'சோலைப் பசுங்கிளியே...
சொந்தமுள்ள பூங்கொடியே...
கோடி திரவியமே...
வந்தது... வந்தது... ஏன்
கொள்ளை
போனது... போனது... ஏன்
ஆவித் துடிக்கவிட்டு
சென்றது... சென்றது... ஏன்
விட்டு
சென்றது... சென்றது... ஏன்?

இசைஞானிக்கு, இதய ஜீவனாக இருந்த ஜீவா, தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டுவிட்டார் 60 வயதில்! இளையராஜாவின் இசை அரண்மனையில் எல்லாமுமாக இருந்த அந்த மஞ்சள் முகத்தின் இழப்பால், துக்கம் சூழ இருக்கிறது அந்தக் குடும்பம்.

ஜீவாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான ஜெயந்தி கண்ணப்பன் (கவியரசு கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள்), தன் தோழியின் அறியப்படாத பக்கங்களை கண்ணீர் ஈரத்துடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

''ஜீவாவுக்கு அத்தனை லட்சுமிகரமான முகம். புடவை, நகையில் ரசனையா இருக்குற பெண்களை நான் பார்த்திருக்கேன். ஆனா, வீட்டோட நிலை தொடங்கி, ஜன்னல் ஸ்க்ரீன் வரைக்கும் ஆர்க்கிடெக்ட் அளவுக்கு அசத்தும்... குக்கிராமத்தில் பிறந்த அவளோட ரசனையைப் பார்த்து நான் அப்பப்ப ஆச்சர்யப்பட்டுத்தான் போவேன். ஒருதடவை வெனிஸ் நாட்டுக்குப் போயிருந்தப்போ, அங்கே அவ பார்த்த வெள்ளைத் தூண்போல் தன் வீட்டுக்கும் வேணும்னு, தூணுக்கு வெள்ளை டைல்ஸ் தேடி நீலாங்கரையில் அவ அலைஞ்ச ஆர்வம், இப்பவும் என் கண்ணுக்குள்ள நிக்குது!

பிரபலங்கள் பலர் தங்களோட பேட்டியில, ராஜா அண்ணன் வீட்டுப் பூஜை அறையையும், அதோட தெய்வீகத்தையும் பிரமிச்சு சொல்லி இருப்பாங்க. உண்மையில் அது ஜீவாவின் ஆன்மிக ஆளுமை. தவறாம வரலட்சுமி நோன்பு இருப்பா. நவராத்திரி அப்போ... தினமும் வீட்டுல திருவிழாதான். மதுரை, மீனாட்சி மேல அவளுக்குப் பக்தி பித்து. ராஜா அண்ணனோட அடிக்கடி தாய் மூகாம்பிகை கோயிலுக்குப் போறது அவ மனசுக்கு திருப்தியான விஷயம். நான், ஜீவா, பவதாரிணி எல்லாரும் சேர்ந்து கடைசியா போனது, கேரள மாநிலத்துல இருக்கற ஆலப்புழா அம்மன் கோயில். கொச்சி, தாஜ் மலபார் ஓட்டல்ல தங்கியிருந்தோம். 'இந்த ரூம்லதான் அவர் சிம்பொனி இசையை கம்போஸ் பண்ணினார்’னு ஜீவா சிலாகிச்சு சொன்னப்போ, நான் சிலிர்த்துட்டேன்!

ஜீவா போன் பண்ணி நான் எடுத்ததும், 'ஜெயந்தீ’னு கொஞ்சுற அவ குரல், அவ்ளோ இனிமையா இருக்கும். அவளை நான் 'தேன்மொழியாள்’னுதான் கூப்பிடுவேன். 'ராஜா அண்ணன், யார் யாருக்கோ பாட்டுப்பாட சான்ஸ் தர்றார். நீ பாடக்கூடாதா?’னு கேட்டா, 'நீதான் மெச்சிக்கிறே!’னு ஒரு குறும்புப் புன்னகையோட அந்த உரையாடலைக் கடப்பா. பவதாரணி ஒரு மேடையில 'ஜனனி ஜனனி’ பாடலைப் பாடினப்போ, முன் வரிசையில் உட்கார்ந் திருந்த ஜீவா, சங்கீத சங்கதிகளை தன்னோட கண்ணாலயே சமிக்ஞை செய்து காண்பிச்சப்போ, ஆச்சர்யப் பட்டுப் போனேன். அவளுக்குள்ள ஒரு இசைராணி ஒளிஞ்சுருந்ததை அப்போதான் பார்த்தேன்'' என்று கண்கள் கசிந்தவர்,

''இளையராஜா பேர்ல இசைக் கல்லூரி அமைக்கணுங்கிறது ஜீவாவோட கனவு. இறக்கறதுக்கு ரெண்டு நாள் முன்ன, 'ஜெயந்தி... தாம்பரம் தாண்டி மியூஸிக் காலேஜுக்கு இடம் பார்த்துட்டு வருவோம் வா’னு கூட்டிட்டுப் போனா. இப்போ மொத்தமா போய்ச் சேர்ந்துட்டா.

மகள் பவதாரிணினா போதும், 'பவதாம்மா’னு உயிரை விடுவா ஜீவா. பாருங்க... பவா வயித்துல அவ மகளா பொறப்பா. இதுவரைக்கும் பவாவை கொஞ்சினா ஜீவா. இனிமே... ஜீவாவைக் கொஞ்சப்போறா பவா!''

எல்லா இழப்பையும் தேற்றும் நம்பிக்கை அதுதானே?!