முன்பெல்லாம் ஐ.ஏ.எஸ். பரீட்சையில் தேர்ச்சி பெற்று, கலெக்டர் ஆவதுதான் பலருக்கும் லட்சியம். இன்றைக்கு அந்த இடத்தை ஏறக்குறைய பிடித்துவிட்டன... டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள்! கடந்த ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி. பரீட்சையில் முதல் முயற்சி யிலேயே தேறி, 11-வது இடத்தை பெற்று, டெபுடி கலெக்டர் ஆகியிருக்கும் ஜனனி சௌந்தர்யாவின் வெற்றி... மேலே சொன்ன விஷயத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

சமீபத்தில் திருமணமான ஜனனியை, சென்னை போரூர் அருகேயுள்ள அவருடைய புகுந்தகத்தில் சந்தித்தோம். ''புதுமணப் பெண், டெபுடி கலெக்டர்... இருவருக்கும் வாழ்த்துக்கள்!'' என்றதும், இன்ஜினீயரான கணவர் ராஜ்குமார், ஜனனியைவிட உற்சாகமானார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஷேர் மார்க்கெட் புரோக்கரேஜ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, இன்றைக்கு ஒரு டெபுடி கலெக்டராகியிருக்கும் முயற்சியை, எளிமையாகப் பகிர்ந்தார் ஜனனி.

''சொந்த ஊர் பட்டுக்கோட்டை என்றாலும்... பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னைதான். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு சின்ன வயதில் இருந்தே கலெக்டர் ஆகவேண்டும் என்கிற ஆசை. அதேபோல... ப்ளஸ் டூ-வுக்குப் பிறகான என் படிப்பை... ஐ.ஏ.எஸ். கனவை நோக்கியதாகவே அமைத்துக் கொண்டேன்.

கல்லூரியில் பி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்தேன். அறிவியல் தொடர்பான அனைத்து விஷயங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்ள இது உதவியாக இருந்தது. அடுத்ததாக... வேலைக்குச் சென்றாக வேண்டிய கட்டாயம். எனவே, எம்.எஸ்சி. படிக்கும் யோசனையை விட்டு, ஷேர் புரோக்கிங் நிறுவனத்தில் சேர்ந்தேன். கூடவே, அஞ்சல் வழிக்கல்வி மூலம் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படித்தேன். கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் பொது நிர்வாகம்... இதனோடு எம்.பி.ஏ. ஃபைனான்ஸும் படித்தால் நிர்வாகத்தையும் தெரிந்துகொள்ளலாம் என அதையும் படித்தேன்''

- ஒவ்வொரு அடியையும் தெளிவான திட்டமிடலுடன் வைத்திருக்கிறார் ஜனனி.

''இதற்கு நடுவே அமெரிக்காவில் நடந்த நிதிக் குளறுபடிகளின் காரணமாக உலக அளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு, பலரும் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். என் வேலைக்கு உடனடியாக எந்த ஆபத்தும் இல்லைதான் என்றாலும், இன்னும் பாதுகாப்பான வேலைக்குப் போக வேண்டும் என்று எண்ணிய நான், ஐ.ஏ.எஸ். கனவை மடை மாற்றி டி.என்.பி.எஸ்.சி. பரீட்சை பக்கம் திருப்பினேன்.

'மற்ற மாநில மக்களுக்காக உழைப்பதைவிட, தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பது இன்னும் சந்தோஷம் தருவதாக இருக்கும். ஐ.ஏ.எஸ். போன்ற நான்கு கட்ட பரீட்சையை எழுதுவதைவிட, டி.என்.பி.எஸ்.சி. பரீட்சையில் எளிதாக கோல் அடிக்கலாம்' என்கிற எண்ணங்கள் என்னை உந்தித் தள்ள... அதே பாதையில் பயணித்தேன்.

ஏதாவது ஒரு நல்ல நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதன் மூலமே நம்மை முழுமையாகத் தயார் செய்துகொள்ள முடியும் என்பதில் நம்பிக்கை கொண்ட நான், அண்ணா நகரில் உள்ள ரேடியன் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். சிலர் இரண்டு, மூன்று முறை பரீட்சை எழுதி டி.என்.பி.எஸ்.சி-யில் தேர்ச்சி அடைகிறார்கள். நானோ... 'இதுவே கடைசி வாய்ப்பு' என்கிற எண்ணத்தை மனதில் ஏற்படுத்திக் கொண்டு கவனமாகப் படிக்க ஆரம்பித்தேன். கடும் உழைப்புக்குப் பலனாக, தமிழக அளவில் 11-வது இடத்தைப் பெற்று, டெபுடி கலெக்டர் பதவியையும் பெற்றுவிட்டேன்!'' என்றவரிடம், டெபுடி கலெக்டரின் பிளான்களைக் கேட்டோம்.

''தமிழகம் முழுக்கப் பல ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதில் பெயர் சொல்கிற மாதிரி இருப்பவை சில நூறு மட்டுமே. மற்ற குழுக்களுக்கு என்ன பிரச்னை, ஏன் அவர்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். முக்கியமாக, நான் எந்த மாவட்டத்தில் பணியாற்றுகிறேனோ, அந்த மாவட்டத்தில் ஒரு சதவிகிதமாவது கல்வி வளர்ச்சியை அதிகப் படுத்த வேண்டும்!''

- ஒரு இளம் டெபுடி கலெக்டருக்கே உரிய வேகத்தோடும், ஆர்வத்தோடும் இருக்கிறார் ஜனனி!

நல்லன விளையட்டும் நாட்டுக்கு!