தன்னம்பிக்கை டானிக் தொடர்

மூன்று வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர் கலைச்செல்வி கண்ணபிரான். இன்று இரண்டு கடைகளுக்கு முதலாளி. வயது 45 ஆகிவிட்டாலும், 25 வயது உற்சாகத்தோடு உழைத்துக் கொண்டிருக்கிறது அவர் உடம்பும், மனதும். காய்த்துப்போன கைகளும், வைராக்கியம் ஏறிய மனதுமாக சென்னை, கன்னிகாபுரத்தில் இருக்கும் தன் ஜூஸ் கடையில் வியாபாரத்தில் பிஸியாக இருந்தவர், ''கொஞ்சம் கவனிச்சுக்கப்பா...'' என்று கடையை மகனிடம் ஒப்படைத்துவிட்டு, நம்மிடம் வந்தமர்ந்தார்.

''கண்ணு முன்னால கஷ்டப்பட்டவங்க... இப்போ நல்லா வந்துட்டாங்க பாருங்கனு என்னையும், என் குடும்பத்தையும் இன்னிக்கு நிறைய பேர் ஆச்சர்யமாவும், சந்தோஷமாவும் பார்க்கறாங்க. உண்மைதான். நாலு புள்ளைங்கள வெச்சுக்கிட்டு, அதுங்களுக்கு பசி ஆத்தவே படாத பாடுபட்ட நான், இப்போ அவங்கள நல்ல படியா வளர்த்து, ஆளாக்கி, ரெண்டு பொண்ணுங்களுக்கும் திருப்தியா கல்யாணம் முடிச்சு, ரெண்டு பசங்களுக்கும் ரெண்டு கடைகளை வெச்சுக் கொடுத்துட்டு, சொந்த வீடும் கட்டிட்டேன். எல்லாத்துக்கும் காரணம், சுயமரியாதைதான்... இந்த உலகத்துல நாமளும் நாலு பேரு மதிக்கிற மாதிரி வாழ்ந்துடணுங்கிற வைராக்கியம்தான்!''

- வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார் கலைச்செல்வி.

''நாலாவது வரைக்கும்தான் படிச்சேன். 16 வயசுல கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. என் வீட்டுக்காரருக்கு தனியார் கம்பெனியில வேலை. ஆனா, ரொம்பக் குறைவான சம்பளம். ஆணும், பொண்ணுமா அடுத்தடுத்து நாலு பிள்ளைங்கனு ஆயிட, குடும்பச் செலவுகளை சமாளிக்கவே முடியல. ஒரு நாள் குழாயடிக்குத் தண்ணி பிடிக்கப் போனப்போ, 'தவணையில சேலை வாங்கினா, பணம் கொடுக்க வசதியா இருக்கும், சிட்டிக்குள்ள போய் புடவை எடுத்துட்டு வர்ற செலவும், அலைச்சலும் மிஞ்சும்’னு சில பெண்கள் பேசிட்டு இருந்தது... காதுல விழுந்துச்சு. நாமளே ஏன் மொத்த விலைக்கு சேலை எடுத்துட்டு வந்து, தெருவுல கொடுக்கக் கூடாதுனு சட்டுனு பொறி தட்டுச்சு!''

- நமக்கான வாய்ப்புகள், நம்மைச் சுற்றியேதான் நடமாடிக் கொண்டிருக்கின்றன என்பது, கலைச்செல்வியின் விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது.

''நான் சீக்கிரத்துலயே மத்தவங்ககிட்ட பேசிப் பழகிடுவேன். கூடவே, ஏரியாவுலயும் எனக்குப் பல வீட்டுப் பெண்களோட பழக்கம் இருந்தது. அதனால, கண்டிப்பா என்னால இந்தத் தொழிலை நல்லா செய்ய முடியுங்கிற நம்பிக்கை வந்தது. ஆனா, அன்றாடம் காய்ச்சியான நான், சேலை வாங்க முதலுக்கு எங்க போறது..? வழி தெரியாம வாடினப்போதான், 'உழைக்கும் மகளிர் சங்கத்’தைச் சேர்ந்த பொறுப்பாளர் மலரோட அறிமுகம் கிடைச்சுது. மொத்தமா புடவைகளை வாங்கி, தவணை முறையில் விற்பனை செய்றதுக்காக சங்கத்துல லோன் கேட்டேன். எனக்கு 200 ரூபாய் லோன் கொடுத்தாங்க.

