திருமணங்களில் என்னதான் மணவீட்டார் சிரத்தை எடுத்து வேலை செய்தாலும், சமயங்களில் சில விருந்தினர்கள் தாங்கள் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்ற மனக்குறையுடன் நிகழ்வில் இருந்து கிளம்ப நேரிடும். அதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்க்க உதவுவதும், திருமணத்துக்கு வரும் ஒவ்வொரு விருந்தினருக்கும் உரிய வரவேற்பு, உபசரிப்பு, முக்கியத்துவம் அளிக்க ஏற்பாடு செய்வதும்தான், ‘கெஸ்ட் மேனேஜ்மென்ட்’. அந்த சர்வீஸில், விருந்தினர்கள் ஏ டு இஸட் எப்படி கவனித்துக்கொள்ளப்படுவார்கள் என்ற விவரங்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த `வொண்டர் வெடிங்’ திருமண ஏற்பாட்டு நிறுவன உரிமையாளர் ராஜ்குமார்.

* ‘‘எங்களிடம் வரும் கஸ்டமர்கள் அனைவரும், ‘மாப்பிள்ளை/பெண் வீட்டு விருந்தினர்களை மட்டும் பார்த்துக்கோங்க’ என்று தங்களுக்காக மட்டும் கேட்காமல், இருவீட்டு விருந்தினர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் கெஸ்ட் மேனேஜ்மென்ட் சேவை இருக்க வேண்டும் என்றுதான் கேட்பார்கள்.

* உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து திருமணத்துக்கு வரும் விருந்தினர்களை, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என்று சென்று வரவேற்று அழைத்து வந்து, அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹோட்டல் களில் தங்கவைப்பதில் இருந்து தொடங்குகிறது எங்களின் சேவை. அவர்களின் தொடர்பு எண்கள் மற்றும் விவரங்களை, மணவீட்டார் முன்கூட்டியே எங்களிடம் அளித் திருப்பார்கள்.

* ஹோட்டலில் அவர்களுக்கு வேண்டும் உதவிகளைச் செய்துகொடுத்து, அவர்களை திருமண அரங்குக்கு

அழைத்து வருவதுவரை எங்களின் பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருப்பார்கள். வெளி மாநில விருந்தினர்களுக்கு, தேவைப் படும்பட்சத்தில் அவர்களின் மொழி தெரிந்த ஊழியர்கள் உதவிக்கு அமர்த்தப்படுவார்கள்.

* திருமண அரங்குக்கு வரும் விருந்தினர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும், ஒழுங்குபடுத்து வதற்கும், ரிட்டர்ன் எடுப்பதற்குமான ஏற்பாடுகளை செய்துகொடுப்போம்.

* அரங்கின் வாசலில் விருந்தினர் களை வரவேற்க கேரள செண்டை மேளம், தமிழக நாட்டுப்புறக் கருவிகள், வடமாநில வாத்தியங்கள் என்று ஏற்பாடு செய்திருப்பதுடன், நுழைவு வாயிலில் விருந்தினர்களை, கலாசார மற்றும் மாடர்ன் உடைகளில் நிற்கும் எங்கள் ஆண், பெண் பணியாளர்கள் பன்னீர் தெளித்து, ஒற்றை ரோஜா பொக்கே கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்று, அவர்களுக்கான இருக்கைகளில் அமரவைத்து, அனைத்து உபசரிப்புகளையும் செய்துகொடுப்பார்கள்.

* பொதுவாக, திருமணங்களில் விருந்தினர்கள் சிறிதுநேரம் இருந்துவிட்டு, மணமக்களுக்கு பரிசளித்து, சாப்பிட்டுக் கிளம்பிவிடும் முறையை நாங்கள் உடைத்து, சற்று வித்தியாசமான செயல்பாடுகளைச் செய்கிறோம். அதன்படி, திருமண வீட்டாரின் உறவினர்களை மேடையில் குத்துவிளக்கேற்ற வைப்போம். எங்கள் டீமில் இருக்கும் `எம்சி’ (‘மாஸ்டர் ஆஃப் செரிமனி’) பெண்கள், மணமக்களை பற்றிய இன்ட்ரோவை எல்லா உறவினர்கள் முன்னிலையிலும் சொல்வார்கள். பின்னர், உறவினர்கள் மண மக்களை வாழ்த்துவார்கள். இத னால், திருமணத்துக்கு வந்தோம், சென்றோம் என்று இல்லாமல், விருந்தினர்கள் அனைவரும் மணமக்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

* பந்தி நேரத்தில் யார் மனதும் புண்படாத வகையில், கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அழைத்துச் செல்வோம். ஒருவேளை காத்திருக்க நேர்ந்தால், விருந்தினர்களுக்கு அது அசௌகர்யமாக இல்லாத வகையில், ஏராளமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துவோம். எல்லா விருந்தினர்களுமே குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியையாவது பார்க்கவும், அதில் பங்கேற்கவும் செய்வார்கள்.

* டைனிங்டேபிளில் அமரும் விருந்தினர்கள் அனைவரிடமும் உணவு வகைகள் அடங்கிய மெனு கார்டை கொடுத்துவிடுவோம். அவர்கள் விரும்பும் உணவுகளைப் பரிமாறச் செய்வோம். இதனால் அவர்கள் திருப்தியாக சாப்பிடு வதுடன், உணவுப் பொருட்கள் வீணாகாமலும் தவிர்க்கப்படும்.

* குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் மற்றும் சிறியவர்கள், பெரியவர்களுக்கு குளிர்பானங்கள், சாக்லேட்கள், ஸ்நாக்ஸ் கொண்ட ஸ்டாலை அமைத்து உபசரிப்போம். சர்க்கரை நோயாளிகள், வயதான வர்களுக்கான பிரத்யேக உணவு ஸ்டாலும் உண்டு. மேலும், அவசரக்கால மருத்துவ உபகரணங் களுடன் முதலுதவிக் குழுவையும் அமைத்து, யாருக்கு என்ன தேவை என்று பார்த்துச் செய்து முடிப்போம்.

* விருந்தினர்கள் திரும்பும்போது, உபசரிப்பில் அவர்கள் திருப்தி அடைந்தார்களா என்பதை ஒவ்வொரு வரிடமும் கேட்டறிந்து, அவர்களுக்கான ரிட்டர்ன் கிஃப்ட்டை கொடுத்து வழியனுப்புவோம்.

* வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்கள், நிகழ்ச்சி முடிந்ததும் ஷாப்பிங், சுற்றுலா என்று செல்ல ஆசைப்பட்டால் அழைத்துச் சென்று, இறுதியாக அவர்களை வழியனுப்பி வைப்பதுவரை எங்கள் வேலைதான். ஊருக்குப் பத்திரமாகச் சென்று சேர்ந்துவிட்டார்களா என்று போனில் அழைத்து விசாரிப்பதுவரை நாங்கள் கவனித்துக்கொள்வோம்’’ என்ற ராஜ்குமார்,

‘‘இனி உங்கள் விருந்தினர்கள், ‘கெஸ்ட் மேனேஜ்மென்ட்’ பொறுப்பு!’’ என்றார் நிறைவாக.

- கு.ஆனந்தராஜ்

படங்கள் உதவி: ஃபோகஸ் ஸ்டூடியோ