‘நம்ம பட்ஜெட்டுக்கு இன்றைய ட்ரெண்டி திருமணங்கள் எல்லாம் சாத்தியமா?’ என்று மறுகுபவர்களுக்கு, ‘‘மினிமம் பட்ஜெட்டிலும் மேக்ஸிமம் சந்தோஷத்தை உங்க கல்யாணக் கொண்டாட்டங்களில் நாங்க உருவாக்கித் தர்றோம்!’’ என்கிறார், திருச்சியில் பட்ஜெட் திருமணங்களில் பட்டையைக் கிளப்பும் ‘விழா’ திருமண அமைப்பின் நிறுவனர் வெர்ஜினியா.

‘‘கல்யாணத் தேதிக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, மினிமம், மீடியம், மேக்ஸிமம்னு இதில் உங்க வீட்டுக் கல்யாண பட்ஜெட் எந்த ரகம்னு `டிக்’ செய்துட்டு, பொறுப்பை எங்ககிட்ட விட்டுடுங்க. அரங்க வடிவமைப்பில் இருந்து அறுசுவை விருந்து வரை உங்க பொருளாதாரத்துக்கு ஏற்ப அசத்தலா நடத்தி முடிச்சுடலாம்’’ என்று சொல்லும் வெர்ஜினியா, ஒவ்வொரு பட்ஜெட்டுக்குமான அம்சங்களைப் பட்டியலிட்டார்.

மினிமம் பட்ஜெட் - 5 லட்சம்!

திருமணத்துக்கு சுமார் 500 விருந்தினர்களுக்கு பத்திரிகை வைத்து, 700 பேர் வருவதாக இருந்தால், 5 லட்சம் பட்ஜெட் போதுமானதாக இருக்கும்.

ஒரு பத்திரிகைக்கு 30 ரூபாய் வீதம் செலவு செய்யலாம்.

அரங்க வடிவமைப்புக்கு வாசலில் வைக்கப்படும் நேம் போர்டு மற்றும் மணமேடையின் பின்னால் வைக்கப்படும் `பேக் டிராப்’ இரண்டிலும், இயற்கையான மலர்களைக்கொண்டு அலங்கரிக்க 50,000 ரூபாய் வரை செலவாகும்.

ட்ரெடிஷனல் போட்டோகிராஃபி மற்றும் வீடியோ இரண்டுக்கும் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் கட்டணம்.

லைட்ஸ் மற்றும் சவுண்ட் செட்டுக்கு 20,000 ரூபாய்.

மண்டப வாடகை 40,000 ரூபாய்.

எலெக்ட்ரிசிட்டி மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு 25,000 ரூபாய்.

புரோகிதர் மற்றும் பூஜைப் பொருட்களுக்கு தலா 5,000 ரூபாய். நாதஸ்வர செட்டுக்கு 15,000 ரூபாய்.

மினிமம் பட்ஜெட் திருமணங்களில் ஒரு இசைக்குழுவினரை, இசைக்கருவிகளுடன் பாடச்செய்ய (ரிசப்ஷன் ஈவினிங்க்கு மட்டும்) 20,000 ரூபாய் செலவாகும்.

ரிட்டர்ன் கிஃப்ட்டாக தேங்காய் அல்லது பழம் அல்லது பிஸ்கெட் பாக்கெட் அடங்கிய தாம்பூலம் தரலாம்.

கேட்டரிங், முந்தைய நாள் ரிசப்ஷனில் இருந்தே தொடங்கிவிடும். குறைந்தபட்சம் ரூபாய் 2 லட்சத்தில் ரிசப்ஷன் டே மாலை மற்றும் திருமண நாளின் காலை, மதியம் என மூன்று வேளைகளுக்கும் விருந்தினர்களுக்கு சுவையான மெனு உறுதி.

மீடியம் பட்ஜெட்... 8 - 10 லட்சம்!

1,500 பேருக்கு பத்திரிகை வைத்து 2,500 பேர் வரையிலும் விருந்தினர்கள் வரலாம் என்பது உங்கள் கணிப்பாக இருந்தால், இந்த பட்ஜெட் சரியான சாய்ஸ்.

கொஞ்சம் கூடுதல் டிசைன்கள் இருக்கும் என்பதால், ஒரு பத்திரிகைக்கு 50 ரூபாய் வீதம் செலவாகும்.

