பிரீமியம் ஸ்டோரி

திருமணத்துக்கு வருமாறு தன் நண்பர்களையும் சுற்றத்தாரையும் அழைக்கும் அழைப்புக் கடிதமாக  இருந்த திருமண அழைப்பிதழ்கள்  தற்போது வளர்ந்து வரும் நாகரிகத்துக்கு ஏற்பவும் மணமக்களின் விருப்பத்துக்கேற்பவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகின்றன. அந்த வகையில் சில கஸ்டமைஸ்டு டிசைனர் வெடிங் இன்விடேஷன்கள் உங்கள் பார்வைக்கு...

டிசைனர் வெடிங் கார்ட்ஸ்!

கேன் பவுச் (Cane pouch)

வெள்ளை நிறத்தில் தங்க நிறம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழுடன் உலர் பழங்களை வைத்து வரவேற்கலாம். இதன் விலை `1,100

டிசைனர் வெடிங் கார்ட்ஸ்!

ஸ்டோல் கார்ட் (Stole card)

பண்டைய நாகரிகத்தை பறைசாற்றும்விதமாக ஓலைச்சுவடி வடிவத்தில், பார்ப்பவரை ஓர் விநாடி அரண்மனை திருமண விழாவுக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. விலை `1800

டிசைனர் வெடிங் கார்ட்ஸ்!

பாங்காக் தீம் (Bangkok theme)

தாய்லாந்தில் நடைபெற்ற திருமணத்தின் 6 வெவ்வேறு நிகழ்வுகளுக்கான தனித்தனி அழைப்புக் கடிதங்களை, ஒரே அழைப்பிதழாக கொடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில் உள்ள 6 அறைகளுக்கும் அடியில் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்கள், இனிப்புகள் என நிரப்பி விருந்தினர்களை அழைக்கலாம். விலை `2,200

டிசைனர் வெடிங் கார்ட்ஸ்!

மேன் இண்டஸ்ட்ரி கார்டு: (Man industries)

அடர் நீலம் மற்றும் க்ரீம் நிறத்தில் தங்க நிற எழுத்துக்கள் பதித்து ரிச்சாக இருக்கும் இது, பிரபல மேன் இண்டஸ்ட்ரி நிறுவனத்தினருக்காக பிரத்யேகமாக கஸ்டமைஸ்டு செய்யப்பட்டது. இதுபோல நீங்களும் உங்கள் இல்லத் திருமணத்துக்கென பிரத்யேக அழைப்பிதழை வடிவமைத்துக்கொள்ளலாம். விலை `575.

டிசைனர் வெடிங் கார்ட்ஸ்!

டோலி தீம் திருமண அழைப்பிதழ் (Doli Theme Wedding Card)

மணப்பெண்ணை டோலி எனப்படும் பல்லக்கில் தூக்கிச் செல்வதை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த டிசைனர் கார்டின் விலை `1,700.

டிசைனர் வெடிங் கார்ட்ஸ்!

ராதா கிருஷ்ணா தீம் கார்டு (Radha Krishna theme card)

பாரம்பர்ய கலைநயத்தோடு ராதா கிருஷ்ணா உருவம் பதிந்த கார்டின் விலை `375 

டிசைனர் வெடிங் கார்ட்ஸ்!

ஆட்டம் தீம் திருமண அழைப்பிதழ் (Autumn theme wedding card)

 இலையுதிர் காலத்தின் அழகிய இலை வடிவத்தை மையமாகக்கொண்டு டிசைன் செய்யப்படிருக்கும் இந்த கார்டின் விலை `575

டிசைனர் வெடிங் கார்ட்ஸ்!

சைஃப் அலி கான் (Saif Ali khan)

 சைஃப் அலி கான் - கரீனா கபூரின் திருமணத்துக்கென இருவரின் குடும்ப லோகோவுடன் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டது. இதுபோல் எளிமை கொஞ்சும் அழகில் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வடிவில் அழைப்பிதழ் டிசைன் செய்துகொள்ளலாம். விலை `375.

- அ.ஐஸ்வர்யா லட்சுமி 

உதவி : வர்தா, சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு