“Woof woof dear aunty and uncle! You may not know us, but surely know our parents Anand Siva or Vidya... We are their pet dogs, and the undisputed masters of the Siva household! We are super happy that Shasvathi is getting married to Karthik’’

- இப்படி வீட்டுச் செல்லப் பிராணிகள் தங்கள் வீட்டில் நடக்கும் திருமணத்துக்கு உறவினர்களை அழைப்பதுபோல், சாஷ்வதி- கார்த்திக் திருமணம்... ஒரு வித்தியாசமான அழைப்பிதழில் ஆரம்பித்து, மொத்த திருமணமும் வித்தியாசமான முறையில் மும்பையில் நடந்தேறியுள்ளது. அப்படி என்ன வித்தியாசம்னு தெரிந்துகொள்ள வேண்டுமா..? இந்த திருமணத்தின் மூலக்காரணமான சாஷ்வதியின் அப்பா ஆனந்த் சிவா சொல்கிறார்...

“2011-ல் இருந்து நான் `வீகன்’ (vegan) அதாவது சைவப் பழக்கவழக்கங்களுக்கு மாறிட்டேன். 2013-ல் இருந்து என்னுடைய குடும்பமும் வீகனா மாறிட்டாங்க. அதாவது `விலங்குகளோட பால் அதோட குட்டிங்களுக்குதான்; நமக்குக் கிடையாது. பட்டுத் துணி, லெதர்... இப்படி ஒரு உயிரை துன்புறுத்திக் கிடைக்கும் எந்த ஒரு விஷயமும் எங்கள் வாழ்க்கையில இடம்பெற கூடாது’னு உறுதியா இருக்கோம். அதேமாதிரி இயற்கையைக் கெடுக்குற மாதிரியான விஷயங்களையும் என்கரேஜ் பண்ணக்கூடாதுங்கிற முடிவுல இருக்கோம்.

இப்படி ஒரு லைஃப் ஸ்டைல்ல வாழ்ந்து பழகிட்டதால, என்னோட பொண்ணு சாஷ்வதிக்கும், கார்த்திக்கும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதும். சம்பந்தி வீட்ல நான் சொன்ன மொதல் விஷயம், `கல்யாணம் வீகன் வெடிங்காதான் இருக்கணும்’ங்கிறதுதான். நமக்கு தெரிஞ்சவங்களையும் சைவப் பழக்கத்தை கடைப்பிடிக்கச் சொல்லுறதுக்கு இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கிட்டோம்’’ எனும் ஆனந்த், திருமணத்துக்கு எட்டு மாதத்துக்கு முன்பிருந்தே திருமண வேலைகளை ஆரம்பித்துள்ளார்...

“கல்யாணத்துக்கு அதிக கூட்டம் வேணாம்னு தீர்மானிச்சு, 300 பேரை மட்டும் கூப்பிடறதா முடிவு செஞ்சோம். அழைப்பிதழுக்கு பேப்பர் யூஸ் பன்ணக்கூடாதுன்னு, இ-மெயில்லதான் இன்வைட் செய்தோம். கல்யாணத்துக்கு வர்றவங்க பட்டுத் துணி அணிய தடா, திருமணத்தில் பால் பொருட்களுக்குத் தடா, பிளாஸ்டிக்குக்கு தடான்னு ஆரம்பிச்சு, `ஸ்விம்மிங் அதாவது `பூல் பார்ட்டி’ (pool party) இருக்கு... கல்யாணத்துக்கு வர்ற மாதிரி இல்லாம டூருக்கு போற மாதிரி வாங்க’னு ஆரம்பிச்சு மாசம் ஒரு மெயில்னு, கடைசி மாசம்தான் கல்யாணம் எங்க, எப்போன்னு அதுவும், எங்க வீட்ல இருக்கும் செல்லப் பிராணிகள் அழைப்பதுபோல இன்விடேஷன் டிசைன் செய்தோம்’’ என்பவர் இதோடு நிறுத்தாமல் பல பல விஷயங்களைத் தேடித் தேடி செய்திருக்கிறார்.

“கல்யாணத்துல வாழைமரம் கட்டுவாங்க, ஆனா, அதுக்காக ஒரு வாழை மரத்தை பிடுங்க கூடாதுன்னு. கல்யாணத்துக்கு சில மாசத்துக்கு முன்னாடியே ரெண்டு பெரிய தொட்டியில வாழை மரக் கன்னுங்களை நட்டு வளக்க ஆரம்பிச்சுட்டேன். அதை அப்படியே தொட்டியோடு கல்யாணத்துல வெச்சுட்டோம். எல்லாரும் கல்யாணத்துக்கு வரும்போது அவங்க வீட்டு செல்லப் பிராணிகளையும் அழைச்சுட்டு வரணும்னு செல்லமா ஒரு ஆர்டர் போட்டுட்டேன்.

