'கும்மாளம்’ படத்துல அறிமுகமாகி, 'சொல்ல மறந்த கதை’யில கிராமத்துப் பொண்ணா நம்ம மனசுக்குள்ள சேர் போட்டு உட்கார்ந்த ரதி, இப்போ ஜெயா டி.வி. 'சாந்தி நிலையம்’ தொடர்ல டாக்டர் கேரக்டர்ல கலக்கறாங்க! ''நான் நிஜமாவே டாக்டர் ஆகியிருக்க வேண்டியது ரீட்டா!''னு சொன்ன ரதிக்கு, முகத்துல சின்ன சோகம்!

''சின்ன வயசுல ஸ்கூலுக்கு கட் அடிச்சுட்டு, டான்ஸ் கிளாஸுக்கு டிக் அடிச்சேன். டான்ஸ் மேல அப்படி ஒரு லவ். ஆனாலும், படிப்புலயும் கெட்டி. ப்ளஸ் டூ முடிச்சப்போ, பல் மருத்துவப் படிப்பான பி.டி.எஸ். சேர்ந் தேன். செகண்ட் இயர் படிச்சப்போ, டான்ஸ் புரோகிராம்களால சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. படிப்பா, நடிப்பானு பூவா, தலையா போட்டு பார்த்துட்டு, சினிமாவுக்கு வந்துட்டேன். தமிழ்,

தெலுங்குனு படங்கள் ரிலீஸ் ஆயிட்டே இருந்தது. கூடவே படிப்பைத் தொடர முடியாத ஏக்கமும் இருந்தது. அதுக்கு வடிகாலாத்தான், மூணு வருஷம் ரெகுலர் கோர்ஸா, பெங்களூரு ஆர்.ஜெ.எஸ். காலேஜுல பி.எஸ்சி. ஜெனடிக்ஸ் படிச்சு முடிச்சுட்டேன்!''னு சொன்ன ரதிகிட்ட, ''என்னது... காலேஜ் போனீங்களா?''னு மறுபடியும் ஆச்சர்யமானேன்.

''உஷ்! யாருக்கும் தெரியாது. அதனாலயே நிறைய சினிமா வாய்ப்புகளைத் தவிர்க்கவும் செய்தேன். ஆனா, கே.பி. சார் டைரக்ஷன்ங்கறதால, 'சாந்தி நிலையம்’ தொடருக்கு ஓடி வந்துட்டேன். அப்பப்போ காலேஜுக்கு லீவ் போட்டுட்டுதான் வந்தேன். இப்போ படிப்பை முடிச்சதால, பிரச்னையில்லாம ஷூட்டிங் போயிட்டிருக்கேன். அடுத்து மாஸ்டர் டிகிரி செய்யற ஐடியாவும் இருக்கு. இப்போ நடிக்கறதுக்கும், படிக்கறதுக்குமே நேரம் சரியா இருக்கறதால, கல்யாணம் பத்திக் கேட்டுடாதே ரீட்டா!''னு முந்திக்கிட்ட ரதி, கன்னட 'உதயா’ சேனல்ல, 'தங்கம்’ சீரியலோட கன்னட வெர்ஷனான 'பங்காரா’ சீரியல்லயும் கலக்குறாங்க!

ரதி... ரா ரா!

ஆர்.ஜே., வி.ஜே., ஈவன்ட் ஆங்கர், சீரியல் ஆர்ட்டிஸ்ட், கிளாஸிக்கல் டான்ஸர்னு டஜன் கணக்குல பெர்ஃபாமன்ஸ் கொடுக்குற ப்ரியா, இப்போ புது அவதாரமா நியூஸ் ரிப்போர்ட்டர் அண்ட் நியூஸ் ரீடர்னு பரிணமிச்சிருக்காங்க!

தன்னோட வீட்டு வாசல்ல என்னைப் பார்த்ததுமே, ''ஹாய் ரீட்டா! 'புதிய தலைமுறை’ நியூஸ் சேனல்ல பார்த்துட்டு பறந்து வந்துட்டியா?''னு காரணத்தை கண்டுபிடிச்சுட்டாங்க. அந்த அறிவுப் பொண்ணுக்கு, கை கொடுத்தேன்.

