ஏப்ரல் மாதம். சுட்டெரித்த சென்னை வெயிலில் சூரிய பகவான் ஆசீர்வாதத்துடன், அழகாக நடந்தேறியது ஸ்நேகா ரெட்டி - ப்ரவீன் குமாரின் திருமணம்.

‘‘கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் ஆனதுக்கு அப்புறம்தான் ஹனிமூன் போனோம். ஜூன் 4 - ஜூன் 14... இந்த 10 நாட்களும் எங்க ஆயுளுக்கும் மறக்க முடியாதது’’ என்று மகிழ்ச்சியில் மிதக்கிறார் புதுப்பெண் ஸ்நேகா. இந்த ‘புதுசா கட்டிக்கிட்ட ஜோடி’ தேன் நிலவுக்கு சென்று வந்திருப்பது... நியூசிலாந்துக்கு!

‘‘நியூசிலாந்து சாலைகளில் நாம் பயணிக்க வேண்டியது மனிதர்களோடு இல்ல, மாடுகளோடதான். அட, உண்மைதாங்க. ரோடு முழுக்க செம்மறியாடு, மாடு ராஜ்யம்தான். மனுஷங்களை கண்ணுல பார்க்கிறதே அபூர்வமா இருந்துச்சு’’ என்று சிரிக்கிறார் ப்ரவீன். இவரது தேர்வுதான், நியூசிலாந்து. ‘‘செல்ஃப் டிரைவ் செய்துட்டு ஊர்முழுக்க சுத்துற மாதிரி ஒரு ஹனிமூன் ஸ்பாட் தேடினப்போ, நியூசிலாந்தில்தான் அதுக்கு அனுமதி கிடைக்கும்னு தெரிஞ்சது. அதான் அங்க பறந்துட்டோம்’’ என்ற தம்பதி, அந்தப் பயண நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்...

எப்படி போகலாம்?

``நியூசிலாந்துக்கு போக விரும்புறவங்க, முதல்ல ‘100% ப்யூர் நியூசிலாந்து (Newzealand)’ வெப்சைட்டை பாருங்க. சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய நேரத்தில் இருந்து, நியூசிலாந்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்வரை இந்த வெப்சைட்தான் எங்களுக்கு முழுமையான டூரிஸ்ட் கைடா இருந்தது. சென்னையில் இருந்து சிங்கப்பூர், சிங்கப்பூரில் இருந்து நியூசிலாந்துனு மொத்தம் 13 நேரப் பயணம். போக வர விமான கட்டணம் ரெண்டு பேருக்கும் ரூபாய் 1,80,000, 10 நாட்களுக்கு விடுதி செலவு ரூபாய் 80,000, தவிர உணவு, ஷாப்பிங்னு எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இந்த ட்ரிப்புக்கு ஆன செலவு, 4.5 லட்சம் ரூபாய்.

கார் ஓட்டலாம்!

நியூசிலாந்தில் செல்ஃப் டிரைவ் செய்ய விரும்பினா சென்னையிலேயே ஆன்லைனில் புக் செய்யணும். நியூசிலாந்தில் லேண்ட் ஆன உடனே ஏர்போர்ட்ல எங்களுக்காக ரென்டல் கார் காத்திருந்தது. அப்போ ஆரம்பிச்ச டிரைவிங்தான்... முதல் 4 நாட்கள் நார்த் நியூசிலாந்தில் ஆயிரம் கிலோமீட்டர், அடுத்த 6 நாட்கள் சௌத் நியூசிலாந்தில் ரெண்டாயிரம் கிலோமீட்டர்னு சுத்திட்டே இருந்தோம்.

நார்த் நியூசிலாந்து - பார்க்க வேண்டிய இடங்கள்!

ரொட்டூரா

பூமிக்குக் கீழ எரிமலை கொதிச்சிட்டு இருக்க, மேலே இருக்கிற மக்களை கம்பளியை இழுத்துப் போர்த்தச் செய்யும் குளிர்... இதுதான் ரொட்டூரா. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வெப்பநிலை மைனஸ் டிகிரியில் உறைய வெச்சிடும். கீழே இருக்கும் எரிமலைகள் கொதிச்சுட்டே இருக்கிறதால, கட்டடம் இல்லாத பகுதிகளில் எல்லாம் பனிப்புகையாதான் காட்சியளிக்கும். ஜில்லுனு சாலைகளில் ஊரை சுத்திட்டு, அங்க இருக்கிற மட் பூல்களில் (மணல் குளங்கள்) உடம்புக்கு இதமா ஸ்பா எடுத்துக்கலாம்.

ஆக்லேண்ட்

பூத்துக் குலுங்கும் திராட்சை தோட்டங் களுடன் இருக்கும் இந்த நகரத்துக்கு இன்னொரு பெயர், வைன் சிட்டி. உலகின் டாப் வைன் தொழிற்சாலைகள் எல்லாம் இங்கதான் இருக்கு. ஆக்லேண்டில் இருந்து 40 நிமிட பயணத்தில் இருக்கும் வெய்ஹேக் தீவு, இந்த துறைமுக நகரத்தின் அழகை இன்னும் மெருகூட்டுது. சுவை விரும்பிகளுக்கு, இங்க இருக்கிற மடக்கானா சரியான இடம். ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்க நடக்கிற விவசாயிகள் சந்தையில, உணவுப் பிரியர்களுக்கும் வேட்டை இருக்கும்.