திருமணம் ஏ.சி ஹால்ல நடக்காம திறந்தவெளியில நடக்கணும். அதுவும் நான் செலெக்ட் செஞ்ச ரிசார்ட்ல சோலார் பவர்னால கரண்ட் எடுத்து யூஸ் பண்றாங்க. அதுமட்டும் இல்லாம, நீச்சல் குளத்துல மறுசுழற்சி மூலமா எடுக்குற தண்ணியை யூஸ் பண்றாங்க. கூடவே எங்க திரும்பினாலும் மரம், செடி, கொடின்னு ஒரே பசுமையா இருக்கணும்னு பார்த்துப் பார்த்து அதேமாதிரி ஒரு எடம் பிடிச்சேன்.

அடுத்ததா திருமண டெகரேஷனுக்கு மலர் அலங்காரம் எல்லாம் இருக்க கூடாதுன்னு துணிங்களை மட்டும் வெச்சு டெகரேட் பண்ணச் சொன்னேன். மாப்பிள்ளை பொண்ணுக்குகூட சாட்டின் துணியால செஞ்ச மாலைதான். அவங்களோட கல்யாண டிரெஸ்கூட பட்டுத்துணி கிடையாது. ஊஞ்சல் ஃபங்ஷனுக்குக்கூட மூங்கில் ஊஞ்சல்தான்.

பொண்ணோட மேக்கப் விலங்குகளுக்கு டெஸ்ட் பண்ண காஸ்மெடிக் அயிட்டம்ஸ் இல்லாம நேச்சுரல் பொருட்களா யூஸ் செய்தோம். மருதாணி ஃபங்ஷனுக்குகூட கெமிக்கல் கலக்காத ஆர்கானிக் ஹெர்பல் மருதாணி மட்டும்தான்.

அதுமட்டும் இல்லாம கல்யாணத்துல வெஜிடபிள் கார்விங்னு ஒரு விஷயம் இருக்கு, காய்கறிக்குப் பதிலா கொப்பரை தேங்காய்ல கார்விங். அதுலயும் சும்மா பூ டிசைன்லாம் பண்ணாம அது மூலமா மெசெஜ் சொன்னோம்” என அடுக்கிக் கொண்டே போனவர் குறிப்பா உணவு விஷயத்தில் இன்னும் அதிகமா மெனக்கெட்டிருக்கிறார்.

“தாய்ப்பால் எப்படி மிருகங்களுக்கு இல்லையோ அதுமாதிரி விலங்குகளோட பால் மனிதனுக்குக் கிடையாது. அதனால கேட்டரிங் பக்கம் பால், தயிருக்குப் பதில் தேங்காய்ப்பால், வேர்க்கடலைப் பால், முந்திரி பால்னு இதெல்லாம்தான் சமையலுக்கு யூஸ் செய்தோம். வந்தவங்க எல்லாம் `தயிர் வடை பிரமாதம்’னு சொன்னாங்க. அதுக்குகூட அரிசியில் இருந்தும் ஓட்ஸில் இருந்தும் பால் எடுத்து தயிர் வடை செஞ்சோம்.

சாப்பிடும் தட்டுகூட கார்ன் ஸ்டார்ச் மூலமா தயார் செய்த தட்டுகள், ஐஸ்க்ரீம் சாப்பிட கொடுத்த ஸ்பூன் ஹைதராபாத்ல இருந்து வரவழைச்ச சாப்பிடக்கூடிய (edible) ஸ்பூன், சொல்லப்போனா ஐஸ்க்ரீம்கூட வீகன் ஐஸ்க்ரீம்... டெல்லியில இருந்து ட்ரெயின்ல ரெஃப்ரிஜிரேட் செய்து எடுத்துட்டு வந்தோம்.

அப்புறம் வந்தவங்க எல்லாருக்கும் ஆர்கானிக் ஷாம்பு, சோப்பு, பேஸ்ட் எல்லாத்தையும் சணல் பையில போட்டு கொடுத்து, இதுமாதிரி ஆர்கானிக் பொருட்களை யூஸ் பண்ணுங்கன்னு அதுலயே ஒரு மெசெஜும் சொல்லியிருந்தோம்.

கல்யாணம் முடிஞ்சு போறவங்களுக்கு ஸ்வீட் மாதிரி பட்சணங்கள் கொடுத்தா எல்லாராலயும் சாப்பிட முடியாதுன்னு ஒரு கிலோ ட்ரை ஃப்ரூட் அண்ட் நட்ஸ் பேப்பர் கவர்ல `பேக்’ செஞ்சு, சணல் பையில போட்டுக் கொடுத்தோம். இதுல சொன்ன மெசெஜ்... ‘ஆரோக்கிய வாழ்க்கைதான் ஆனந்த வாழ்க்கை’!’’ என்று ஆனந்தமாக பேசி முடித்த ஆனந்த்... பந்தியில டேபிள் மேல் போடக்கூடிய பேப்பருக்கு பதில், உபயோகித்த நியூஸ் பேப்பரையும், கை கழுவியதும் துடைக்க நியூஸ் பேப்பரையே அழகாக ஆரிகாமி முறைப்படி வெட்டி மடித்தும் கொடுத்தாராம்.

- இந்துலேகா.சி படங்கள்: ஃப்ரன்ட்டல் நாட்ஸ்