Published:Updated:

ருக்மணி தேவி அருண்டேல்

ருக்மணி தேவி அருண்டேல்

வர்ணனை: ஆசார அனுஷ்டானங்களில் ஊறிய நீலகண்ட சாஸ்திரிகளின் மகளாக 1904-ம் ஆண்டில் பிறந்தவர் ருக்மணி தேவி. இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த அன்னி பெசன்ட் அம்மையாரின் 'தியாசாபிகல் சொஸைட்டி' என்ற சமூக சேவை மையத்துடன் சாஸ்திரிகளுக்கு ஈடுபாடு. இது, ருக்மணிக்கு ஏழு வயதிலிருந்தே அன்னி பெசன்ட்டுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை உருவாக்கியது. 16 வயது இருக்கும்போது, அங்கே பணியாற்றிய ஜார்ஜ் சிட்னி அருண்டேல் எனும் ஆங்கிலேயருடன் காதல் வயப்பட்டார் ருக்மணி. 'நம் ஜாதி, மதம், கலாசாரம் என்னாவது?’ என்று கூக்குரலிட்ட தன் சமூகத்தை சட்டை செய்யாமல், புரட்சிப் பெண்ணாக அவரையே மணமுடித்தார்.

ருக்மணி தேவி அருண்டேல்
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சம்பவம்: லண்டனில், 1924-ம் ஆண்டு பிரபல ரஷ்ய நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவாவிடம், 'பாலே' நடனத்தைக் கற்றுத் தேர்ந்தார் ருக்மணி. அப்போது, 'உங்களின் பாரம்பரிய பரதக் கலைக்கு நீ புத்துணர்ச்சி ஊட்டலாமே’ என்று ஆர்வத்தைத் தூண்டிஇருக்கிறார் அன்னா பாவ்லோவா. பரதம் என்பது கௌரவத்துக்குரிய ஒன்றாக பார்க்கப்படாத காலம் அது. அதனால், அதைச் சொல்லித் தரவும் அவ்வளவாக ஆட்கள் இல்லை. பரதக் கலை ஆசிரியர்களைத் தேடிப்பிடித்து, பரதம் பயின்றார் ருக்மணி. காதல் திருமணம் போலவே... இதுவும் சமூகத்திலிருந்து கடும் விமர்சனங்களையும், மோசமான தாக்குதல்களையுமே பரிசுகளாகப் பெற்றுத் தந்தது.

பாராட்டு: நலிந்திருந்த நெசவுத் தொழிலை ஊக்கு விப்பதற்காக இந்திய அரசின் உதவியோடு சில நெசவு ஆலைகளை நிறுவி னார். இந்திய நாடாளு மன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி இவரைத் தேடி வந்தது. அப்போது... விலங்குவதை தடைச் சட் டத்தை நடைமுறைப்படுத்து வதில் முக்கிய பங்காற்றி னார். பத்ம பூஷண் உள் ளிட்ட பல விருதுகள் மட்டு மல்ல... இந்திய குடியரசுத் தலைவர் பதவியும் இவரைத் தேடி வந்தது. 'என் சேவைக்கு இடையூறாக இருக்கும்' என்று சொல்லி மறுத்துவிட்டார் ருக்மணி தேவி அருண்டேல்.

ருக்மணி தேவி அருண்டேல்

சாதனை: சென்னை, மியூஸிக் அகாடமியில், 1933-ம் ஆண்டு பந்தநல்லூர் சகோதரிகளின் பரதநாட்டியத்தில் மனதைப் பறிகொடுத்த ருக்மணி, ''என்னை சிஷ்யையாக ஏற்றுக் கொள்ளுங்கள்'’ என்று பந்தநல்லூர், மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் போய் நின்றார். அவர் ஏற்றுக் கொள்ள மறுக்கவே, விடாமல் போராடி அதில் வென்றார். 'வால்மீகி ராமாயணம்' எனும் நாட்டிய நிகழ்ச்சியைத் தானே வடிவமைத்து, அரங்கேற்றினார். ஒரு காலத்தில் 'தேவதாசிகள் நட னம்' என்று ஒதுக்கப்பட்டு வந்த பரத நாட்டியம், பக்திக்குரிய நாட்டியமாக உருமாறியதில் இவருடைய பங்கு குறிப்பிடத் தக்கது. 'கலாஷேத்ரா’ எனும் நாட்டியப் பள்ளியை உருவாக்கி, பரதக் கலைக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தார்!

கறுப்பு வெள்ளை
ரேவதி