''அப்போவெல்லாம் யார்யார் கூட... எப்படியெப்படி எல்லாம் கொண்டாடுவோம் தெரியும்ல!'' என்று ஒவ்வொரு தீபாவளி, பொங்கல், நியூ இயர் என்று முக்கியமான தருணங்களில் எல்லாம் மனதுக்குள் ஒரு நாஸ்டால்ஜியா ஏக்கம் வந்து போகும். இந்தத் தீபத்திருநாள் அன்று, அப்படி தாங்கள் ஏங்கியது யாருக்காக... என்பது பற்றி இங்கே பேசுகிறார்கள் பிரபலங்கள்!

விஷ்ணு, நடிகர்

''என்னை 'கெட் அவுட் ஆஃப் த கிளாஸ்’னு சொன்ன என் புரொபசர் சதாசிவம் சார், நான் ரொம்ப மிஸ் பண்ற ஒரு ஜீவன். நான் எம்.பி.ஏ. படிச்சுட்டு இருந்தப்போ, என்னோட புரொபசர் அவர். எனக்கு ஒரு வருஷம் ஜூனியர், ரஜினி. ரெண்டு பேரும் கண்ணு நிறையப் பார்த்துப்போம். பேசினதே இல்லை. இதை மோப்பம் பிடிச்சுட்டு சார்கிட்ட என் ஃப்ரெண்ட்ஸ் சொல்ல, சதாசிவம் சார் ஒருநாள், 'இப்போ ரஜினிக்கு ரெண்டு அவர்ஸ் ஃப்ரீ. கேன்டீனுக்குப் போய் ரெண்டு பேரும் பேசி, ஒரு முடிவுக்கு வாங்க’னு சொன்னார். நான் தயங்கி நிற்க, 'கெட் அவுட் ஆஃப் த கிளாஸ்’னு சொல்லி என்னை அனுப்பி வெச்சார். நானும் ரஜினியும் எங்க காதலை பரஸ்பரம் ஒப்புக்கிட்டது, ஏத்துக்கிட்டது அன்னிக்குதான். இன்னிக்கு நானும் ரஜினியும் சந்தோஷமான கணவன்- மனைவியா வாழ்க்கையில் இணைஞ்சுருக்கறதுக்கு, சார் ஏத்தி வெச்ச தீபம்தான் முக்கியக் காரணம். நானும், ரஜினியும் உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் சார்!''

சரண்யா மோகன், நடிகை

''முதல் வகுப்புப் படிக்கும்போது எனக்கு மியூஸிக் டீச்சர், ஸ்ரீதேவி மிஸ். தினமும் மிஸ் வீட்டுக்கு கிளாஸுக்குப் போவேன். கீர்த்தனம், வர்ணம் பாடும்போது சங்கதி எல்லாம் சரியா வரலைனா, பொறுமையா சொல்லிக் கொடுப்பாங்க. தினமும் பிராக்டீஸ் பண்ணச் சொல்வாங்க. 'நேத்து பிராக்டீஸ் பண்ணியா..?’னு கேட்கும்போது என்னிக்காச்சும் பொய்யா 'பண்ணினேன் மிஸ்’னு சொன்னா, 'பொய் சொல்றியா..?’னு கரெக்ட்டா கண்டுபிடிச்சுடுவாங்க. பிராக்டீஸ் பண்ணாததைவிட, பொய் சொன்னதுக்கு அதிகமா திட்டுவாங்க. கிட்டத்தட்ட 12 வருஷம் மிஸ்கிட்ட சங்கீதம் கத்துக்கிட்டேன். அப்புறம் ஸ்ரீதேவி மிஸ் அபுதாபி போயிட்டாங்க. தீபாவளி சமயத்துல எப்படியும் வருவாங்கனு அஞ்சு வருஷமா காத்திருக்கேன்... ம்ஹூம்! அடுத்த தீபாவளிக்காச்சும் வந்துடுங்க மிஸ்!''

சாண்ட்ரா, சின்னத்திரை நட்சத்திரம்

''மலையாள சேனலான 'கிரண்’ டி.வி-யில் வேலை பார்த்தப்போ, என்னோட கொலீக், பெஸ்ட் ஃப்ரெண்ட் நீது. தீபாவளி, ஓணம்னு பண்டிகைகள்ல கொட்டம் அடிப்போம். எங்க நட்பைப் பார்த்துப் பொறாமைப்பட்ட இன்னொரு ஃப்ரெண்ட், சதி பண்ணி எங்களைப் பிரிச்சுட்டா. என் மேல எந்தத் தவறும் இல்லைங்கிறதை விளக்குறதுக்குக்கூட நீது எனக்குச் சந்தர்ப்பம் கொடுக்கல. அப்புறம் அவ ஓமன் நாட்டுக்குப் போயிட்டா. அவகூட சுத்தமா தொடர்பே இல்லை. கடந்த அஞ்சு வருஷமா, அவளோட நினைவு இல்லாம கடந்ததில்லை எனக்குத் தீபாவளிகள். சமீபத்துல நீதுகிட்ட இருந்து ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வந்திருந்தது. சந்தோஷத்துல குதிச்சுட்டேன். ஒரு சின்ன ஊடல், செல்ல அழுகை எல்லாமே நடந்தது. ஒருவழியா இந்த வருஷ தீபாவளிக்கு நாங்க ஒண்ணு சேர்ந்துட்டோம்ல. தேங்க்ஸ் டு ஃபேஸ்புக்!''

நித்யா ரவீந்தர், சின்னத்திரை நட்சத்திரம்

''ஃபிஃப்த் ஸ்டாண்டர்டு படிச்சப்போ, எனக்கு மேத்ஸ் எடுத்தாங்க அம்புஜம் மிஸ். அப்போ எனக்கு அவங்கதான் ஹீரோயின். அழகு, அன்புனு என்னைக் கட்டிப் போட்டிருப்பாங்க. எங்க வீடும் மிஸ் வீடும் நடக்கிற தூரம்தான். ஒவ் வொரு தீபாவளிக்கும் நான் அதி காலை எழுந்து, குளிச்சு, புதுப் பட்டுப் பாவாடை போட்டு கிளம்பறதே, அம்மாகிட்ட டிபன் பாக்ஸ்ல முறுக்கு, மைசூர்பாகுனு ஸ்வீட்ஸ் வாங்கிட்டுப் போய், மிஸ்கிட்ட கொடுக்கத்தான். 'ஏய்... வா வா!’னு கண்கள் மலர்ந்து மிஸ் என்னை வரவேற்று, 'சூப்பரா இருக்கு உனக்கு இந்த டிரெஸ்’னு என்னைக் குஷியாக்கி, கொஞ்சுவாங்க. வருஷா வருஷம் தீபாவளி வந்துட்டு போகுது... முன்னைவிட ஸ்வீட்ஸும் நிறைய இருக்கு. ஆனா, டிபன் பாக்ஸ் எடுத்துட்டுப்போக என் அம்புஜம் மிஸ்தான் எங்க இருக்காங்கனு தெரியவே இல்ல.''