தீபாவளி சீஸன் வந்துவிட்டதை நம் வரவேற்பறை வந்து முதலில் உணர்த்துபவை... விளம்பரங்கள்தான்! ஆடைகளில் இருந்து... இனிப்பு, பட்டாசு, மொபைல், சூப்பர் மார்க்கெட் வரை தங்களின் தீபாவளி ஆஃபர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மாஸ் வழி... விளம்பரங்கள்தான்!

இந்தத் தீபாவளி சீஸன் விளம்பரங்களுக்காக செம பரபரப்பாக 'ஷூட்’டுக்கு ஓடிக்கொண்டிருக்கும் டாப் விளம்பர மாடல்களில், இவர்கள் கவனிக்கத் தக்கவர்கள்...

போத்தீஸ், ராசி சில்க்ஸ், அருண் ஐஸ்கிரீம்... என்று அடிக்கடி வந்து அழகு முகம் காட்டும் மாடல், ஸ்வேதா ஸ்ரீதர்!

''உங்களுக்கு எல்லாம் ஒரு நாள்தானே தீபாவளி..?! ஆனா, எங்களைப் போன்ற மாடல்ஸுக்கு ஒரு மாதத்துக்கு முன்னாலயே அது தொடங்கியாச்சு. குறிப்பா, ஜவுளிக் கடைகளுக்கான விளம்பரங்கள் புண்ணியத்தில் தினம் தினம் புது டிரெஸ் கொண்டாட்டம்தான். ஆனா, அதுவே ஒரு கட்டத்தில் நம்மை டயர்ட் ஆக்கிடும். ஒரு விளம்பரத்துக்கு 10 - 15 டிரெஸ்கூட மாற்ற வேண்டிவரும். இயக்குநர் எதிர்பார்க்கிற அவுட்புட் வர்ற வரைக்கும்... ஒவ்வொரு உடையா மாத்திட்டே இருக்கணும்.

ஸ்கிரீன்ல நீங்க பார்க்கிற 30 செகண்ட்ஸ் விளம்பரத்துக்கு, மூணு நாளைக்கும் மேலகூட வேலை செய்வோம். அந்த விளம்பரம் அவ்ளோ பெர்ஃபெக்ட்டா முடிஞ்சு, அந்த சீஸனுக்கு ஹிட் அடிக்கும் பாருங்க... எங்க டீமுக்கே அதுதான் தீபாவளி!''

- அப்படிப் பல ஹிட் கொடுத்த பூரிப்பு அவர் முகத்தில்.

''ராத்திரி, அதிகாலைனு எந்த நேரம் ஷூட் முடிஞ்சு வீட்டுக்குப் போனாலும், முதல் வேலையா சுத்தமான தேங்காய் எண்ணெய் வெச்சு மேக்கப்பை ரிமூவ் பண்ணிட்டு, குளிச்சுட்டுத்தான் மறுவேலை. செட், அவுட்டோர்னு எங்க ஷூட் நடந்தாலும், டிரில் வாங்குவாங்க. நிறைய தண்ணீர் குடிக்கறது, நீர்ச்சத்து வெளியேறாம நம்மைக் காப்பாத்தும். சருமமும் வறண்டு போகாம இருக்கும்.

ஓ... ரொம்ப பயமுறுத்துறேனா..? கஷ்டம் இல்லாத வேலை எது? அப்படித்தான் இதுவும். ஆனா, டீன் கேர்ள்ஸ் இதுக்கு நிறைய வரணும்ங்கிறது என்னோட விருப்பம். அடுத்த வருஷ தீபாவளி சமயத்துல 'அதை வாங்குங்க, இதை வாங்குங்க’னு நீங்களும் பாட்டு பாடலாம்! லா லா லா!''

- கன்னம் டாலடிக்க சிரிக்கிறார் ஸ்வேதா!

'சிறுத்தை’ படத்தில் கார்த்திக்கின் மகளாக நடித்து நெகிழ வைத்த குழந்தை நட்சத்திரம், ரக்ஷனா. விளம் பரங்களிலும் பிஸியோ பிஸி! சென்னை சில்க்ஸ், பூர்விகா மொபைல்ஸ், கணபதி சில்க்ஸ், ப்ரீத்தி மிக்ஸி என ஏற்கெனவே கலக்கிய ரக்ஷனா, இந்த தீபாவளி சீஸனில்... ஆர்.எம்.கே.வி., சேகர் எம்போரி யம், அரிஹந்த், ஸ்ரீ கிருஷ்ணா கலெக்ஷன்ஸ், ஏ.என்.எஸ்.ஜுவல்லரி என்று அடுத்த ரவுண்ட் வருகிறார்.

