சென்னைக்கு அடுத்து, மண் விலை பொன்போல உயர்ந்து நிற்கிறது கோயம்புத்தூரில். 'விரிவாக்கம்’ என்கிற பெயரில் புறநகர்களுக்கும் சிட்டி வர்ணம் பூசப்பட்டிருப்பதால், விலையெல்லாம் விண்ணைத் தொடுகின்றன. ஆனாலும் 'சொந்த வீடு’ என்கிற லட்சியத்தைக் கைவிட்டுவிட முடியுமா என்ன?!

இன்னொரு பக்கம், இந்த நில விலையேற்றம் மிகப்பெரிய நல்ல காரியம் ஒன்றையும் செய்திருக்கிறது. அதாவது, திருமணம் முடிந்து அதே ஊரில் செட்டிலாகும் பிள்ளைகள், தனிக்குடித்தனம் போகத் துடிக்காமல் பெற்றோருடன் ஒரே வீட்டில், தனித்தனி சௌகரியங்களுடன் வாழும் மனநிலை மெள்ள உருவாகி வருகிறது. அதனால், 'தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என அத்தனை பேரும் ஒரே கூரையின் கீழ் சகல வசதிகளுடன் வாழ்வதற்கேற்ற வீடுகள் கட்டப்படுமா?’ என்று கேட்டால் ''நிச்சயம்!'' என்று நிம்மதிப் புன்னகை தருகிறார், கோயம்புத்தூர் 'செல்வம் பில்டர்ஸ்’ உரிமையாளரான பொறியாளர் பன்னீர்செல்வம்.

அவினாசி சாலையில், கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையைத் தாண்டி, இடதுபுறம் சிறிது உள்வாங்கி இருக்கும் பி.எல்.எஸ். நகரில், தனது வாடிக்கையாளருக்கு மூன்று சென்ட் நிலத்தில்... தரைத்தளம் 1,000, முதல் தளம் 1,000 என... சுமார் 2,000 சதுர அடியில் இவர் கட்டியிருக்கும் வீடுதான் அதற்கு ஆதாரம்!

''தரைத்தள முகப்பில் இரண்டு டூ-வீலர்கள் மற்றும் ஒரு கார் நிறுத்துவதற்கான போர்டிகோ அமைச்சுருக்கோம். சின்ன காரா இருந்தா நேராவும், பெரிய காரா இருந்தா கொஞ்சம் குறுக்காவும் நிறுத்திக்கலாம். வரவேற்பு அறை ரொம்பவே விசாலமா இருக்கும். வளைகாப்பு, பேர் சூட்டுதல் மாதிரியான வீட்டு வைபவங்களை இந்த ஹால்லேயே பண்ணிக்கலாம். காற்றோட்டம் ப்ளஸ் சூரிய வெளிச்சம் வரக்கூடிய இந்த ஹால்ல, ஜன்னல்கள மரத்துலயே அமைச்சுருக்கோம்.

ஹால் தாண்டினதும்... டைனிங் ரூம். நாலு பேர் வசதியா உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இந்த ரூமை தொட்டமாதிரியே தரைதளத்துக்கான பெட்ரூம் இருக்குது. அழகான வாஷ் பேஸின் செட்டப் மற்றும் வெஸ்டர்ன் டைப் டாய்லெட், ஷவர் இணைக்கப்பட்ட பாத்ரூம் அட்டாச் பண்ணியிருக்கோம். டைனிங் ஹாலை அடுத்து கிச்சன். கேஸ் ஸ்டவ் வைக்கறதுக்கு கிரானைட் கல் மேடை அமைச்சுருக்கோம். மளிகைப் பொருட்கள் வைக்கறதுக்காக திறந்த அலமாரி இருக்குது. மூடிய டைப்ல பண்றது எக்ஸ்ட்ரா செலவு மட்டுமில்ல, மளிகைப் பொருட்கள காற்றோட்டமான வகையில வைக்கறதுதான் சுகாதாரமும்கூடங்கறதால இந்த ஏற்பாடு! கிச்சனை கடந்தா... பின் வாசல்ல துணி துவைக்கறதுக்கான ஏரியா. தனியா பைப் கனெக்ஷன் இருக்குது'' என்ற பன்னீர்செல்வம்,

''வரவேற்பறையின் வலது ஓரத்துல முதல் தளம் போறதுக்கான கிரானைட் கல் பதிக்கப்பட்ட படிக்கட்டு இருக்கு. கைப்பிடி தேக்குல போட்டிருக்கோம். கம்பீரமா இருக்கறது மட்டுமில்லாம... நீண்டநாள் உழைக்கவும் செய்யும். மாடி ஏறினதும் விசாலமான வராண்டா. இடது, வலது பக்கங்கள்ல ரெண்டு பெட்ரூம் இருக்கு. ரெண்டுமே பாத் அட்டாச்டுதான். பசங்க படிக்கறதுக்காக கம்ப்யூட்டர்ல ஆரம்பிச்சு எல்லாவித வசதியையும் ஏற்படுத்திக்கக் கூடிய வகையிலயும் இந்த அறைகளை அமைச்சுருக்கோம்.

இடதுபுற பெட்ரூமை தாண்டினா, அழகான பால்கனி. எல்லா பாத்ரூம்லயும் சுடுதண்ணீர் வசதிக்காக சோலார் பவர் ஏற்பாடு பண்ணியிருக்கோம். வாட்டர் ப்யூரிஃபையர், யு.பி.எஸ். வசதியும் பக்காவா இருக்கு'' என்றவரிடம், எஸ்டிமேட் கணக்குகளைக் கேட்டோம்.

''சதுர அடிக்கு 1,250 ரூபாய் செலவாகியிருக்கு. மொத்தமா கணக்குப் போட்டா... சுமார் 25 லட்ச ரூபாய். காம்பவுண்ட் சுவர் துவங்கி ஈ.பி. கனெக்ஷன் வரை இதுல அடக்கம். இன்னும் ஒதுக்குப்புறமான ஏரியாவுல இதைவிட குறைஞ்ச செலவுல வீடு கட்டிட முடியும். ஆனா... ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு போய் வர தினப்படி செலவுலேயே வருமானத்துல பெருமளவு கரைஞ்சுடும். மெட்ரோபாலிட்டன் அந்தஸ்தை நோக்கி விறுவிறுனு நகர்ந்துகிட்டிருக்கற கோவை நகரத்துல, இந்தச் செலவுல... இவ்வளவு வசதியில... வீடுங்கறது வரம் மட்டுமில்ல, புத்திசாலித்தனமும்கூட!'' என்கிறார் பன்னீர் செல்வம்!

கிரகப்பிரவேசத்துக்கு திட்டமிடுபவர்கள் கவனிக்க!

- கட்டுவோம்...