கணவனும் மனைவியும் தங்களது பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒளிவுமறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை கடந்த இதழில் பார்த்தோம். குடும்பத்தின் நாளைய தூண்களான குழந்தைகளுக்கு, பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதும் மிகமிக முக்கியம். இந்த அஸ்திவாரம்தான்... அடுத்தடுத்த காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சியில் எல்லாம்... பொருளாதாரச் சிக்கலின்றி அவர்கள் நடைபோட உதவும்.

சமீபத்தில் நியூஸ்பேப்பரில் ஒரு செய்தி... 'வடை வியாபாரம் செய்யும் பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு டிரெஸ் வாங்கிக் கொடுத்தனர். குறைந்த விலையில் டிரெஸ் வாங்கிக் கொடுத்த தால் மனது உடைந்து 13 வயது அக்கா, 8 வயது தங்கை இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.'

இந்தச் சின்ன வயதில் தற்கொலை முடிவு எடுக்கும் அளவுக்கு, அவர்களின் மனநிலை இருந்திருக்கிறது. காரணம் என்னவென்று சிந்தித்துப் பாருங்கள். பணம் பற்றிய ஒழுங்கான புரிதல் இல்லாததுதான். தன் பெற்றோரின் வருமானம் குறைவாக இருக்கிறது, அவர்களால் முடிந்ததை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்று நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், அவசரப் பட்டுவிட்டார்கள் அந்த மொட்டுகள். இனி அவர்களின் பெற்றோர், அடுப்புத் தீயில் உழைத்துச் சம்பாதித்து, யாருக்குக் கொடுக்கப் போகிறார்கள்?

பொதுவாக, குழந்தைகள் பணம் பற்றி அறிந்துகொள்ள, ஒரு உண்டியல் வாங்கிக் கொடுத்து சேமிக்கச் சொல்வார்கள். ஆனால், அப்படிச் செய்யும்போது பணத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடும். குழந்தைகளைச் சேமிக்கச் சொல்வதற்கு முன், செலவு செய்யக் கற்றுக்கொடுக்க வேண்டும். 'அருணாசலம்’ படத்தில் ரஜினியிடம் அவருடைய அப்பா 30 கோடி ரூபாய் கொடுத்து, '30 நாளில் செலவு செய்யச் சொல்வார். பணத்தைச் செலவு செய்ய செய்யத்தான், பணத்தின் அருமை உனக்குத் தெரியும்' என்று சொல்வார். நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை என்றாலும், அந்தக் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.

ஐந்தாவது படிக்கும்போது, குழந்தையைப் பக்கத்தில் இருக்கும் கடைக்குப் போகப் பழக்குங்கள். பேப்பரில் எழுதிக் கொடுத்து, 'அரிசி வாங்கிட்டு வா, காய்கறி வாங்கிட்டு வா, பால் வாங்கிட்டு வா’ என்று சாமான்கள் வாங்கிவரச் சொல்லுங்கள். பணத்தைக் கொடுத்து சாமான் வாங்கிக் கொண்டு மீதிப் பணத்தை வீட்டில் வந்து கொடுக்கும்போது, குழந்தைக்குப் பணம் பற்றித் தெரிய வரும். மிச்சமிருக்கும் காசில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயை ஒரு உண்டியலில் போடச் சொல்லுங்கள். அது பெரிய தொகையாகச் சேர்ந்த பிறகு, பேங்கில் அவர்கள் பெயரில் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்து, அதில் போடச் சொல்லுங்கள்.

எதையும் குழந்தைகள் கேட்பதற்கு முன் வாங்கிக் கொடுக்காதீர்கள். ஒரு பொருளைக் கேட்டதும், உங்களிடம் அப்போது பணம் இருந்தாலும், 'இப்ப பணம் இல்லடா கண்ணா... அடுத்த வாரம் வாங்கித் தர்றேன்’ என்று சொல்லுங்கள். குறைந்தபட்சம் ஒருநாள் கழித்தாவது வாங்கிக் கொடுங்கள். அப்போதுதான், 'அப்பாகிட்ட பணம் இல்லை. பணம் இருக்கும்போது கேட்கணும்’ என்பது குழந்தைக்குத் தெரிய வரும். இந்தப் பழக்கம் எல்லாச் சூழ்நிலையிலும் உதவியாக இருக்கும். கேட்டதும் வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்தி, பிறகு பணம் இல்லாத சூழ்நிலையில் வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்றால், குழந்தையால் ஏற்றுக்கொள்ள முடியாது.

