Published:Updated:

''ஏ.டி.ஜி.பி மகளை கான்ஸ்டபிள் வீடியோ எடுத்தது தவறுதான்!'' - வழக்கறிஞர் அஜிதா

''ஏ.டி.ஜி.பி மகளை கான்ஸ்டபிள் வீடியோ எடுத்தது தவறுதான்!'' - வழக்கறிஞர் அஜிதா
News
''ஏ.டி.ஜி.பி மகளை கான்ஸ்டபிள் வீடியோ எடுத்தது தவறுதான்!'' - வழக்கறிஞர் அஜிதா

''ஏ.டி.ஜி.பி மகளை கான்ஸ்டபிள் வீடியோ எடுத்தது தவறுதான்!'' - வழக்கறிஞர் அஜிதா

மீப காலமாக மொபைல் கேமரா மூலமாக எடுக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் உடனுக்குடன் யார் யாராலோ ஷேர் செய்யப்படுகிறது. நல்லதோ கெட்டதோ அந்த வீடியோக்களை நாம் பார்த்தாக வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறோம். சில வீடியோக்களால் நல்லதும் நடக்கிறது, பல வீடியோக்களால் குடும்பங்களின் நிம்மதியும் குலைகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

சில சமயம் நம்முடைய பிரைவசி எனப்படும் எல்லைக்குள் நுழையவும் தவறுவதில்லை. வண்டி ஓட்டும் அம்மா பின்னால் அமர்ந்து ஹோம்வொர்க் செய்யும் சிறுவனை வீடியோ எடுத்து 'நல்லா செய்றீங்கடா ஹோம்வொர்க்... இந்த அம்மா அந்தப் பையனை ஹோம்வொர்க் செய்யச் சொல்லி கொடுமைப்படுத்துறாங்க பாருங்க'' என்கிற அளவுக்கு எல்லை மீறிப் போகிறது வீடியோக்களின் தரம். எல்லைகள் எதுவரை என்று தெரியாதா என்று நமக்கு நினைக்கத் தோன்றாமலில்லை. ஆண், பெண் பாகுபாடில்லாமல் எடுத்து பகிரப்படும் வீடியோக்களுக்கு மத்தியில் சமீபத்தில் 'நான் ஏ.டி.ஜி.பி மகள்' என்று கான்ஸ்டபிளிடம் பேசிய பெண் வீடியோ பரவலானது. அந்தக் கான்ஸ்டபிள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது காவல்துறை.

மேலே சொன்ன சம்பவத்தையொட்டி நமக்கு சில கேள்விகள் எழுந்தன. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கேள்வி 1:  ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல்,  அவரை பொது இடத்தில் வைத்து வீடியோ எடுப்பது குற்றம் என்று சொல்கிற சட்டங்கள் இருக்கின்றனவா. இருக்கிறது என்றால் இந்த அத்துமீறலுக்கான தண்டனை என்ன?

கேள்வி 2: பெண்ணின் சம்மதமில்லாமல், அவரை ஒருவர் வீடியோ எடுத்தால், அந்த நபரையும் அந்தச் சூழ்நிலையையும் எப்படிச் சமாளிப்பது?

கேள்வி 3: குற்றங்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக, வீடியோ ஆதாரங்களை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்கின்றனவா? 

என நம் கேள்விகளை சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜிதா முன் வைத்தோம்

''உங்களுக்கு உரிமையில்லாத பெண்ணை மட்டுமல்ல, உங்கள் வீட்டுப் பெண்ணைக்கூட, அவர்களின் சம்மதமில்லாமல், அந்தரங்க விஷயங்களை வீடியோ எடுப்பதும் அதைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதும் சட்டப்படி தவறுதான். ஏனென்றால், அந்த வீடியோவை மார்பிங் செய்து, சம்பந்தப்பட்ட பெண்ணை எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம் என்பதால், இதை கிரிமினல் குற்றமாகவே சட்டம் பார்க்கும். குற்றம் நிரூபிக்கப்படுகிற பட்சத்தில், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து 2 அல்லது 3 வருடங்கள் சிறைத்தண்டனைகூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது'' என்றவர், 'நான் ஏ.டி.ஜி.பி மகள்' என்று வெளிவந்த வீடியோ குறித்தும் பேசினார். 

 'என்னிடம் மிஸ் பிஹேவ் பண்ணார்; கெட்ட வார்த்தை பேசினார்' என்று அந்தப் பெண் தன்மீது குற்றம் சுமத்திவிட்டால் என்னாவது என்று நினைத்து தற்காப்புக்காகக்கூட அந்தக் கான்ஸ்டபிள் அந்த வீடியோவை எடுத்திருக்கலாம் என்பது ஒரு கோணம். தன் சீனியர் ஆஃபீஸரை அவமானப்படுத்தச் செய்த முயற்சி என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், எடுத்த வீடியோவை தன் பாதுகாப்புக்கு வேண்டுமானால் அவர் வைத்துக்கொள்ளலாமே தவிர, சமூக வலைதளத்தில் அப்லோடு செய்திருக்கவே கூடாது. அதை நான் செய்யவில்லை என்று அவர் மறுத்தாலும், அந்தக் குற்றத்துக்கு அவர்தான் பொறுப்பாளி. இதன் மூலம், அந்தப் பெண்ணின் வீடியோவை வைத்து மற்றவர்கள் மீம்ஸ் போடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் அந்தக் கான்ஸ்டபிள். இது சட்டப்படியும் சரி கிடையாது; நியாயப்படியும் சரி கிடையாது. 

வீடியோ ஆதாரங்களை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளுமா என்றால், ஏற்றுக்கொள்ளும். ஆனால், அதற்கு சில வரையறைகள் இருக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் எலெக்ட்ரானிக் ஆதாரங்கள் என்பதற்கான வாய்ப்பே இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஒரு குற்றம் நடந்ததற்கான ஆதாரத்தை மட்டுமல்லாமல் ,'நான் குற்றவாளி இல்லை' என்று  நிரூபிக்கவும் வீடியோ ஆதாரங்கள் உதவும். ஒரு வீடியோவை ஆதாரமாக நீதிமன்றத்தில் கொடுக்கும்போது, அது உண்மையானதுதானா அல்லது மார்பிங் செய்யப்பட்டதா, வீடியோவில் இருக்கிற காட்சிகள் உண்மைதானா, புகைப்படம் எடுத்த நேரம், போனுடைய ஒரிஜினல் இப்படி சில விஷயங்களைநிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கப்படும்பட்சத்தில், வீடியோ ஆதாரத்தைச் சாட்சியாக எடுத்துக் கொள்வதற்கு எல்லா முகாந்திரமும் இருக்கிறது'' என்கிறார் வழக்கறிஞர் அஜிதா. 

''பொது இடத்தில் சண்டை நடக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் நிகழ்வுகள் நடக்கும்போதோ வீடியோ எடுக்கக் கூடாது என்று உத்தரவு போட முடியாது. சமூக வலைதளங்கள், அதையொட்டிய பிரச்னைகள் எல்லாம் சமீப சில வருடங்களாகத் தானே அதிகமாக நடக்கின்றன. அதனால், இந்த விஷயத்தில் சட்டம் தெளிவான முடிவு எடுப்பதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும். 

ஆனால், ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் வீடியோ எடுக்கிறபட்சத்தில் அதைப் பெண்கள் மீதான வன்கொடுமையாக மட்டுமே பார்க்கப்படும்.