''நியூஸ் ரீடர் ஆகணுங்கிறது, என்னோட ரொம்ப நாள் கனவு. சமயம் பார்த்துக் கிடைச்ச சந்தர்ப்பம் இது. களத்துல குதிச்சுட்டேன்!''னு குஷியா பேச்சை ஆரம்பிச்ச ப்ரியா,

''சென்னை, எஸ்.ஐ.இ.டி. காலேஜ்ல சோஷியாலஜி படிச்சுட்டு இருந்தப்போவே, கால்ல மீடியா சக்கரத்தைக் கட்ட ஆரம்பிச்சுட்டேன். சூரியன் எஃப்.எம்-ல 'ஊர் சுத்தலாம் வாங்க’ நிகழ்ச்சி மூலமா பிள்ளையார் சுழி போட்டு, விஜய் டி.வி. 'என் பெயர் மீனாட்சி’ சீரியல்னு டிராவல் ஆகி, இப்போ 'புதிய தலைமுறை’ நியூஸ் வரைக்கும் பரபரனு போய்க்கிட்டு இருக்கேன்.

முன்ன எல்லாம் ஷூட் இருக்குற நாட்கள்ல மட்டும் அவுட்டிங் போயிட்டு, மற்ற நாட்கள்ல எல்லாம் வீட்ல ஆசையா வளர்க்கற பறவைகளோட பொழுதைப் போக்குவேன். இப்போ காலையில அஞ்சு மணிக்கே ஃப்ரெஷ்ஷாகி, வீட்ல இருந்து சேனல் ஆபீஸுக்கு கிளம்பிடறேன். 6 - 8 நியூஸ் ரீடிங் முடிச்சதும், உன்னப் போலவே ஒரு ரிப்போர்ட்டரா பேனா, பேப்பரோட ரவுண்ட்ஸ் கிளம்பிடறேன். லைஃப் இஸ் இன்ட்ரஸ்டிங்!''னு கன்னத்துல குழி விழ சிரிச்ச ப்ரியா, சமீபத்துல வெளிவந்த 'எங்கேயும் எப்போதும்’ படத்தை அடுத்து சில திரைப்படங்கள்லயும் கமிட் ஆகியிருக்காங்க.

''ரீட்டா... இனி என்னை ப்ரியா பிரின்ஸ்னு கூப்பிடு. யெஸ்... பிரின்ஸ் என் வருங்கால கணவர். ஒரு பிரைவேட் கம்பெனியில செக்ஷன் இன்சார்ஜா இருக்கார். லவ் மேரேஜ்தான். பட், போட்டோ எல்லாம் கேட்டுடாதே. பேரைச் சொன்னதுக்கே அவர்கிட்ட அவ்ளோ ஸாரி கேட்கணும். மேரேஜ் அன்னிக்கு உனக்கு அறிமுகப்படுத்துறேன்!''னு வெட்கமும், சிரிப்புமா முடிச்சாங்க ப்ரியா!

ஓ.கே... ஓ.கே... ப்ரியா பிரின்ஸ்!

விஜய் டி.வி-யில பரபரப்புக்கும், விறு விறுப்புக்கும் பஞ்சம் இல்லாத 'மகாராணி’ சீரியலுக்கு, நவம்பர் 4 க்ளைமாக்ஸ்!

''ஆமாம் ரீட்டா! செப்டம்பர் 10-ம் தேதியே கெட்டுகெதர் ஃபங்ஷன் முடிஞ்சுருச்சு. டீம்ல உள்ள 40 பேரும் அழுது தீர்த்துட்டாங்க! கிட்டத்தட்ட ரெண்டரை வருஷமா ஒண்ணா வொர்க் பண்ணிட்டு, பிரியப் போறோம்னா எவ்ளோ வலி இருக்கும்?''னு சொல்லி தானும் கலங்கின டைரக்டர் தாமரைக்கண்ணன்,

''இதுதான் ரீட்டா க்ளைமாக்ஸ்!''னு சஸ்பென்ஸ் வைக்காம முடிவைப் பகிர்ந்துக்கிட்டார்.

