்டில் பாதிக்கிறதே ..?

மூன்றாவது... உட்புறக் காதில் ஏற்படும் பாதிப்புக் காரணமாக கேட்கும் திறன் பாதிக்கப்படுதல். இது பரம்பரை காரணமாக ஏற்படும். இதைத் தவிர, அபார்ஷன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் உட்கொள்ளும் வீரியமான மருந்துகளாலோ, கர்ப்பிணி பெண்கள் வைரஸ் மற்றும் மலேரியா போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ... பிறக்கும் குழந்தைக்கு உட்புறக்காதில் பிரச்னை ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்படக்கூடும். பிறந்த குழந்தைக்கு அம்மை, மலேரியா போன்ற நோய்கள் கடுமையாக தாக்கினாலும் பாதிப்பு ஏற்படும்.

நான்காவது... உள்காதில் இருந்து மூளைக்குப் போகும் நரம்பில் ஏற்படும் கோளாறுகள் காரணமாகவும் காது கேளாமை ஏற்படலாம்.

முதல் இரண்டு வகை பிரச்னைகளுக்கு மருந்து மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குணமளிக்க முடியும். மற்ற இரண்டு வகை பிரச்னைகள் என்றால், சிகிச்சையோடு கருவிகள் பொருத்திதான் குணமளிக்க முடியும்.

பொதுவாக உள்காதில் 85 சதவிகிதம் வரை காது கேளாமை பிரச்னை இருக்கிறது என்று கண்டறிப்படும் பட்சத்தில் 'ஹியரிங் எய்ட்' பொருத்தி தீர்வு காண்போம். 85 சதவிகிதத்துக்கும் மேல் பிரச்னை என்றால், 'காக்ளியா இம்பிளான்டேஷன்' என்கிற கருவியை உள்காதில் பொருந்துவோம். நரம்பில் பாதிப்பு என்றால், 'பிரெய்ன் ஸ்டெம் இம்பிளான்டேஷன்’ என்கிற கருவியைப் பொருத்துவோம்.

உங்கள் மகனைப் பொறுத்தவரை, கீழே விழும்போது கண்களிலோ அல்லது காதுகளிலோ ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம். எனவே, காது தொடர்பான மருத்துவரிடம் அழைத்துச் சென்று, தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, முறையான சிகிச்சைகளைப் பெறுவதே நல்லது.''

ஆரோக்கியம் குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களுக்கும் மருத்துவ நிபுணர்கள் விளக்கம் தருகிறார்கள். கேள்விகளை ‘டியர் டாக்டர்’ என்று தலைப்பிட்டு,

‘அவள் விகடன்’ முகவரிக்கு அனுப்புங்கள். மருத்துவப் பதிவுகள் எதையும் சேர்த்து அனுப்ப வேண்டாம்.