பிரதோஷ விரதம்... தற்போதெல்லாம் மிகப்பரவலாக பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுவதை சிவாலயங்களில் காண முடியும்! அந்த பிரதோஷத்துக்கான காரணத்தை இங்கே நாம் காண்போமா!

பிரதோஷம் என்பது... வடமொழிச் சொல். 'ப்ர’ என்றால்... 'மிகவும் அதிகமான’ என்றும், 'தோஷம்’ என்றால்... 'தீமை’ என்றும் பொருள். ஆக, 'மிகவும் அதிகமான தீமை தரும் வேளை’ என்பது பொருள். ஆலகால விஷம் தோன்றிய நேரம் 'பிரதோஷம்’ எனப்படுகிறது. பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டால்... மூன்று திருக்குட முழுக்கு விழாக்களை தரிசித்த பயனும், நூறு சிவத் திருத்தலங்களை ஒரே சமயத்தில் தரிசித்த பயனும் உண்டு என்பது சான்றோர் வாக்கு.

பகலின் முடிவு... சந்தியா காலத்தின் தொடக்கம்... உலகம் ஒடுங்குகிறது. மனம் ஈஸ்வரனிடத்தில் ஒடுங்க அதுவே நல்ல நேரம். பிரதோஷ காலம் என்பது பகல் முடிந்து, அந்தி நேரம் ஆரம்பமாகும் சமயத்திலிருந்து வானில் நிலவு உதயமாகும் வேளை வரை உள்ள காலம் என்பர் (மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை).

ஒவ்வொரு மாதமும் அமாவாசையிலிருந்து 13-ம் நாளும், பௌர்ணமியிலிருந்து 13-ம் நாளும் திரயோதசி திதி. அன்றுதான் பிரதோஷ நாள். மாதத்துக்கு இரண்டு பிரதோஷ நாட்கள் வருகின்றன. உதாரணமாக, எதிர்வரும் கார்த்திகை மாதத்தில் 7 மற்றும் 21 ஆகிய இரு தேதிகளில் (நவம்பர் 23 மற்றும் டிசம்பர் 7) வருகின்றன.

பிரதோஷங்கள் 5 வகைப்படும்.

நித்ய பிரதோஷம்

தினமும் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்றான். சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்புள்ள காலம் முதல், விண்ணில் நட்சத்திரங்கள் தோன்றும் காலம் வரை உள்ள சந்தியா வேளையே நித்ய பிரதோஷம். இந்த வேளையில், மகாவிஷ்ணு இரண்யகாசுரனை வதம் புரிந்ததால், இதனை இரண்யவேளை என்றும் கூறுவர்.

பட்ச பிரதோஷம்

மாதந்தோறும் வளர்பிறை காலத்தில் வரும் திரயோதசி திருநாளின் மாலை நேரத்தை பட்ச பிரதோஷம் என்பர்.

மாத பிரதோஷம்

மாதந்தோறும் தேய்பிறை காலத்தில் வரும் திரயோதசி திருநாளின் மாலை நேரத்தை மாத பிரதோஷம் என்பர்.

மகா பிரதோஷம்

மாதந்தோறும் வரக்கூடிய தேய்பிறைத் திரயோதசி திதியானது, சனிக்கிழமைகளில் வரப்பெற்றால்... அதுவே மகா பிரதோஷம். சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டது சனிக்கிழமை. ஆதலால், இதுவே மிகச்சிறந்த பிரதோஷம் என்பர். சனி பிரதோஷம் என்றும் கூறப்படும்.

பிரளய பிரதோஷம்

என்றாவது ஒருநாள் பிரளயம் ஏற்படுகிற காலத்தில், அனைத்தும் சிவனிடத்தில் ஒடுங்கும். அந்த நேரமே பிரளய பிரதோஷம்.

என்றும் மாறா இளமையையும், மரணமிலாப் பெருவாழ்வையும் தரவல்லது அமிர்தம் ஆகும். தேவர்களும் அரக்கர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற விழைந்தனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் பூட்டித் திருப்பாற்கடலைக் கடைந்தனர். விஷ்ணுவின் ஆணைப்படி பாம்பின் வால்பக்கம் தேவர்களும், தலைப்பக்கம் அசுரர்களும் பிடித்துக்கொண்டு கடைந்தனர். திருமால் தானே பெரிய ஆமையாகி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து பாற்கடல் கடைய உதவினார். வாசுகிப் பாம்பு வேதனை மிகுந்து ஆலகால விஷத்தைக் கக்கிற்று.

