சமீபத்தில் மணம் முடித்த சினிமா, சின்னத்திரை நட்சத்திரங்கள்... அவர்களுடைய வாழ்க்கைத் துணைவர்கள், தங்கள் புதுமணவாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறார்கள்...

‘‘லண்டன் பொண்ணு செட் ஆகுமானு யோசிச்சேன்!’’

‘மாலைப் பொழுதின் மயக்கத் திலே’, ‘மாயா’ படங்களில் நடித்த நடிகர் ஆரி, லண்டன் பெண்ணான நதியாவை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

‘‘நதியா, நான் நடிச்ச ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தை லண்டன்ல பார்த்திருக்காங்க. அந்தப் படமும், என் நடிப்பும் அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அதை அவங்க தன்னோட ஃப்ரெண்ட் ஒருத்தவங்ககிட்ட சொல்ல, ‘ஆரி என் நண்பர்தான்’னு சொன்ன அவங்களோட ஃப்ரெண்ட், என்னோட போன் நம்பரையும் நதியாகிட்ட கொடுத்திருக்காங்க. நதியா எனக்கு கால் பண்ணி, என் நடிப்பைப் பாராட்டி, தோழி ஆனாங்க.

ரெண்டரை வருஷம் நல்லபடியா போயிட்டு இருந்தப்போ, ‘நீ ஏன் உனக்கு வர்ற வரன்களை எல்லாம் தட்டிக்கழிச்சுட்டே இருக்க?’னு ஒருநாள் நான் நதியாகிட்ட கேட்டேன். ‘ஏன், நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?’னு கேட்டுட்டாங்க. எனக்கு சந்தோஷத்தைவிட ஷாக்தான் அதிகமா இருந்தது. லண்டன் பொண்ணு, அங்க ஹெச்.ஆர்-ல ஆயிரம் பேருக்கு பயிற்சி கொடுத்திட்டு இருக்கிற பொண்ணு நமக்கும், நம்ம ஊருக்கும் செட் ஆகுமானு எனக்குத் தயக்கம். நதியா விடாம துரத்திட்டே இருந்தாங்க. நானும் விலகிட்டே இருந்தேன். ஒருநாள் ஃப்ளைட் பிடிச்சு லண்டன்ல இருந்து சென்னைக்கே கிளம்பி வந்துட்டாங்க. ரெண்டு பேரும் உட்கார்ந்து பொறுமையா, பக்குவமா எல்லா விஷயங்களையும் பேசிக்கிட்டோம். அப்புறம்தான் நான் `ஓ.கே’ சொன்னேன்’’ என்ற ஆரியை, ‘‘ஓவர் பிகு பண்ணிட்டாருங்க’’ என்று செல்லமாக அலுத்துக்கொண்டு ஆரம்பித்தார் நதியா...

‘‘லண்டன்ல இருந்தபடியே என் குடும்பத்தினர் வாட்ஸ்அப், ஸ்கைப்னு ஆரிகிட்ட பேசிட்டு, திருமணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. ஆரி வீட்டிலும் `ஓ.கே’ சொல்லிட்டாங்க. சென்னை, மண்ணடி காளிகாம்பாள் கோயில்ல ரொம்ப எளிமையா எங்க கல்யாணம் முடிஞ்சது. ‘எனக்கு பொண்ணுங்களை இம்ப்ரஸ் பண்ணுற மாதிரியெல்லாம் பேசத் தெரியாது’னு, நாங்க காதலர்களா இருந்தப்போ ஆரி சொல்லிட்டே இருப்பார். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சது ... அவர் எவ்வளவு பெர்ஃபக்டான கணவரா இருக்கார்னு! ஜங்க் ஃபுட்லயே வளர்ந்த எனக்கு, இயற்கை உணவுகளோட சிறப்புகளைச் சொல்லி, சமைச்சும் கொடுக்கிறார்.

ஹனிமூனுக்கு மூணாறு போயிட்டு ரிட்டர்ன் ஆனப்போ, அவரே காரை டிரைவ் பண்ணினார். அப்போ ஒரு இடத்தில் யானைக்கூட்டம் ரோட்டைக் கடக்க, நான் பயந்துபோயிட்டேன். அவர் இறங்கி வீடியோ எடுக்க ஆரம்பிச்சுட்டார். செம த்ரில்லிங் அனுபவம்’’ என்று நதியா சொல்ல... தன் மனைவியின் கைகோத்து தலையசைக்கிறார் ஆரி!

``ஹீரோ மாதிரி சப்போர்ட்டுக்கு வந்தாரு!’’

