பிரீமியம் ஸ்டோரி
வானிலே  தேனிலவு!

சின்னத்திரையின் ‘தி மோஸ்ட் ரொமான்ட்டிக் கப்பிள்’ எனக் கொண்டாடப்படுகிறவர்கள் நிஷாவும் கணேஷ் வெங்கட்ராமும். போன மாதம்தான் முதல் திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களது தேனிலவு கொண்டாட்டம் மட்டும் இன்னும் ஓயவில்லை. 2017-ல் இன்னொரு ஹனிமூன் ட்ரிப்புக்கு புக் செய்து விட்டு, அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அளவுக்கு அநியாயக் காதல் ஜோடி!

“எங்களோட ஆல்டைம் ஃபேவரைட் ஹனிமூன் ஸ்பாட்னா அது துபாய்தான். 2017-ன் அட்வான்ஸ் புக்கிங் ஹனிமூனும் அங்கதான்” சந்தோஷத்  துள்ளலுடன் ஆரம்பித்தார் நிஷா,

வானிலே  தேனிலவு!

“கல்யாணத்துக்கு முன்னாடி லாஸ் ஏஞ்சல்ஸ்லதான் ஹனிமூனுக்காக பிளான் பண்ணியிருந்தோம். 2015 வெள்ளம் வந்ததுல எல்லாம் சொதப்பி, கேன்சலாயிடுச்சு. உடனே போற மாதிரியான இடம் என்னன்னு அலசி ஆராய்ஞ்சு யோசிச்சு, துபாய்தான் எங்க டேஸ்டுக்கு சரியா இருக்கும்னு ஃபிக்ஸ் பண்ணிட்டோம். வழக்கமா நாங்க ஒரு லாங் ட்ரிப், அதாவது வெளிநாட்டுல ஒரு ட்ரிப்பும், அடுத்து இந்தியாவுக்குள்ள ரெண்டு சின்ன ட்ரிப்பும் போறதா டிராவல் பிளான் பண்ணுவோம். நவம்பர்ல கல்யாணமாச்சு.  கல்யாணம் முடிஞ்சதும் ஒரு வாரம் கோவா போயிட்டு வந்தோம். மறுபடி நியூ இயருக்கு துபாய் போனோம்’’ என்பவர் தொடர்ந்து...

வானிலே  தேனிலவு!

“கல்யாணமாகிறதுக்கு முன்னாடி வேலை விஷயமா அடிக்கடி துபாய் போயிருக்கேன். ஆனா, வேலையை முடிச்சிட்டு வந்துடுவேன். சுத்திப் பார்க்கவெல்லாம் நேரம் இருந்ததில்லை. அதனால ஹனிமூன் ட்ரிப்புக்கு துபாய் போனபோது அது ரொம்பவே ஸ்பெஷலா இருந்தது. நியூ இயர்க்கு துபாய்ல உலகப் பிரபல வாண வேடிக்கைகளைப் பார்க்கலாம். அது அவ்வளவு அழகான காட்சி. புர்ஜ் கலிஃபாவுல தொடங்கி  தி பாம் ஹோட்டல் வரைக்கும் வரிசையா அந்தக் காட்சியைப் பார்க்கலாம். துபாய் போறவங்க அதை மிஸ் பண்ணவே கூடாது.

