திருமணமாகவிருக்கும் பெண் திருமணத்துக்கு முன் தன் தோழிகளோடு பேச்சிலரெட் பார்ட்டி (Bachelorette Party) கொண்டாடுவதும், திருமணமாகவிருக்கும் ஆண் தன் நண்பர்களோடு சேர்ந்து பேச்சிலர்ஸ் பார்ட்டி (Bachelors Party) கொண்டாடுவதும் மேற்கத்திய வழக்கம் என்பதை மாற்றி, இன்று நம்மவர்கள் பலரும் இந்த ‘பேச்’ பார்ட்டி (Bach Party) கொண்டாடுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் இந்த பார்ட்டிகளை மணமகனின் நெருங்கிய தோழனான ‘பெஸ்ட் மேன்’ மற்றும் மணமகளின் நெருங்கிய தோழியான ‘மெய்ட் ஆஃப் ஹானர்’ முன்னின்று நடத்துவது வழக்கம். நம்மூரில் பேச்சிலர்ஸ் பார்ட்டி என்றால் டிரிங்க்ஸ்தான் என்ற கொண்டாட்டமெல்லாம் அந்தக் காலம். இன்று சுவாரஸ்யமான புதுப் புது தீம்களில் ‘பேச் பார்ட்டி’ கொண்டாடப்படுகிறது. அதைப் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த வெடிங் பிளானர் மற்றும் `எம்சி’ (MC - Master of ceremonies) கிறிஸ்டபெல்.

மேக்ஓவர்/ஸ்பா பார்ட்டி

திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன், மணப்பெண் தன் தோழிகளுடன் வித்தியாசமாகவும் அதே சமயம் உபயோகமாகவும் நேரம் செலவிட ஏற்ற தீம் இது. பியூட்டி பார்லரிலோ அல்லது மணப்பெண்/தோழியின் வீடுகளிலோ பெடிக்யூர், மேனிக்யூர், ஸ்பா என மணப்பெண்ணும் அவர் தோழிகளும் ஒருநாள் முழுக்க தங்களை ரிலாக்ஸ் ஆக்கிக்கொண்டு, அழகையும் மெருகேற்றிக்கொண்டு, கதைகள் பேசி ஜாலியாகக் கழிக்கலாம். இதன் ஸ்பான்ஸர், மணப்பெண்ணின் தோழிகள்.

கோலிவுட் நைட் பார்ட்டி

வட இந்தியாவின் பாலிவுட் நைட்போல, நம் பேச்சிலர்ஸ் பார்ட்டிகளின் இப்போதைய ட்ரெண்ட், கோலிவுட் நைட். கல்யாணப் பையன் எந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், இயக்குநரின் ரசிகரோ, அதன் அடிப்படையிலான தேர்வில் தன் ஃபேவரைட் படங்களை, பாடல்களை, இரவு முழுக்க தன் நண்பர்களோடு பார்த்தும், கேட்டும் ஒரு ஸ்லீப் ஓவர் மாதிரியாகக் கொண்டாடும் பார்ட்டி. சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் பேச்சிலர்ஸ் பார்ட்டி தீம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெஷர் ஹன்ட் பார்ட்டி

அட்வென்சர் மற்றும் த்ரில் விரும்புபவர்களுக்கு சூப்பரான ஐடியா, ட்ரெஷர் ஹன்ட் தீம். வெடிங் பிளானர் அல்லது ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஏஜென்சியிடம் முன்னரே பேசி ஏற்பாடு செய்துகொண்டால், இந்த பார்ட்டிக்காக வீட்டைச் சுற்றி உள்ள இடங்களில் பொருட்களை ஒளித்துவைக்கும் ஏற்பாடுகள் அனைத்தையும் அவர்கள் செய்துவிடுவார்கள். அல்லது சிறிய வீட்டுக்குள் நண்பர்களே சேர்ந்து அந்த ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம். மாப்பிள்ளை அந்த ட்ரெஷரை தேடி எடுக்கும்வரை பிரெஷர் ஏற்றி விளையாடும் இந்தப் பார்ட்டி, இப்போது ஃபேஷன்.

காஸ்ட்யூம் பார்ட்டி

வித்தியாசமான காஸ்ட்யூம்களில் அசத்துவது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட தீமில் காஸ்ட்யூம் பார்ட்டி கொண்டாடுகிறார் கள் பலர். குரூப்பாக சேர்ந்து ஒரே தீமில் டாட்டூ போட்டுக்கொள்வது தொடங்கி ‘அவஞ்சர்ஸ்’, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கதாபாத்திரங்கள்போல பெர்ஃபார்மன்ஸ் செய்து அசத்துவது வரை... காஸ்ட்யூம் பார்ட்டிகளில் கலகலப்புக்கு பஞ்சமில்லை.

`டிஜே’ நைட்

வீட்டிலேயே நண்பர்களோடு `டிஜே’ நைட் ஏற்பாடு செய்து, தங்களது பேச்சிலர் பார்ட்டியை மியூசிக்கலாக கொண்டாட விரும்பும் மாப்பிள்ளை, பெண்கள் பலர். இதற்காக பிரத்யேகமாக ஒரு புரொஃபஷனல் `டிஜே’வை அழைத்து பாடல்கள் கேட்டு பார்ட்டி கொண்டாடுவது ஒரு ரகம் என்றால், நண்பர்களே `டிஜே’ ஆக பொறுப்பேற்று, மணப்பெண் அல்லது மணமகனுக்குப் பிடித்த பாடல்களை ப்ளே செய்தும், பாடியும், அவர்களைப் பாட, ஆடவைத்தும் கொண்டாடுவது இன்னொரு ரகம்.

அவுட்டோர் பார்ட்டி

இது லேட்டஸ்ட் பேச்சிலர்ஸ் பார்ட்டி ஐடியா. மாப்பிள்ளை மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் ஒரு டே-அவுட்டில் நாள் முழுக்க வெளியே கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாடி பார்ட்டி செய்து மகிழ்வார்கள். இன்னும் சிறப்பாக சிலர், மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் அவரவர்களின் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் இரு

அணிகளாகப் பிரிந்து ஷட்டில், வாலிபால் என்று விளையாட்டுகள் விளையாடி அசத்துகிறார்கள். அவுட்டோர் பார்ட்டிகளில் சிலர் கேம்ப்களுக்கும் செல்கிறார்கள்.

டான்ஸ் பார்ட்டி

குறைவான பட்ஜெட்டில் `பேச் பார்ட்டி’ செய்ய நினைப்பவர்களின் முதல் சாய்ஸ், இந்த டான்ஸ் பார்ட்டி. இதற்கென ஒரு நாள் ஒதுக்க வேண்டும் என்பதுகூட இல்லை. `சங்கீத்’ அல்லது நிச்சயதார்த்தம் நடக்கும் நாளிலேயே இந்த டான்ஸ் பார்ட்டியையும் வைத்து கலகலக்க வைத்துவிடுகிறார்கள் மணமக்களின் நண்பர்கள்.

``மொத்தத்தில், பேச்சிலர்ஸ் பார்ட்டியில் குதூகலத்துக்கு கியாரன்டி!’’ என்கிறார் கிறிஸ்டபெல்.

- கோ.இராகவிஜயா படங்கள்: அசோக் அர்ஸ், க்யூபிட் டேல்ஸ், ஸ்மைல்ஸ் அண்ட் ட்ரீம்ஸ்