''மகாவுக்கும், ராணிக்கும் இடையே நடக்கும் யுத்த போராட்டம் முடிவுக்கு வருது. கதையின் மெயின் ரோலான ராணியோட பலம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு வர்ற இந்த நேரத்துல, மகாவோட தாய் சந்தியாவை, ராணி தீர்த்துக் கட்டிடறாங்க. திகில் நிறைஞ்ச இந்தச் சம்பவத்தை போலீஸ் விசாரிக்குது. தொடர்ந்து, ராணிக்கு பிரகாஷ் விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப... பிரகாஷை சந்திக்க மகா விரும்ப...னு சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத காட்சிகள் வரிசை கட்டும். சந்தியாவோட கொலையால களையப்படற உண்மைகள், ராணியோட முழுமையான பலம், பலவீனம்னு பயணிச்சு, முடிவைத் தொடுது தொடர்''னு சிம்பிளா புரிய வெச்சார்.

பை பை மகா... பை பை ராணி!

வாசகிகள் விமர்சனம்

சித்திரம் பேசுதடி!

''சித்திரம் டி.வி-யில் ஒளிபரப்பாகும் குழந்தை களுக்கான கார்ட்டூன் மிகமிக அருமையாக உள்ளது. எதிரிகளிடமிருந்து எப்படி தப்பிப்பது... உணவை எப்படித் தேடுவது என்றெல்லாம் தன் குட்டிகளுக்கு நரி கற்றுத் தருவது பற்றி சமீபத்தில் சித்திரமாகக் காட்டினார்கள். அடிதடி, காதில் கேட்க முடியாத திரைப்பட வசனங்கள் கொண்டவற்றை குழந்தைகள் பார்த்துக் கெடுவதைவிட, இப்படிப் பட்ட தகவல் நிறைந்த கார்ட்டூன்களைப் பார்ப்பது... அவர்களுடைய ஜி.கே-வுக்கு உதவும்'’ என்று அம்மாவுக்கு உரிய பொறுப்போடு பேசுகிறார் சென்னையில் இருந்து த.சிநேகா.

கண் முன்னே நிற்கும் குஷ்பு!

''ஜெயா டி.வி-யின் 'ஜாக்பாட்’ நிகழ்ச்சியை நதியா நடத்தியபோது, அவருடைய வார்த்தை உச்சரிப்பு சரியில்லாமல் இருந்தது. புதிதாக நிகழ்ச்சியை நடத்த வந்திருக்கும் சிம்ரனிடம் இதைச் சொல்லிவிட்டார்கள் போல... ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிறுத்தி, சிறுகுழந்தை போல பேசுகிறார். உச்சரிப்பும் சரியில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது... அந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய குஷ்பு கண் முன்னே வந்து ஏங்க வைக்கிறார். இதுபோன்ற பொது அறிவு நிகழ்ச்சிக்கு நன்கு தமிழ் பேசத் தெரிந்த நபர்கள் வேறு யாரும் கிடைக்கவில்லையோ?'' என்று குமுறல் கேள்வி எழுப்புகிறார் பாண்டிச்சேரியில் இருந்து அனுராதா ரமேஷ்.

பரிசு முக்கியமல்ல!

''மக்கள் தொலைக்காட்சியில் மாலை ஏழு முதல் எட்டு மணி வரை ஒளிபரப்பாகிறது 'யாருக்கு ஆயிரம்’ நிகழ்ச்சி. ஒவ்வொரு கேள்விக் கும் சரியாக பதில் சொல்பவர்களுக்கு நூறு ரூபாயைக் கொடுக்கிறார்கள். நூறு ரூபாய் பெரிய விஷயம் இல்லை. ஆனால், பொது அறிவு சார்ந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வத்தைத் தூண்டிவிடும் வகையில் இருப்பதுதான் முக்கியம். படிப்பு, வேலை என அனைத்துக்கும் உபயோகமாக இருக்குமே! அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி'’ என்று பரிந்துரை செய்கிறார் சென்னையில் இருந்து விஜயா.