சூரிய உதயம் ஆரம்பிக்கும் அதிகாலை நேரம். பறவைகளின் ‘க்ரீச் க்ரீச் ‘சத்தம் மேள ஒலியாகவும், வண்டுகளின் ரீங்காரம் நாதஸ்வர முழக்கமாகவும் உருமாறி மங்கள கீதம் முழங்க... சிலுசிலு காற்றுடன் சேர்ந்து வீசும் பூக்கள் வாசத்தை சுவாசித்துக்கொண்டே மணக்க மணக்க மணம் முடித்தால்... ஆஹா, இதுவல்லவோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்!

“ மலைமலையாக காசை கொட்டி நடத்தப்படும் பிரமாண்ட திருமணங்களினால், ‘பொண்ணோட கல்யாணத்தை, ராஜா வீட்டு கல்யாணம் மாதிரி நல்லா கிராண்டா நடத்திட்டாரு’ எனும் உறவினர்களின் பாராட்டினால் திருப்தி கிடைக்குமே தவிர, நமக்கான ஆத்ம திருப்தி... நம் மனதுக்கு நெருக்கமான சூழலில் செய்யும் திருமணத்தில்தான் கிடைக்கும்’’ என்கிறார் சென்னை, மதுரவாயலில் அமைந்துள்ள `சிவ பார்வதி புஷ்பா கார்டன்ஸ்’ஸின் சீஃப் ஆபரேட்டிங் ஆபீசர் நிருபமா ரெட்டி.

“அந்தக் காலத்தில் வீட்டிலேயே நடத்தப்பட்ட கல்யாணங்கள்தான் அதிகம். காலப் போக்கில் திருமண மண்டபங்கள் உருவாக, அதன் பிறகு முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட ஹை டெக் மண்டபங்கள் என உருமாறி, இப்போது திருமண மண்டபங்களிலேயே... ஆனால், ‘தீம் வெடிங்’ எனும் கான்செப்ட் திருமணங்கள் நடக்கின்றன.

இதைத் தாண்டி இப்போதைய ட்ரெண்ட் அவுட்டோர் வெடிங். அதாவது பீச் வெடிங், திராட்சைத் தோட்டத்தில் திருமணம், ரிசார்ட்டுகளில் திருமணம்... வெளிநாடுகளில் பார்த்தால், நீருக்கடியில் திருமணம் என எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதுமாதிரி பலவகையான அவுட்டோர் வெடிங் கான்செப்ட் மெதுமெதுவாக இங்கேயும் ஆரம்பமாகிவிட்டது.

இன்றைய தலைமுறை வித்தியாசமாக திருமணம் செய்துகொள்ளவே அதிகம் விரும்புகிறார்கள். `கிராண்டா வெடிங் பண்ணிக்கிட்டேன்’ என்பதைவிட, கான்செப்ட் வெடிங் என்பதுதான் இன்றைய கெளரவமாக மாறிவிட்டது. ஆனால், கொண்டாட்டத்துடன் ஆத்ம திருப்தியும் கிடைக்க... திறந்தவெளியில் நடைபெறும் எழில் கொஞ்சும் இயற்கைச் சூழல் வெடிங்தான் சரியான தேர்வு’’ என்பவர்...

“பொதுவாக வடஇந்தியர்கள்தான் திருமணத்துக்கு அதிகம் செலவழிப்பார்கள் என்ற கருத்து மாறி தென்னிந்திய மக்களும் திருமணத்துக்காக அதிகம் செலவு செய்ய தயாராகிவிட்டார்கள். ஆனால், இதுபோன்ற அவுட்டோர் வெடிங்கில், அதிகம் செலவு செய்யும் திருமணத்தில் கிடைக்கும் உறவினர்களின் பாராட்டினால் ஏற்படும் திருப்தியைவிட, இயற்கை சூழலில் நடக்கும் திருமணத்தினால் கிடைக்கக்கூடிய மனத்திருப்தியோடுகூட, பட்ஜெட்டிலேயே திருமணத்தை முடிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது.

இன்றைய இளைஞர்கள் அதிகமாக கூட்டம் சேர்த்து செய்யக்கூடிய திருமணத்தைவிட அளவாக உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து திருமணம் செய்வதில்தான் ஆர்வமாக இருக்கின்றனர். அதற்்கேற்றாற்போல், 200 நபர்களுக்கான திறந்தவெளி, 500 நபர்களுக்கானது என விருந்தினர் கூட்டத்துக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுக்கும் விதத்தில் பல அளவுகளில் அவுட்டோர் வெடிங் ஏரியாக்கள் இருக்கின்றன. அதுமட்டும் இல்லை... வெறும் புல்வெளி, அல்லது தாமரைக் குளம், ஏரி என பல விதமான வகைகளிலும் இருக்கின்றன.

1970-ல் வந்த தமிழ் சினிமாக்களைப் பார்த்தால், அதில் ஹைடெக் திருமணங்களாக காட்டப்படும் காட்சிகளில் எல்லாமே இதுபோன்ற திறந்தவெளியில் சீரியல் பல்புகள் அமைத்து நடப்பதுபோல் இருக்கும். இதுபோன்ற பழைய கலாசாரம்தான் இப்போதைய ஃபேஷனாக மாறிவருகிறது. இயற்கையான சூழலில் நடக்கும் திருமணம் எளிமையாக மனதுக்கு திருப்தியாகவும், அதே சமயம் இங்கு நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சி நிலவொளியில், நட்சத்திரங்கள் மின்ன, கூடவே சீரியல் பல்புகள் என பார்க்க மிகவும் பிரமாண்டமாக இருக்கும்’’ என்பவர் தொடர்ந்து,

“டெஸ்டினேஷன் வெடிங் என்பது பலரின் கனவாக இருக்கும். அதற்்கான பயண செலவுகள், தங்குவதற்கான செலவுகள் என நேரமும் பணமும் அதிகம் செலவாகும். ஆனால், டெஸ்டினேஷன் திருமணக் கொண்டாட்டத்துக்கு ஈடாக, பட்ஜெட்டுக்கும் ஏற்ற வகையில் இதுபோன்ற இயற்கை சூழல் திருமணங்கள் அனைவருக்கும் கைகொடுக்கும். பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து மாறுபட்ட ஒரு இயற்கை சூழலில் உறவினர்களுடன் நேரம் கழிப்பதும் இது போன்ற திருமணங்களின் கூடுதல் சிறப்பு” என்று முடித்தார்.

இனி, இனிக்க இனிக்க இயற்கை திருமணம்தான்!

இந்துலேகா.சி