ப்யூர் வொயிட் டிரெஸ்ல, என்ன டிசைன் பண்ணினாலும்... அது கொள்ளை அழகாத்தான் இருக்கும். அப்படிப்பட்ட அழகான டிசைன்... 'மல்டிபிள் ஸ்டென்சில் பெயின்ட்டிங்’. இந்த இதழ்ல்ல அதை கத்துக்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்: ஓ.ஹெச்.பி ஷீட் - 4 (ஃபேன்ஸி மற்றும் ஹார்டுவேர் ஸ்டோர்களில் கிடைக்கும்). வெள்ளை சுடிதார் டாப்ஸ் - 1, ஃபைன் ஆர்ட்ஸ் ஃப்ளாட் பிரஷ் - 1, ரெட் கலர் மற்றும் பச்சை கலர் ஃபேப்ரிக் பெயின்ட் - தலா ஒரு பாட்டில், மார்க்கர் பென் - 1.

செய்முறை: ஓ.ஹெச்.பி. ஷீட்டில், மார்க்கர் பென் கொண்டு உங்கள் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பூ வரைய வேண்டும். அப்படி வரையும்போது... பூவின் நடுப்புற இதழ்கள், அதன் அருகில் உள்ள இதழ்கள், வெளிப்புற இதழ்கள் மற்றும் பூவின் வெளி ஓரங்களில் உள்ள இதழ்கள் என நான்கு செக்மென்ட்டாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செக்மென்ட் இதழ்களையும், ஒவ்வொரு ஓ.ஹெச்.பி. ஷீட்டில் மார்க்கர் பேனாவால் வரைந்து, ஒவ்வொரு ஷீட்டுக்கும் ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு என நம்பர் கொடுத்துக் கொள்ளுங்கள்.

வரைந்த அத்தனை இதழ்களின் நடுப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்துவிட்டால்... அதுதான் ஸ்டென்சில் (ஆளுயர கண்ணாடிகள் விற்கும் கடைகளில் கொடுத்தால், இதழ்களின் உள் பகுதியை சரியாக வெட்டித் தருவார்கள்). இப்படி நான்கு ஸ்டென்சில்களை வைத்து ஒரு பெயின்ட்டிங்கை உருவாக்குவதால் தான், 'மல்டிபிள் ஸ்டென்சில் பெயின்ட்டிங்' என்று இதைச் சொல்கிறார்கள்.

முதலாம் நம்பர் போடப்பட்டுள்ள ஓ.ஹெச்.பி. ஷீட்டை, சுடிதார் டாப்ஸில் நீங்கள் விரும்பும் பகுதியில் வைத்து, ஃபைன் ஆர்ட்ஸ் ஃப்ளாட் பிரஷ்ஷை ரெட் கலர் ஃபேப்ரிக் பெயின்ட் டில் நனைத்து, அந்த ஷீட் இதழின் தலைப்பகுதியில் கீழிருந்து மேல்புறமாக பெயின்ட் அடியுங்கள் (படம் 1). அதே இதழின் அடிப்பாகத்தில்... மேலிருந்து கீழ்ப்புறமாக பெயின்ட் அடியுங்கள் (படம் 2). இந்த ஷீட்டில் இருக்கும் அனைத்து இதழ்களிலும் இதேபோல பெயின்ட் அடித்ததும், ஷீட்டை எடுத்து விட்டால்... அழகான ஐந்து இதழ்கள் கிடைக்கும் (படம் 3). அரை மணி நேரம் ஃபேனில் காய விடுங்கள்.

அடுத்து, இரண்டாம் எண் ஷீட்டை எடுத்து, சுடிதாரில் ஏற்கெனவே வரைந்த பூவிதழ்களுக்கு இடையே, படத்தில் காட்டியுள்ளபடி வைத்து விடுங்கள் (படம் 4). முன்பு சொன்னது போலவே, பிரஷ்ஷை ரெட் கலர் ஃபேப்ரிக் பெயின்ட்டில் நனைத்து கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் என பெயின்ட் அடியுங்கள். இப்போது பூவிதழ்கள் ஒன்றின் அருகில் ஒன்று இணைந்து, அழகான பூ வடிவம் கிடைக்கும் (படம் 5). ஷீட்டை அகற்றிவிட்டு, ஃபேனில் அரை மணி நேரம் காய வையுங்கள்.

இதேபோலவே... மூன்று மற்றும் நான்காம் எண் கொண்ட ஓ.ஹெச்.பி. ஷீட்களை, ஏற்கெனவே பெயின்ட் செய்த பூவிதழ்களூடே சரியாக பொருந்துவது போல், டாப்ஸில் வைத்து, தனித்தனியே ஃபேப்ரிக் கலர் தீட்டுங்கள். இப்போது முழுமையான பூ வடிவம் கிடைத்திருக்கும் (படம் 6).

இனி படத்தில் காட்டியுள்ளபடி (படம் 7) ஃபைன் ஆர்ட்ஸ் ஃப்ளாட் ப்ரஷ் மூலம் பச்சை கலர் ஃபேப்ரிக் பெயின்டால் காம்பு மற்றும் இலைகளை நேரடியாக வரையுங்கள். அரை மணி நேரம் காய வைத்தால்.. அட்டகாசமான டிசைனில் டாப்ஸ் ரெடி!

ஒரு டாப்ஸில் இதுபோல மூன்று பூக்களை ஒன்றன் கீழ் ஒன்றாக வரையலாம். பூக்களைச் சுற்றி உங்கள் கிரியேட்டிவிட்டிக்கு ஏற்ப டிசைன்களையும் செய்யலாம்.

ஒவ்வொரு முறை ஓ.ஹெச்.பி. ஷீட்டை உபயோகித்த பின்பும், துணியை அரை மணி நேரம் காய வைக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். இல்லையென்றால், துணி களில் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். அதேபோல, ஃபேப்ரிக் பெயின்ட் கொண்டு டிசைன் செய்யும்போது, டாப்ஸின் உள்பக்கம் நியூஸ் பேப்பரை நான்காக மடித்து வைக்க மறக்கக் கூடாது. அப்போதுதான் துணியின் மறுபாகத்தில் கலர் ஒட்டாமல் இருக்கும்.

- இன்னும் கத்துக்கலாம்...