வெலிங்டன்

டீ குடிக்க சும்மா ஊட்டிக்கு ஒரு ரைடு போகலாம்னு சொல்ற மாதிரி, காபி குடிக்கிறதுக்காகவேகூட வெலிங்டனுக்கு ஒரு விசிட் அடிக்கலாம். ரொட்டூராவில் இருந்து ஆக்லேண்ட் செல்லும் வழியில் இருக்கும் வெலிங்டன் நகரம்தான், நியூசிலாந்தில் வொயிட் வாட்டர் ரேஃப்டிங் செல்ல சிறந்த லொக்கேஷன். டீ பாப்பா, வெட்டா கேம் மியூசியம்னு கலாசார காதலர்கள் கால நேரம் தெரியாம இங்க சுத்தலாம்.

சௌத் நியூசிலாந்து - சுண்டியிழுக்கும் இடங்கள்!

நார்த் நியூசிலாந்தில் எடுத்த காரை அங்கேயே விட்டுட்டு, ஒரு டொமெஸ்டிக் ஃபிளைட் பிடிச்சா ஒன்றரை மணி நேரத்தில் சௌத் நியூசிலாந்துக்குப் போயிடலாம்.

கிறைஸ்ட் சர்ச்

பூங்கா நகரமான இந்த சர்ச் நகரம்தான் நியூசிலாந்தின் தி.நகர்னு சொல்லலாம். முழுக்க ஷாப்பிங் ஏரியாக்கள்தான். பயணம் முழுக்க லோக்கல் டிரெயின்லதான் போகணும். ஒருநாள் ஆனாலும் பயணம் அலுக்காது. குகைக்குள்ளே படகு சவாரி, அருவியில் குளியல், த்ரிலிங்கான சவுண்ட்னு இங்கயிருக்கிற மில்ஃபார்ட் சவுண்ட் ட்ரிப் செம!

க்னின்ஸ் ஸ்டோன்

ஸ்கை டைவிங், ரிவர் ரேஃப்டிங், பங்கி ஜம்பிங் என விளையாட்டுகளுக்கான உலகம் இது. இங்கிருந்து கொஞ்சம் பக்கத்திலுள்ள கிராமம் ஹில்டன். வாட்டர் டாக்ஸியில (படகு) ஆற்றில் பயணம் செய்தபடி இந்த கிராமத்துக்குப் போறது அழகான அனுபவம். தினமும் காலை 7 மணிக்கு அல்லது மதியம் 1 மணிக்கு மட்டும் இங்கே நடக்கும் ஜெட் ஸ்போர்ட்ஸில் விளையாடத்தான் இந்த க்வின்ஸ் ஸ்டோன் டு ஹில்டன் பயணம். விளையாட்டு எல்லாம் ஓ.கே.... விலைதான் கொஞ்சம் அதிகம். ஒரு ஆளுக்கு ஒரு கேமுக்கு 25,000 ரூபாய். ஒரு தடவை 25,000 ரூபாய் கட்டிட்டா அந்த ஒரு வாரத்துக்குள் அதே கேமை விளையாடப் போகும்போது, 1,000 ரூபாய் மட்டும் கட்டினா போதுமாம். அங்க நாங்க ரெண்டு பேரும் 250 அடி உயரத்தில் ஒன்றாக கட்டிக்கொண்டு பங்கி ஜம்ப் செய்ததுதான், எங்க ட்ரிப்போட லவ்லி மொமென்ட்.

மவுன்ட் ஹூக்

ரோட்டின் ஒருபுறம் மூடுபனி, மறுபுறம் பச்சை பசேல் புல்வெளிகள், மரங்கள்... இதுதான் மவுன்ட் ஹூக். பனிச் சறுக்குக்காகவே படைக்கப்பட்ட இடம். இங்குள்ள மியூசியங்களில் இறந்துபோன விலங்குகளை அப்படியே பராமரித்து வெச்சிருக்காங்க. பார்க்கும்போது மியூசியமா, சரணாலயமானு வியக்கிற அளவுக்கு இருக்கு.

`எல்லாம் ஓ.கே... சாப்பாடு எப்படி’ன்னு கேட்கறீங்களா? இந்திய உணவு வகைகளுக்கு பஞ்சமே கிடையாது. அதுக்காகவே தனியா சூப்பர் மார்க்கெட்கூட இருக்கு. ஆனா, அந்தப் பனியும் அழகும் பசியையெல்லாம் மறக்கச் செய்திடும்’’ என்று தங்கள் நியூசிலாந்து புகைப்படங்களைப் பார்த்தபடி சென்னை வெயிலிலும் சிலிர்க்கிறார்கள், ஸ்நேகா ரெட்டியும் ப்ரவீன் குமாரும்.

- க.தனலட்சுமி