வாசகிகள் பக்கம்
ஓவியங்கள்: ஹரன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

'இலையில உட்காரல... சேர்ல உட்கார்ந்தேன்!’

நான்கு வயதுப் பேரன், அவனுடைய அம்மா ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுவான். சமீபத்தில் என் மகனும், மருமகளும் அவனையும் அழைத்துக் கொண்டு சஷ்டியப்த பூர்த்தி நிகழ்ச்சிக்குச் சென்று வந்தார்கள். விருந்து மிகவும் நன்றாக இருந்ததாகப் பாராட்டியவர்கள், குழந்தையும் ரசித்துச் சாப்பிட்டதாகச் சொன்னார்கள். நான் ஆச்சர்யத்துடன் பேரனிடம், ''நீயும் இலையில் உட்கார்ந்து, தானாவே சாப்பிட்டியா..?!'' என்று கேட்க, அவன் என்னைக் கட்டிக்கொண்டு, ''இலையில் உட்கார்ந்து சாப்பிட முடியுமா பாட்டி? நான் சேர்லதான் உட்கார்ந்து சாப்பிட்டேன்!'' என்று சொல்ல, எங்கள் வீடே சிரித்து ரசித்தது!

- ரங்கம் பாலாஜி, சென்னை-41

அவரைக் கொடி... கோஷம் பிடி!

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் சிறிய அளவில் கறிகாய்கள் பயிரிட்டுள் ளோம். வீட்டுக்கு வந்திருந்த குடும்ப நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது, ''கொல்லையில அவரை போட்டிருந்தீங்களே... என்னாச்சு..?'' என்று கேட்க, ''இப்போதான் கொடி பிடிச்சிருக்கு'' என்றார் என் கணவர். உடனே எங்கள் வீட்டுக் குட்டி, ''அடுத்து கோஷம் போட வேண்டியதுதான்'' என்றாள். நாங்கள் அனைவரும் விழிக்க, உடனே அவள், ''புரியலையா..? கொடி பிடிச்சா, கோஷம் போடணும்ல..?!’ என்றாள் துடுக்காக.

கொடி, கோஷம் எல்லாம் அவளுக்குத் தெரிந்தது எங்களுக்கு வியப்பை யும், அதை அவள் சொன்ன விதம் சிரிப்பையும் தந்தது... நிறைய!

- த.சாந்தி, திருவாரூர்

'கண்ணன் கேர்ளா... பாயா?’

என் பெண், ஒவ்வொரு முறை கம்மல், கழுத்து மாலை, பொட்டு, வளையல் என்று அணியும்போதும், அதெல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடிப்பான் என் பேரன். ''இதெல்லாம் கேர்ள்ஸ் போடுறது, பாய்ஸ் போடக்கூடாது'' என்று சமாதானம் செய்வோம். சமீபத்தில் கிருஷ்ண ஜெயந்திக்கு அவனுக்கு கண்ணன் வேஷம் போடுவதற்காக ஒரு ஃபேன்ஸி ஸ்டோருக்கு அவனை அழைத்துச் சென்று, அவனுக்கு கழுத்து மாலை, கைக்கு கங்கணம், ஒட்டியாணம் என்று ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்து வாங்கினோம். அவனோ, ''நான் கேர்ளா, பாயா..?'' என்று கேட்டுக்கொண்டே இருந்தான். ''இதெல்லாம் கண்ணன் போட்டுக்குவார். நீயும் போட்டுக்கலாம்'' என்றதும், ''அப்போ கண்ணன் பாயா, இல்லை கேர்ளா..?'' என்று விடாமல் கேட்க, கடையில் இருந்த கூட்டம் மொத்தமும் சிரித்துவிட்டது!

- ஜி.இந்திரா, பெங்களூரு