‘‘எங்க காதலை வெளிப்படுத்தின கொஞ்ச காலத்திலேயே கல்யாணம் முடிஞ்சுட்டதால, நாங்க லவ்வர்ஸா எங்க காதலை என்ஜாய் செய்யவே இல்ல. அதனால, இப்போ கல்யாணம் செய்துகிட்டு லவ் பண்ணிட்டு இருக்கோம்!’’ என கலகலவென ஆரம்பித்தார் `விஜே’ பிரியங்கா, தன் காதல் கணவர் பிரவீனைப் பார்த்துச் சிரித்தபடி.

‘‘விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி ஆடிஷன் டைம்ல, ரொம்ப ஹேண்ட்ஸமா ஒருத்தரைப் பார்த்தேன். அவரோ, ‘நீயெல்லாம் ஒரு ஆங்கரா?’ங்கிற ரேஞ்சில்தான் என்னைப் பார்த்தார். பயங்கர ஸீன் பார்ட்டியான அந்த மனுஷன், விஜய் டி.வி சீனியர் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசரான பிரவீன் குமார்னு அப்புறம்தான் தெரியவந்தது. நாங்க ரெண்டு பேரும் பார்க்கிறப்போ எல்லாம் முறைச்சுட்டே இருப்போம்.

பிரவீனோட கசின், என்னோட ஸ்கூல் ஃப்ரெண்டு. அந்தப் பொண்ணு விஜய் டி.வி-யில வேலைக்கு சேர்ந்தா. அவ வீட்டுக்கு நான் அடிக்கடி போவேன். அப்போ பிரவீன் அங்க இருப்பார். அவரோட குடும்பத்து ஆட்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு. ஃபேமிலி அவுட்டிங் போற அளவுக்கு க்ளோஸ் ஆனோம். அப்படியே, ‘நீங்க திமிர் பிடிச்சவர்னு நான் நினைச்சேன்’, ‘நீ வாயாடினு நான் நினைச்சேன்’னு ரெண்டு பேரும் ஓபன் அப் ஆகி, நானும் பிரவீனும் தனியா அவுட்டிங் போற அளவுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்.

ஒருமுறை அப்படி ஒரு ஹோட்டல்ல சாப்பிடப் போனப்போ, பிரவீனுக்கு ஒரு போன் கால் வர, அவர் வெளிய நின்னு பேசிட்டு இருந்தார். அப்போ டிரிங்க்ஸ் சாப்பிட்ட ஒரு கும்பல்ல ஒருத்தன் என்னை வம்பிழுக்க, அந்த ஆளோட கன்னத்துல ஒரு அறைவிட்டார் பிரவீன். ‘யாருடா நீ?’னு அவங்க கேட்க, ‘அவ என் பொண்டாட்டி’னு சொல்லிட்டார். அதுவரை ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும், அந்த நிமிஷத்தில் இருந்து நான் அவர் மேல டிஸ்டர்ப் ஆனதால, அவரைவிட்டு விலக ஆரம்பிச்சேன். ‘ஏன்?’னு கேட்ட பிரவீன்கிட்ட நான் விஷயத்தை சொல்ல, ‘அப்போ உங்க வீட்டுல சம்மதம் வாங்கி, என்னைக் கல்யாணம் பண்ணிக்க ரெடியா?’னு அவர் கேட்க, ஹேப்பியோ ஹேப்பி’’ என்ற பிரியங்கா, ‘‘பிரவீன் சார்... நீங்க கொஞ்சம் பேசுங்க...’’ என்றார் `பட்பட’ சிரிப்புடன்.

‘‘எங்க கல்யாணம் முடிஞ்ச ரெண்டாவது நாளே நாங்க ரெண்டுபேரும் ஆபீஸுக்குப் போயிட்டோம். ஆபீஸ்ல அவளும் நானும் ஒருத்தரை ஒருத்தர் யாருனே தெரியாத அளவுக்கு எங்க வேலையில கவனம் செலுத்த ஆரம்பிச்சுடுவோம். ரீசன்ட்டா டென்மார்க், ஆஸ்திரேலியானு போயிட்டு வந்தோம். பிரியங்கா என்னை எப்பவும் வாடா, போடானுதான் கூப்பிடுவா. ரொம்ப ஜாலி மூடுல இருந்தா, ‘பாப்பா’னு கூப்பிடுவா. எந்த ஒரு விஷயத்தையும் தைரியமா, ஹேப்பியா எடுத்துக்கிற பிரியங்காவோட குணம், எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!’’

‘‘அக்காவுக்கு ஷாக் கொடுத்தார்!’’

ஆறு ஆண்டுகள் காதலித்து, மணம் முடித்திருக்கிறார்கள் நடிகர் நகுல் - ஸ்ருதி தம்பதி!

