ரேவதி
படம்: பொன்.காசிராஜன்

கறுப்பு - வெள்ளை காலகட்டத்தில் 'அழகு ராணி’ என்று ரசிகர்களால் முடிசூட்டப்பட்டவர், அஞ்சலிதேவி! ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை திருப்தியாகச் செய்யும் திரை உழைப்பாளி. பேசும் கண்கள், மயக்கும் உதடு... அஞ்சலிதேவியின் டிரேட் மார்க் முத்திரை. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தன் வீட்டில், வரவேற்பறை முழுக்க தன் புகைப்படங்களும், ஓவியங்களும் நிறைந்திருக்க, உற்சாகமாக வந்தமர்ந்தார் அந்த 82 வயது கதாநாயகி!

''இந்த படங்கள், ஓவியங்கள் எல்லாம், ரசிகர்கள் எனக்குத் தந்த பரிசு. 'கணவனே கண்கண்ட தெய்வம்’, 'மணாளனே மங்கையின் பாக்கியம்’... இந்தப் படத்தைஎல்லாம் நூறு முறை பார்த்தேம்மா!’னு போன வருஷம்கூட ஒரு ரசிகர், தன் கையால வரைஞ்சு எடுத்துட்டு வந்ததுதான் இந்த ஓவியம். இதோ பாருங்க... என்னோட பிளாக் அண்ட் வொயிட் போட்டோவை கலர் பிரின்ட் பண்ணிக் கொண்டு வந்திருக்கார் இன்னொரு ரசிகர். ரசிகர்களுக்குப் பிடிச்ச நடிகையா இருந்தேங்கற திருப்தி தான், இன்னிவரைக்கும் எனக்கான எனர்ஜி!''

- முகம் முழுக்க சந்தோஷம் அஞ்சலிதேவிக்கு.

''பிறந்தது ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பக்கத்துல இருக்கற பெத்தாபுரம். வீட்டுல செல்லக்குட்டி. என் அப்பா நோகைய்யா, தபேலா ஆர்ட்டிஸ்ட். நாலாவது படிச்சப்போ, என்னை டிராமா கம்பெனிக்கு கூட்டிட்டுப் போய், 'இவ என் மகள். நல்லா நடிப்பா’னு சொன்னதும், 'சத்ய ஹரிச்சந்திரா’ படத்துல 'ரோஹிதாஸ்’னு (தமிழில் லோகிதாஸ் என்று வரும் கேரக்டர்தான்) ஆம்பள பையன் வேஷம் கொடுத்தாங்க. நீளமான முடியை கட் பண்ணினப்போ, அழுகையா வந்தது. ஆனாலும், அப்படி நடிச்ச நாடகங்கள் மூலமா கிடைச்சதுதான் சினிமா வாழ்க்கை.

'யங் மேன் ஹேப்பி கிளப்’ல சேர்ந்து டான்ஸ், நடிப்பு, படிப்புனு எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். அங்கேதான் அறிமுகமானார் மியூசிக் டைரக்டர் ஆதிநாராயணராவ். அவரோட பாசமான பேச்சும், அக்கறையான அணுகுமுறையும் ரொம்பப் பிடிச்சுருந்தது. அவருக்கும் என்னைப் பிடிச்சுப் போக, வீட்டில் சொன்னதும் எங்களுக்கு கல்யாணம் முடிச்சுட்டாங்க. அப்ப எனக்கு 16 வயசுகூட ஆகல'' என்று சிரித்துக் கொண்ட அஞ்சலி தொடர்ந்தார்.

''அமைதியான இல்லற வாழ்க்கைக்கு அழகான பரிசா ரெண்டு ஆண் பிள்ளைகள். அவங்களுக்கு சினிமா வாடையே இல்லாம அற்புதமா வளர்த்தார் கணவர். மூத்தவன் இன்ஜினீயர், இளையவன் டாக்டர். 91-ல அவருக்கு உடம்பு முடியாம காலமானதும், வாழ்க்கையே அஸ்தமிச்ச மாதிரி இருந்தது. ரெண்டு மருமகளும் என்னை தாயா நெனைச்சு பாசம் காட்டி, மறுபடியும் தெம்பா நடமாட வெச்சுட்டாங்க. நான் செஞ்ச புண்ணியம். இப்ப என் பெரிய பேத்திக்கு திருமணம் முடிஞ்சு, கொள்ளுப்பேத்தியையும் கொஞ்சிட்டேன்!''

- அஞ்சலிதேவி பாட்டியை அந்த சிரிப்பு இன்னும் அழகாக்க, தன் திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

''1946-ல 'கொல்ல பாமா’ங்கிற தெலுங்கு படம் சூப்பர் ஹிட். அதுல மோகினியா நடிச்சிருந்தேன். படத்தோட தயாரிப்பாளர், அடுத்து தான் எடுத்த 'மாயக்குதிரை’யில ராட்சஸியா நடிக்கக் கேட்டார். 'ஐயோ... இனி இந்த மாதிரி ரோல் எல்லாம் நடிக்க மாட்டேன்’னு பிடிவாதமா நின்னேன். 'நீ அஞ்சலி தேவியா... ஆர்ட்டிஸ்டா?’னு கேட்டு, என் முடிவை மாத்த வெச்சார் என் கணவர். அதில் இருந்து எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும், அதுக்கு நூறு சதவிகிதம் நியாயம் செய்ற மாதிரி நடிக்கக் கத்துக்கிட்டேன். வாய்ப்புகளும் வரிசை கட்டிச்சு.

தெலுங்குல 350 படங்கள், தமிழ்ல 'அடுத்த வீட்டு பெண்’, 'ஆதித்தன் கனவு’, 'கணவனே கண்கண்ட தெய்வம்’, 'மணாளனே மங்கையின் பாக்கியம்’னு பிஸி ஆனேன். தெலுங்குல நான் தயாரிச்ச 'அனார்கலி’ படம் நல்ல ஹிட். கண்ணாம்பா, பி.யூ. சின்னப்பா நடிச்ச 'மங்கையர்க்கரசி’ படத்துல எனக்கு ரம்பா கேரக்டர். தமிழ் தெரியாததால, தெலுங்குல எழுதி வெச்சுப் பேசுவேன். ஆனா, கண்ணாம்பா பேசற தமிழ் வசனத்தைப் பார்த்து பிரமிச்சிருக்கேன். எனக்கு நல்லா தமிழ் பேசக் கத்துக் கொடுத்தவர் கண்ணாம்பா அம்மாதான்'' என்று நினைவுகளில் மலர்ந்த அஞ்சலிதேவி,

''இந்தப் பிறவியில எனக்கு பாசமான ரசிகர்களையும், உன்னதமான உறவுகளையும், ஆத்மார்த்தமான நட்புகளையும், முக்கியமா... நிம்மதியான வயோதிகத்தையும் கொடுத்த ஆண்டவனுக்கு, நன்றிகள் சொல்றதுல கழியுது என் நாட்கள்!''

- மனதை விட்டு அகலாத அவரது வசீகரப் புன்னகை சுமந்து விடைபெற்றோம்.