அரங்கு அலங்காரத்துக்கான செலவுக்கு ஒரு லட்சம் ஒதுக்கிவிடலாம். நேம் போர்டு மற்றும் `பேக் டிராப்’ தாண்டி, மண்டப டெகரேஷன், பலூன் டெகரேஷன், வெல்கம் ஆர்ட்ஸ் என மண்டபத்தை பரவலாக அலங்கரிக்கலாம்.

லைட்ஸ், சவுண்ட்ஸ், எலெக்ட்ரி சிட்டிக்கான கட்டணம் மண்டபத்தின் அளவைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

புரோகிதர் மற்றும் பூஜைப் பொருட்களுக்கு 10,000 ரூபாய்.

போட்டோகிராஃபி மற்றும் வீடியோ கவரேஜில் கேண்டிட் ஷூட்டிங் செய்யப்படுவ தோடு, புகைப்படங்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகமாகும். சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயை இதற்கு ஒதுக்கிவிடலாம்.

இசைக்கச்சேரியைப் பொறுத்தவரை வழக்கமான மியூசிக் ஆர்க்கெஸ்ட்ராவாக இல்லாமல், 35,000 ரூபாய் வரை செலவு செய்து `டிஜே’ செட் வைத்தால் அதிக குதூகலத்துக்கு கியாரன்டி.

ரிட்டர்ன் கிஃப்ட்டாக ஒரு நபருக்கு 100 வரையிலும் செலவுசெய்யும்போது, விருந்தினர்களுக்கு எக்ஸ்ட்ரா சந்தோஷம் கிடைக்கும்.

சாப்பாட்டுக்கு நபர் ஒன்றுக்கு 250 ரூபாய் பட்ஜெட் என்றால், உங்கள் வீட்டுக் கல்யாணச் சாப்பாடு `ஆஹா... ஓஹோ’ ரகம்தான்!

மேக்ஸிமம் பட்ஜெட் - 10 லட்சத்துக்கு மேல்!

பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய விரும்பும் மேக்ஸிமம் பட்ஜெட் திருமணங்களில், கொண்டாட்டமும் குதூகலமும் எல்லையற்றதுதான்.

மேடை அலங்காரத்துக்கு தாராளமாகச் செலவு செய்யத் தயார் என்றால், இம்போர்டட் மலர்களால் மேடையை சொர்க்கம் ஆக்கலாம்.

`டிஜே’ செட்டிங்ஸால் ரிசப்ஷன் டே அன்று மட்டுமல்லாது முகூர்த்த நாளிலும் மண்டபம் உற்சாகத்தில் மிதந்து ததும்பும்.

கேட்டரிங் சர்வீஸைப் பொறுத்தவரை, பெரிய பட்ஜெட் திருமணங்களுக்கு பஃப்பே சிஸ்டம் ராயலாக இருக்கும்.

விருந்தினர்களுக்கு ஹோட்டல்களில் ரூம் புக் செய்வது, ப்ரீ மற்றும் போஸ்ட் வெடிங் ஷூட்கள், பெடல்ஸ் மாலைகள், வாக்கிங் கார்ப்பெட் என பட்ஜெட் அதிகமாக ஆக, ‘அட’ போடவைக்கும் அம்சங்களை திருமண நிகழ்வில் அதிகரித்துக்கொண்டே போகலாம்.

பட்ஜெட்டை முடிவெடுங்கள்... திருமணத்தை அதற்கேற்ப திட்டமிட்டு பிரமாதமாக நடத்துங்கள்!

- க.தனலட்சுமி, படங்கள்: அசோக் அர்ஸ், மக்கா ஸ்டூடியோ, க்யூபிட் டேல்ஸ்

கவனிக்க..!

பட்ஜெட் திருமணங்களில் போக்குவரத்துச் செலவுகளைப் பொறுத்தவரை, மெட்ரோ சிட்டிகள் எனில் நிர்ணயித்ததற்கும் சற்று கூடுதலாக ஆகும். மெனுவில் உள்ள அயிட்டங்களை மாற்றும்போதோ, அதிகரிக்கும்போதோ அதற்குத் தகுந்த மாதிரி கட்டணமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.