எல்.கே.ஜி. படிக்கும் குட்டிப்புயல் ரக்ஷனாவின் அம்மா சீதா பத்மநாபன், ''ஆரம்பத்தில் இவள நடிக்க வைக்க பாக்ஸ் பாக்ஸா சாக்லேட்ஸ் லஞ்சம் கொடுப்போம். இப்போ ரெண்டு, மூணு டேக்ஸ்ல 'ஓ.கே’ வாங்குற குட் ஆர்ட்டிஸ்ட் ஆயிட்டா. சமயங்கள்ல நாள் முழுக்க ஷூட் இருக்கும். அப்போ கேரவன்ல தூங்கிக்குவா'' என்ற சீதாவை,

''மம்மி... என்னைத்தான் பேட்டி எடுக்க வந்திருக்காங்க. நான்தான் பேசுவேன்!'' என்று ஓவர்டேக் செய்து 'ஸீன்’-க்குள் வந்தாள் ரக்ஷனா.

''தீபாவளி ஷூட்டிங் எல்லாம் ஓவர். இனி, தீபாவளி ஷாப்பிங் கூட்டிட்டுப் போறேன்னு அம்மா சொல்லி இருக்காங்க. பிங்க் கலர்ல ஸ்கர்ட் அண்ட் டாப் வாங்கணும். ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கற 'ஸ்கேட்டிங் ஸ்கூட்டி’ வாங்கணும். அப்புறம்... தீபாவளி அன்னிக்கு என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுக்கு எல்லாம் விஷ் பண்ணுவேன். ம்... கார்த்தி அங்கிள், சூர்யா அங்கிள், தமன்னா ஆன்ட்டி, அனுஷ்கா ஆன்ட்டி எல்லோருக்கும் போன் பண்ணி விஷ் பண்ணுவேன். இதுதான் என் தீபாவளி பிளான்!''

- குட்டிக்கு குஷி தாங்கவில்லை!

தென்னிந்திய மொழி விளம்பரங்களில் ரவுண்ட் வரும் 'சாக்லேட் பாய்’ ஹர்தீப் சிங் ரானா... எம்.ஆர்.எஃப் டயர்ஸ், ராண் இண்டியா டி.எம்.டி பார்ஸ், ஆர்பிட் சூயிங்கம், ஃபான்டா என்று தமிழ்க் குடும்பங்களுக்கு அறிமுகமாகி இருக்கும் நார்த் இண்டியன்!

''மதுரை ராஜா சில்க்ஸ், ஆர்.எஸ். பிரதர்ஸ்னு நான் பண்ணின ரெண்டு விளம்பரங்கள்லயும் ப்ரியாமணிகூட எனக்குக் கல்யாண ஸீன்கள் வரும். 'என்னய்யா எப்போ பார்த்தாலும் எனக்குத் தாலி கட்டிட்டே இருக்கே!’னு ஜாலியா கலாய்ப்பாங்க ப்ரியாமணி. சிநேகா செட்ல ரொம்ப கூலா இருப்பாங்க!'' என்று அனுபவங்கள் செப்பியவர்,

''என்னை டிரில் வாங்கின விளம்பரம்னா, 'பேரகான் சப்பல்ஸ்’. டைரக்டர் லதா மேனன், அவங்களோட 'ஐரிஸ் புரொடக்ஷன்’ல பண்ணின விளம்பரம். மொத்தம் மூணு நாளும் உச்சி வெயில்ல எடுத்த விளம்பரம் அது.

இந்த பீல்டுக்கு வர்றதுக்கு அம்மா, அப்பா பிரபலமானவங்களா இருக்கணும்னு அவசியமில்லை. அழகும், திறமையும் இருந்தா... யூ ஆர் செலெக்டட். ஆனா, இதை முழுநேர வேலையா பண்ண முடியாது. பகுதி நேர வேலைக்கு ஓ.கே. பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஒரு விளம்பரம் பண்ணிட்டா, குறைந்தது ரெண்டு வருஷத்துக்கு அவங்க மறுபடியும் நம்மை புக் பண்ணமாட்டாங்க. ரிபீட் ஆகறத அவங்க விரும்பறதில்லைங்கிறது தான் காரணம்''

- ஆஃப் ஸ்கிரீனும் புரியவைத்தார் ஹர்தீப்!

ரிமோட் ஜம்ப்பில் இனி இவர்களைக் கடக்கும்போது, இந்தப் பக்கங்கள் நினைவில் வரும்தானே..?!