சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் எப்படிப் பணத்தை சேமிக்க முடியும் என்பதை சென்ற இதழில் பார்த்தோம். சேமிப்பது இருக்கட்டும்... அதைவிட முக்கியம், சேமிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கணவனோ, மனைவியோ ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொள்வதுதான். அப்படியில்லை என்றால்... நம் சேமிப்பு, எதற்காக சேமிக்கிறோமோ அந்த நோக்கத்துக்கு துளிகூட பயன்பட வாய்ப்பில்லாமல் போகக்கூடிய ஆபத்து காத்திருக்கிறது என்பதை அனைவருமே கவனத்தில் கொள்ள வேண்டும்!

எங்கள் வாடிக்கையாளர் ஒருவர், அரசு நிறுவனத்தில் வேலையில் இருந்தார். மனைவி... ஹோம் மேக்கர். தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். மாதம் 8,000 ரூபாய் சம்பளம் வாங்கியவர், தன் பிள்ளைகள் என்ன கேட்டாலும், எவ்வளவு விலையில் கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவார். சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென புயல். சர்க்கரை நோய் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னி, கண் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்து, கடைசியில் இறந்தேவிட்டார் கணவன்.

வெளியுலக அனுபவமே இல்லாத மனைவிக்கு, 'மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேனோ' எனக் கதறுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. கணவரின் அலுவலகத்திலிருந்து, முறைப்படி வரவேண்டிய கொஞ்ச பணம் கிடைத்தது. மற்றபடி... எதில் எதில் எல்லாம் அவர் முதலீடு செய்து வைத்திருந்தார், இன்ஷூரன்ஸ் செலுத்தி வந்தார் போன்ற எந்தத் தகவலையும் மனைவியிடம் கூறியிருக்கவில்லை. இதனால், ரொம்பவே திண்டாடிப் போனார் மனைவி. கணவன் சம்பந்தப்பட்ட ஃபைல்களை எடுத்து ஆராய்ந்து, இன்ஷூரன்ஸ் எடுத்த விவரம், முதலீடு செய்த விவரங்களை எல்லாம் நாங்கள் கண்டுபிடித்து, க்ளெய்ம் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இன்னொரு குடும்பம்.... பெரும்பாலான கணவர்கள் போலவே, பணம் தொடர்பான எந்த விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்துகொள்ளாத அந்த கணவர், திடீரென விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். மனைவியின் 10 பவுன் நகையை வாங்கி அடகு வைத்திருந்தார். அந்தப் பணத்தை என்ன செய்தார்... யாருக்காவது கடனாகக் கொடுத்தாரா என எந்த விவரமும் தெரியவில்லை. நல்லவேளையாக மனைவியின் பெயரில் இருந்த வங்கிக் கணக்கில் அடகு வைத்ததால், அடகு விவரம் தெரியவந்தது. பணத்தை ஏற்பாடு செய்து மீட்டுவிட்டனர். ஆனால், அடகு வைத்துப் பெற்ற பணத்தை கணவர் என்ன செய்தார் என்பது கடைசி வரை தெரியவேயில்லை. இன்ஷூரன்ஸ், முதலீடு என்று வேறு விவரங்களையும்கூட மனைவியிடம் பகிர்ந்து கொள்ளாத காரணத்தால்... பத்தாம் வகுப்புப் படிக்கும் மகளையும், ஐந்து வயது மகனையும் வைத்துக் கொண்டு அந்தப் பெண் தடுமாறுவதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இதுபோல் ஏராளமான குடும்பங்களை உதாரணமாகக் காட்டமுடியும். வேலைக்குப் போய் சம்பாதிக்கும் கணவன்கள்... முதலீடு, கடன், காப்பீடு போன்ற தகவல்களை மனைவியுடன் பகிர்ந்து கொள்வதில்லை. தனக்குப் பிறகு தன் குடும்பம் கஷ்டப்படக்கூடாது என்கிற காரணத்துக்காகத்தான் இன்ஷூரன்ஸ் எடுக்கிறார்கள். ஆனால், அதுபற்றிய விவரங்களைக்கூட குடும்பத்தினரிடம் சொல்லாமல் விட்டுவிட்டால், குடும்பத்துக்கு அந்தப் பணம் கிடைக்காமலே போய்விடும் என்பதை ஏன் உணர்வதில்லை?

கணவனோ, மனைவியோ, சம்பாதிப்பது ஐந்து ரூபாயோ, ஐம்பதாயிரம் ரூபாயோ... அது பற்றி உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கூடவே, ஒரு நோட்டிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ ஒரு 'எக்ஸல் ஷீட்’டில் முதலீட்டு முறைகளைப் பதிவு செய்து வையுங்கள். இரண்டு பேரில் யார் மறந்தாலும் பிரீமியம் கட்டும் நாள், மெச்சூரிட்டி ஆகும் நாள் போன்ற வற்றை ஒருவராவது ஞாபகப்படுத்துவார்கள்.

உங்களின் ஒவ்வொரு முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் ஒரு ஃபைல் ரெடி செய்து வைப்பதோடு, நகல் எடுத்தும் வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, இன்ஷூரன்ஸ் பாலிசி பத்திரத்தை நகல் எடுத்து வைத்துக் கொண்டால், பாலிசி பத்திரம் காணாமல் போய்விட்டால் அந்த நகலைக் கொண்டு டூப்ளிகேட் பெறமுடியும்.

சில ஆண்கள், தன் சம்பளப் பணத்தை தானே வைத்துக்கொண்டு, வீட்டுக்குத் தேவையானதை வாங்கிப் போடுவார்கள். அப்படி இல்லாமல் மனைவியிடம் கொடுத்துச் செலவு செய்யச் சொல்லும்போது, அந்தப் பொறுப்பில் அவர் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செலவு செய்வார். சம்பாதித்த பணத்தை ஒழுங்கான முறையில் முதலீடு செய்வது சிறந்த வழி என்றால், அதனை மறைக்காமல் வெளிப்படையாக குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்வது இன்னொரு சிறந்த வழி.

என்ன தோழிகளே... இன்றே உங்கள் கணவரிடம் விவரங்களைக் கேட்க ரெடியாகிவிட்டீர்களா..?

- பணம் பெருகும்...