ஆனா, இது மட்டும் போதாதே..? உறவு, நட்புனு நெருக்கமான பெண்கள் சிலர்கிட்ட, 'இந்த முறை முன் பணம் கொடுங்க. புடவை எடுத்துட்டு வந்து கொடுக்குறேன். அந்த லாபத்தையே முதலா போட்டு அடுத்த முறை சரக்கு எடுத்து உங்களுக்கு புடவை கொடுக்கிறேன். புடவை காசு போக மீதி காசை, இன்ஸ்டால்மென்ட்ல உங்களுக்கு திருப்பித் தர்றேன்’னு கேட்டேன். அவங்களும் என்னோட தவிப்பைப் பார்த்துட்டு, சம்மதிச்சாங்க. மொத்த விலைக் கடையில நான் எடுத்துட்டு வந்த புடவைங்களும், அதோட விலையும் அவங்களுக்கு பிடிச்சுப்போக, ரெண்டாவது ரவுண்ட்லயே ரெகுலர் கஸ்டமர்கள் நிறைய கிடைச்சுட்டாங்க. புடவையோட பிளவுஸ் பிட், இன்ஸ்கர்ட், நைட்டினு எல்லாம் விற்க ஆரம்பிச்சேன். லாபம் கூடினது. சரியா கடனைக் கட்டினதால, சங்கத்துல 400, 600, 1000னு கொஞ்சம் கொஞ்சமா லோன் தொகையையும் கூட்டினாங்க. என்னை நம்பி அம்பதாயிரம் ரூபாய் லோன் கொடுக்குற அளவுக்கு, இந்த பதினாறு வருஷமா பாடுபட்டு, புடவை வியாபாரத்துல காலூன்றினேன்!'' என்ற கலைச்செல்வி, அதோடு நின்றுவிடவில்லை.

''மாசத்துக்கு ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சது. ஆனா, குழந்தைகள் வளர வளர, செலவுகளும் கூடிக்கிட்டே வந்ததால, இதுவே போதும்னு இருக்க முடியல. வேற ஏதாச்சும் சேர்த்துப் பண்ணலாமேனு யோசிச்சப்போதான், எங்க ஏரியாவுல அப்போ ஜூஸ் கடை எதுவும் இல்லாம இருந்ததைக் கவனிச்சேன். மறுபடியும் 'உழைக்கும் மகளிர் சங்கத்து’ல ஆயிரம் ரூபாய் லோன் வாங்கி, வீட்டுலயே ஒரு ஐஸ் பெட்டி வாங்கிப் போட்டு, ஆப்பிள், ஆரஞ்சு, லெமன்னு மூணு வகையான ஜூஸ் போட ஆரம்பிச்சேன். ஏரியாவுல ஏற்கெனவே பல வீடுகள் பழக்கம்ங்கிறதால, வீடு வீடா போய் 'சுத்தமா, சுவையா ஜூஸ் போட்டுத் தர்றேன் அக்கா...’னு சொல்லிக் கேட்டேன். அதுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சுது.

அடுத்ததா ஒரு கடை பார்த்து, ஜூஸ் கடை போட்டேன். வீட்டு உபயோகத்துக்கான வாட்டர் கேன்களையும் விற்க ஆரம்பிச்சேன். பாட்டில் கூல்ஸ் டிரிங்க்ஸ் வகைகள் இருந்தாலும், நான் போடற ஹோம் மேடு ஜூஸுக்கு நல்ல வரவேற்பு. இன்னிக்கு வரைக்கும் 'கலைச்செல்வி அக்கா வீட்டு ஜூஸ்'னுதான் சொல்லி வாங்கறாங்க. ஜூஸ் கடையோட ஓட்டம் நல்லா இருந்ததால, பக்கத்துலயே இன்னொரு கடை பிடிச்சு, வாட்டர் கேன் பிஸினஸை தனியா பிரிச்சுட்டேன்''

- இப்படி இவர் தொழிலில் வளர, இன்னொரு பக்கம் இவர் பிள்ளைகளும் வளர்ந்திருக்கிறார்கள்.

''என்னோட புகுந்த வீடு... பாத்ரூம் வசதிகூட இல்லாத வீடுதான். ரெண்டு பொண்ணுங்கள வெச்சுக்கிட்டு, ரொம்பவே அவதிப்பட்டிருக்கேன். கையில கொஞ்சம் காசு சேர்ந்தவொடன நான் பண்ணின முதல் வேலை, வீட்டை விரிவுபடுத்தி, பாத்ரூமோட கட்டினதுதான். இப்படி நான் ஒவ்வொரு படியா ஏறி, என் பிள்ளைங்களோட தேவைகளைப் பூர்த்தி பண்ணினேன். நாலு பேரையும் படிக்க வெச்சேன். பொண்ணுங்களுக்கு கல்யாணம் முடிச்சுட்டேன்.

எம்.பி.ஏ. முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்குற என் மூத்த பையன்கிட்ட வாட்டர் கேன் கடையை ஒப்படைச்சு இருக்கேன். என் ரெண்டாவது பையன் மாற்றுத்திறனாளி. அவனுக்குத் தன்னம்பிக்கை சொல்லி வளர்த்து, 'உன்னால முடியும்டா...’னு இப்போ அவன்கிட்டதான் ஜூஸ் கடையை ஒப்படைச்சு இருக்கேன். புடவை வியாபாரம், கடைகள் மேற்பார்வை நானும் இன்னும் நின்னபாடில்லை. மாசம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் வருது. 'நீங்க எதுக்கும்மா கஷ்டப்படுறீங்க..? இனி நாங்க பார்த்துக்குறோம்’னு பிள்ளைங்க சொல்லும்போது, இந்த வாழ்க்கையை ஜெயிச்சுட்ட சந்தோஷம்!''

- கண்கள் கலங்கிச் சிரிக்கிறார் கலைச்செல்வி!

- இன்னும் உயர்வோம்...