ஆமை உருவிலிருந்த திருமாலின் மேனி ஆலகால விஷத்தின் வெம்மையால் கார்மேகம் போல் நிறம் மாறிற்று. தேவர்கள் தங்கள் துன்பத்தைப் பரமேஸ்வரனிடம் முறையிட எண்ணி கயிலாயம் சென்றனர். அவர்கள் கயிலையை வலம் செய்ய இயலாமல் எங்கும் விஷ மண்டலம் பரவித் தடுத்ததால் அப்பிரதட்சணமாக ஓடினர். அவர்கள் சிறிது தூரம் சென்றதும் அங்கும் விஷமண்டலம் தாக்கவே, மீண்டும் வந்த வழியே திரும்பி ஓடினார்கள் (இவ்வாறு தேவர்கள் கயிலையை அப்பிரதட்சணம் செய்ததால், பிரதோஷ வழிபாட்டில் சோம சூக்தப் பிரதட்சணம் என்ற, அப்பிரதட்சணம் வரும் முறை பின்பற்றப்படுகிறது).

தேவர்களின் நிலை கண்டு இறங்கி, சிவபெருமான் சுந்தரரை அழைத்து விஷத்தை எடுத்து வரும்படி பணித்தார். ஆலகால விஷத்தை திரட்டி இறைவனிடம் சுந்தரர் அளிக்க, சிவன் அதனைத் தம் வாயில் போட்டுக்கொள்ள, பார்வதிதேவி அவரது கண்டத்தைத் தம் திருக்கரத்தால் மெள்ள அழுத்த, அந்தக் கொடிய நஞ்சு இறைவனின் திருக்கண்டத்திலேயே தங்கிவிட்டது. இதுதான் நீலகண்டருக்கான பெயர்க் காரணம்!

மீண்டும் திருப்பாற்கடலைக் கடைய, காமதேனு, கற்பகத்தரு, உச்சிரவம் என்னும் குதிரை, தேவமகளிர், தண்மைமிக்க சந்திரன், மகாலட்சுமி அனைவரும் திருப்பாற்கடலில் தோன்ற, திருமகளைத் திருமால் மார்பில் ஏந்தினார். இரவு முழுவதும் கழிந்து, மறுநாள் துவாதசி அன்று அதிகாலை பாற்கடலில் அமுதம் தோன்றியது. அரக்கர் உண்டால் அழிவைத்தான் தருவர் என்பதால், மோகினி வடிவம் எடுத்து, அரக்கர்களை மயக்கி அமுதத்தைத் தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தார் திருமால்.

பிரளய பிரதோஷம் எனப்படும் ஊழிக்காலத்தில் அனைத்தும் சிவனுள் ஒடுங்கும். ஆனால், நந்தி தேவர் மட்டும் ஒடுங்காமல், தாம் பெற்ற வரத்தால் சிவனுடைய வாகனமாக இருப்பதால், பிரதோஷத்தன்று நந்தியை வழிபடுவது சிறந்தது. பிரதோஷ வேளையில் நந்தி தேவருக்கும் சிவபெருமானுக்கும் சேர்த்து வழிபாடுகள் கோயிலில் நடைபெறுகின்றன.

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே
- இப்படி திருமூலர் போற்றுகின்றார்.

- கொண்டாடுவோம்...

பிரதோஷ விரதம் இப்படித்தான்!

நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்... சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது. நஞ்சை உண்டு எல்லா உயிர்களையும் காப்பாற்றிய பின்னர், மயக்கமுற்ற நிலையில் அன்னை மடிமீது சாய்ந்திருக்கின்ற தோற்றம்... வேறெங்கும் காண இயலாது. திருவள்ளூர் அருகில் ஊத்துக்கோட்டையிலிருந்து 8 கி.மீ தூரத்தில், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள இத்தலத்தில் திருச்சடாரி சூட்டப் பெறுவதும் மற்றொரு சிறப்பு.