வழக்கமாக எப்போதும் உட்கார்ந்து காலையில் காபி அருந்துகின்ற வீட்டின் பின்புற பகுதி, அன்றைக்கு கொஞ்சம் உதிர்ந்த இலைகளுடனும், சருகுகளுடனும் கூடுதல் அழகாக இருந்தது.

பாண்டியம்மா இன்னும் வந்திருக்கவில்லை. காபி டம்ளரைக் கீழே வைத்தபோது, ''எப்போ வந்தீங்க..?!'' என்று அதனைக் குனிந்து எடுத்தபடி எதிரில் நின்றிருந்தாள். சிறுவயதிலிருந்து பார்க்கின்ற அதே உருவம்; முகம் மட்டும் வயதின் கோடுகளால் கொஞ்சம் கலைந்திருந்தது. நெற்றியில் இருக்கும் அந்த நீண்ட தழும்பு, நான் சிறுமியாக இருந்தபோதே எனக்கு அறிமுகமான ஒன்று. அந்தத் தழும்புக்கான கதைகளை ஒவ்வொரு நாளும் ஓர் விதமாகச் சொல்வாள்.

அன்பு மிகுதியினால் 'அவள்’ என்று நான் விளித்தால், அது மரியாதைக் குறைச்சலன்று. அவளும், நானும் கடந்து வந்த இத்தனை வருடங்களில் ஆரவாரமற்ற, உரத்துப் பேசாத ஒரு சிறு வாய்க்காலென, அவளது நேசம் என்னைக் குளிர்வித்திருக்கின்றது. தன் வாழ்நாள் எல்லாம் துப்புரவு செய்வதிலேயே தொலைத்துவிட்ட அவள் மேல் எனக்கு மரியாதையும், அதைவிடக் கூடுதலாகப் பாசமும் உண்டு.

அவளுடைய அம்மா வள்ளி, அப்பா பெரியகருப்பன், கணவர் கருப்பையா என அனைவருமே பஞ்சாயத்துத் துப்புரவு தொழிலாளர்கள்தான். வள்ளிப் பாட்டியை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பஞ்சாயத்துத் துப்புரவு வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து அம்மாவுக்கு உதவுகின்ற அந்தக் கரிய, மெலிந்த கரிசல் நிலத்துப் பாட்டி, தன் தொழில் தன்னோடு தொலையட்டுமென பாண்டியம்மாவை எட்டாவது வரை படிக்க வைத்தாள். ஏனோ அதற்குமேல் படிக்காமல் பாண்டியம்மாவும் தன் அம்மாவின் அதே தொழிலைத் தேர்ந்தெடுத்ததில் எனக்கு மிக வருத்தம்.

ஆனால், அதுகுறித்த எந்த நிந்தனையும், சலிப்புமின்றிப் பாண்டியம்மா தனது ஆறு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியிருக்கிறாள். நான்கு பையன்கள், இரண்டு பெண்களென மொத்தம் ஆறு குழந்தைகளை, ஒரு கிராமப் பஞ்சாயத்தின் துப்புரவுத் தொழிலாளியான பெண் வளர்த்து விடுவதிலுள்ள வலியையும், சிரமத்தையும் நானறிவேன். பெண்கள் வளர்ந்து நிற்கையில் வாங்கிய திருமணக் கடன், வளை க£ப்பு கடன், பிரசவச் செலவுக் கடன் எல்லாம் பலமடங்கு கூடிய பின்பும், தன் உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்து அச்சுமையின் வடுவை உடலில் சுமக்கின்ற அவள், என் தேவைகளின் சேவகி மட்டுமல்ல... நல்ல சிநேகிதியும்கூட.

அய்யனார் மில் தொழிலாளியான ஒரு மகனுக்கும், துப்புரவுத் தொழிலாளியான இன்னொரு மகனுக்கும் தானே முன்னின்று திருமணத்தை நடத்தினாள். இன்றுவரை 'கருப்பையா’ எனும் தன் கணவர் பெயரை அவள் சொன்னதில்லை. சிறு வெட்கமுடன், 'அது’ என அவள் தன் கணவரைச் சுட்டும் அழகுக்கு நான் அடிமை.

தான் எட்டாவது வரை படித்திருப்பதில் சிறு மகிழ்ச்சி உண்டு அவளுக்கு. ஆனால், தன் படிப்பு பெரிதாக நடப்பு வாழ்க்கைக்குக் கைகொடுக்கவில்லை எனும் சலிப்பு கூடுதலாக உண்டு. அவளது தினப்பொழுதுகள் தெருக்களைச் சுத்தப்படுத்துதல், எங்களது வீட்டுப் பணி என வெறும் சக்கையானவைதான். ஆனால், தன் நிதானத்தினாலும், நேர்த்தியான கவனத்தினாலும், கீரை ஆய்வது முதல், குப்பை கொட்டுவது வரை அவள் ஒரு தீவிர முனைப்புடன் அவற்றைச் செய்வது போலிருக்கும். வியர்வையின் பேரழகை நான் முழுவதுமாக தரிசித்தது அவளது முகத்தில்தான்.