உங்கள் குழந்தைகள் சாக்லேட், பிஸ்கட் இது மாதிரி ஏதும் வாங்கித்தரச் சொல்லிக் கேட்டால், இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், தனித் தனியாக ஆளுக்கு ஒரு பாக்கெட் என்று வாங்கிக் கொடுக்கா தீர்கள். ஒன்று வாங்கிக் கொடுத்து, இரண்டு பேரும் பிரித்துச் சாப்பிடப் பழகிக்கொடுங்கள். ஏன் என்றால், பிரித்துக் கொடுக்கும் பழக்கத்தைக் குழந்தையிலேயே பழக்கினால்தான், பின்னால் பணம், சொத்து என்று வரும்போது, நம் தம்பி, தங்கச்சி என்கிற பாசம் வரும். நீங்கள் நினைக்கலாம்... 'சாக்லேட்டில் கூடவா கணக்குப் பார்க்க வேண்டும்’ என்று. இன்று சாக்லேட்டில் பழக்குகிற பகிர்வுதான், பின்னால் பாகப்பிரிவினை வரை தொடரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பிள்ளைகள் கல்லூரி போக ஆரம்பித்ததும், வீட்டு நிர்வாகத்தை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். வீட்டு வாடகை, மளிகை, கேபிள், கரன்ட் பில் என அவர்கள் மூலமாக பணத்தைச் செலவு செய்யுங்கள். எங்கள் வீட்டில் என் இரண்டு பெண்களும்தான் வீட்டு நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். இரண்டு பேரும் கல்லூரியில்தான் படிக்கிறார்கள். இருந்தாலும், 'சின்ன பிள்ளைங்க... அவங்களுக்கு என்ன தெரியும்..?’ என்று நினைக்காமல் குடும்பத்துக்காக வாங்கியிருக்கும் கடன், வருமானம் என எல்லாவற்றையும் தெரிந்துகொண்டதால், தங்களின் வாழ்க்கை என்று வரும்போது, இந்த அனுபவங்கள் எல்லாம் அவர்களுக்குக் கைகொடுக்கும்.

பிஸினஸ் செய்யும் பெற்றோர் என்றால், உங்கள் பிஸினஸில் நடந்த இழப்புகள், ஏமாற்றங்கள் என எல்லாவற்றையும் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்க பிள்ளைகள் பிஸினஸ் ஆரம்பிக்கும்போது, நம் அப்பா செய்த தவறைச் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு ஞாபகம் வந்து, அதைச் செய்யமாட்டார்கள். அதேமாதிரி, உங்களிடம் கார் இருந்தால்கூட பஸ்ஸில் பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்புங்கள். பாக்கெட் மணி அதிகமாகக் கொடுக்காதீர்கள். ஏன் என்றால், வசதி இருக்கும்போது சொகுசான வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, எதிர்பாராதவிதமாக சூழ்நிலை மாறினால், அப்போதும் குழந்தைகள் வாழப் பழக வேண்டும். பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம்மால் வாழமுடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு வர வேண்டும்.

சின்ன வயதில் கீரை, காய்கறி என்று சாப்பிடப் பழக்கினால், பெரியவர்கள் ஆன பின்பும் அதைச் சாப்பிடும் பழக்கம் தொடர்வது போலத்தான்... சிறு வயதிலேயே பணத்தின் மதிப்பை பற்றிச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அதுதான் எதிர்காலத்தில் அவர்களைச் சிறந்த நிதி நிர்வாகி என்றும் உருவாக்கும்!

- பணம் பெருகும்....