‘‘நான் அடிக்கடி போற என் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பொண்ணு ஸ்ருதி. அப்படித்தான் ஃப்ரெண்ட்ஸ் ஆகி காதலர்கள் ஆனோம்’’ என்று நகுல் அறிமுகம் கொடுக்க,

‘‘நான் ஒருநாள் அசோக் நகர்ல இருக்குற அனுமன் கோயிலுக்குப் போயிருந்தேன். அப்போ நகுல் எனக்கு போன் பண்ணினார். நான் பேசிட்டே இருந்தப்போ, கோயிலுக்கு அவரோட அக்கா தேவயானி வந்திருக்கிறதைப் பார்த்துட்டு அவர்கிட்ட சொன்னேன். உடனே அவர், ‘அக்காகிட்ட போனைக் கொடு’னு சொன்னார். நானும் ‘உங்க தம்பி நகுல் பேசுறார்’னு சொல்லி அவங்ககிட்ட போனைக் கொடுத்தேன். ‘அக்கா... அந்தப் பொண்ணு பேர் ஸ்ருதி. அவளை நான் லவ் பண்றேன்’னு இவர் சொல்ல, ‘என்னடா சொல்ற?!’னு அதிர்ச்சியான அவங்க அக்கா, அப்புறம் எங்கிட்ட அன்பா பேசிட்டுப் போனதோட, நகுல் வீட்டில் பேசி காதலுக்கு சம்மதம் வாங்கிக் கொடுத்தாங்க. நகுலும், அவங்க அண்ணனும் எங்க வீட்டிலும் வந்து பெண் கேட்டாங்க. நிச்சயம், கல்யாணம்னு நல்லபடியே முடிஞ்சது’’ என்ற தன் மனைவியை காதலோடு பார்த்த நகுல்,

‘‘ஸ்ருதி எம்,பி.ஏ, கேட்டரிங்னு நிறையப் படிச்சிருக்காங்க. ஃப்ரெண்டா இருந்த காலத்தில் இருந்தே என்னோட கரியருக்கு பெரிய சப்போர்ட்டா இருக்காங்க. எல்லார்கிட்டயும் அன்பா இருக்கிறது, எல்லாரையும் சரிசமமா நடத்துறது, எப்பவும் தன்னம்பிக்கையோட இருக்கிறது, சூப்பரா சமைக்கிறது, என்னைவிட உயரமா இருக்கிறதுனு ஸ்ருதிகிட்ட எனக்குப் பிடிச்ச விஷயங்கள் நிறைய நிறைய’’ என்றவரை இடைமறித்த ஸ்ருதி,

‘‘நாங்க லவ் பண்ண ஆரம்பிச்ச அடுத்த மாசமே அவரோட பிறந்தநாள் வந்துச்சு. அப்போ ‘வல்லினம்’ படத்துக்காக அவர் கோயம்புத்தூர்ல இருந்தார். ‘உனக்கு நேர்ல விஷ் பண்ண ஆசை. ஆனா, முடியல’னு அவர்கிட்ட சொன்ன நான், என் கோயம்புத்தூர் ஃப்ரெண்டு மூலமா, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நைட் 12 மணிக்கு கேக் கொண்டுபோய் கொடுத்து சர்ப்ரைஸ் செய்ய ஏற்பாடு செஞ்சிருந்தேன். அன்னிக்கு நைட் பத்தரை மணிக்கு நான் அவர்கிட்ட போன்ல பேசிட்டு இருந்தப்போ, ‘இன்னிக்கு க்ளைமேட் சூப்பர்ல?’னு கேட்டார். நான், ‘கோயம்புத்தூர் க்ளைமேட் பத்தி எங்கிட்ட கேட்டா எப்படி தெரியும்?’னு சொல்ல, ‘வெளியவந்து பாரு’னு சொன்னார். கதவைத் திறந்தா, ‘என்னைப் பார்க்க ஆசைப்பட்ட இல்ல... அதான் வந்துட்டேன்’னு நிக்கிறார்.

என்னோட அப்பா ஏ.வி.பாஸ்கர் ஒரு ஒளிப்பதிவாளர். அதனால எனக்கும் சினிமாவை பத்தி கொஞ்சம் தெரியும். நகுல் நடிச்சதுல ‘வல்லினம்’, ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் எனக்கு வாங்கி கொடுத்த முதல் கிஃப்ட், மல்லிகைப்பூ. பார்ட்டி,
டிஸ்கோன்னு எதுவும் அவருக்குப் பிடிக் காது.

அவர் ரொம்ப சமர்த்து. நான் ரொம்ப லக்கி’’ என்று கன்னம் சிவக்கிறார் ஸ்ருதி.

- கு.ஆனந்தராஜ் படம்: தி.குமரகுருபரன்