இதுவரையில் தன் தேவைகளை அம்மாவிடமோ, என்னிடமோ வாய் திறந்து கேட்காத அவளது முகத்தில்தான் பெரும்பாலும் காலையில் நான் கண் விழிப்பது. ஊரில் இருக்கையில் எனது சாத்தப்படாத அறைக்கதவை அதிகாலையில் சத்தமின்றி, அவள் திறந்து மெதுவாக உள்ளே வருவாள். என் தூக்கம் கெடாத பாவனையுடன், அவள் என்னைப் பார்த்தபடியே தன் வேலைகளை அதிராது முடிப்பதை நான் உணர்ந்தபடி படுத்திருப்பதில் ஒரு தோழமைச் சுகமெனக்கு. என் முகம் சற்று சுணங்கி இருந்தால் போதும், பாண்டியம்மாளுக்குப் பொறுக்காது. கால் சுற்றும் பூனையென வேலை செய்யும் பாவனையுடன் என்னைச் சுற்றிச் சுற்றி வருவாள். ஏதாவது பேசி, நான் இலகுவாகிய பின், என் சிரிப்பைப் பார்த்தபடி சமாதானமாகிக் கிளம்புவாள்.

தன் வளர்ந்த பையன்கள் இருவரும் இன்னமும் வேலையின்றி இருப்பது பெருங்கவலை அவளுக்கு. அதிலொரு மகனுக்குக் காவலர் பணிக்கு நேர்முகத்தேர்வு வரை வந்தும், உதவ முடியவில்லையே எனும் என் குற்றவுணர்ச்சி அறிந்து அவள் சொன்ன 'பரவாயில்லை’ என்ற அந்த ஒரு வார்த்தை... பெருந்தன்மையின் உச்சம். சமயங்களில் வாழ்வின் விழுமியங்களை, அதிகம் படிக்காத அன்பானவர்களே நமக்குக் கற்றுத் தருகிறார்கள் - போகிறபோக்கில் ஒரு மாம்பூ மேலுதிர்வது போல்!

அவளறிந்த உலகம் மல்லாங்கிணறு எனும் என் கிராமம் மட்டுமே. எங்கள் கிராமம் தவிர அவளுக்குத் தெரிந்த இரண்டே இரண்டு ஊர்கள்... கோவில்பட்டியும், திருவிடந்தாபுரமும். தன் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொடுத்த ஊர்கள் என்பதால் ஓரிருமுறை சென்றிருக்கலாம். எனது வெளிநாட்டு பயண அனுபவங்களை நான் அவளிடம் மறந்தும்கூடப் பகிர்ந்ததில்லை... அச்சமயம் அக்கண்களின் ஏதாவதொரு ஓரத்தில் தெரிகின்ற ஏக்கத்தினைச் சந்திக்கும் திராணி எனக்கில்லை என்பதால்.

சமயங்களில் வீட்டு மொட்டை மாடியில் நான் தனித்திருக்கையில், பக்கம் வந்து கொஞ்ச நேரம் நின்றிருப்பாள். என் வீடு எனக்குள் கிளறிவிடுகின்ற அப்பாவைப் பற்றிய நினைவுகளில் நான் திளைத்திருப்பேன். என் முகக் குறிப்பு உணர்ந்து ஒரே ஒரு விம்மலுடன் அதனைப் பகிர்ந்துகொண்டு நகர்ந்துவிடுவாள். அகலாமல், அணுகாமல் அன்பிலே தீக்காயும் அவளுடனான இந்த பந்தம், அவளுடன் முற்றுப்பெறலாம். வள்ளிப்பாட்டியும், அவருடைய மகளான பாண்டியம்மாவும் எங்களது குடும்பத்தில் ஒன்றானதுபோல, அந்தக் குடும்பத்தில் வேறு யாரும் நெருங்கி வரவில்லைதான். அவரவர் எதிர்காலமென தம் சிறகுகளை விரித்தவர்கள் குறித்து மகிழ்ச்சி உண்டு. அது நியாயமும்கூட. உள்ளன்புடன் கூடிய இந்த உறவுத் தொடரின் கண்ணி இவளோடு அறுந்துவிடலாம். அதோடு என் பால்யத்தின் பால் மணக்கும் பக்கமொன்று நிரந்தரமாக மூடப்பட்டும் விடலாம்.

மாடிப்படிகளில் அவள் இறங்கிச் சென்ற ஓசை கேட்கிறது. எனது அறையைவிட்டு மொட்டை மாடிக்குப் போய் அமர்கின்றேன். தெரு அரவமற்றுப் படுத்திருக்கிறது. பச்சை ஜாக்கெட், வாடாமல்லி வண்ணப் புடவையுடன் பாண்டி யம்மா தன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அவள் ஒருபோதும் சேலைக்குப் பொருத்தமாக ஜாக்கெட் அணிந்ததில்லை. பச்சை நிற இலைகளின் நடுவிலே மஞ்சள் நிற சூர்யகாந்திப் பூ பொருந்திப் போவதுபோல, என் வீட்டில் ஒன்றிப்போன அந்தப் பெண் பூ, செருப்பற்ற கால்களுடன் நடந்து வந்து, நாளையும் என்னைத் துயிலெழுப்பும்... அழகான அந்த முன் நெற்றித் தழும்போடு. இந்தக் கணம் அந்தியில் மறைந்து கொண்டிருக்கும் சூரியனுக்குப் பின்புறம் நிலவு இப்போது சோம்பல் முறித்துக் கொண்டிருக்கலாம்!

- இறகு வருடும்...