அடுத்து துபாய் ஸ்பெஷல்னா... அது யெல்லோ போட் ரைடுதான். டிராவல்ஸ் மூலமா ட்ரிப் பிளான் பண்றவங்களுக்கு யெல்லோ போட் பத்தின டீடெய்ல்ஸ் தெரிய வாய்ப்பில்லை. கணேஷோட பெஸ்ட் ஃப்ரெண்ட் துபாய்லதான் இருக்கார். அவர்தான் எங்க ட்ரிப்புக்கு எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிக் கொடுத்தார். அதனாலதான் இந்த போட் ரைடு பத்தி எங்களுக்குத் தெரிஞ்சது. டிசம்பர் 31 சாயந்திரம் 5.30 மணிக்கு யெல்லோ போட் ரைடு கிளம்பினோம்.  செம ஸ்பீடான ரைடு.... அட்லாண்ட்டிஸ், பாம் ஜுமைரா, புர்ஜ், அல் அராப்னு எல்லா முக்கியமான இடங்களையும் சுத்திப் பார்க்கலாம். 31-ம் தேதி அந்த ட்ரிப் போறதால, அந்த வருஷத்தோட கடைசி சூரிய அஸ்தமனத்தையும் பார்த்து ரசிக்க முடியும். 5.30 மணிக்கு புக் பண்ணினதால வெளிச்சத்துலயும் சூரியனைப் பார்த்தோம். அது மறையற அழகையும் பார்த்தோம். திரும்பும்போது இருட்டிடுச்சு. இருட்டுல அந்தக் கடல் இன்னும் பிரமாதமா இருக்கும்” அழகிய கண்கள் விரிய தன் அனுபவத்தை ரசித்து பேசும் நிஷா மேலும்,

வானிலே  தேனிலவு!

“துபாய் போற யாரும் மிஸ் பண்ணவே கூடாத இன்னொரு இடம் புர்ஜ் அல் அராப். உலகத்தின் உயரமான ஹோட்டல்கள்ல இதுவும் ஒண்ணு. 321 மீட்டர் உயரமாம்! இங்கே ஒரு டின்னர் போனோம். வெளித்தோற்றம் எவ்வளவு அழகோ, அதைவிட அழகான இன்டீரியர்... அதை விட்டு வெளியில வரவே மனசு வரலை. அதேமாதிரி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் ரொமான்ட்டிக் ரெஸ்டாரண்ட்டுனு சொல்ற ‘பியர்சிக்’லதான் எங்களோட முதல் வருஷ வெட்டிங் ஆனிவர்சரியைக் கொண்டாடினோம். கடலுக்கு நடுவுல இருக்கிற இந்த ஹோட்டலுக்குள்ள நுழையற அனுபவமே அலாதியானது.  ப்ரிட்ஜ் வாசல்ல இறங்கி, பாலத்துல நடந்து கடைசியில உள்ள அந்த ரெஸ்டாரண்ட்டை அடையணும். அப்படியொரு சூழலையும் அழகையும் வேற எங்கேயும் பார்க்க முடியாது. கடலுக்கு நடுவுல இப்படியொரு காதல் ரெஸ்டாரண்ட்டுல நேரம் செலவிடறதைவிட தம்பதியருக்கு வேற என்ன த்ரில் இருந்துடப் போகுது?

ரெஸ்டாரண்ட்டுக்கு உள்ளே இருந்தபடியே மொத்த துபாயையும் ரசிக்க முடியும். அங்கே கடல் உணவுகள் தான் ஸ்பெஷல். நான் கடல் உணவுகள் சாப்பிட மாட்டேன். லீக்ஸ், டெஸர்ட்டுனு வித்தியாசமான அயிட்டங்களை சாப்பிட்டேன். கடல் உணவுகளை ரசிக்கிறவங்களுக்குச் சாப்பிட முடியாத அளவுக்கு அத்தனை அயிட்டங்கள் அங்கே கிடைக்கும். அங்கேயே பிரைவேட் டெண்ட் எடுத்துக்கிட்டு தங்கலாம். ரெஸ்டாரண்ட்டுக்குள்ள போய் தங்கலாம். தனியா மண்டபம் மாதிரி இருக்கும். அங்கேயும் தங்கலாம். நாங்க ரெஸ்டாரண்ட்டுக்குள்ள தங்கினோம். தனியா உட்கார்ந்து சாப்பிடணும், பேசணும்னு நினைக்கிறவங்க, டெண்ட் எடுப்பாங்க.

வானிலே  தேனிலவு!

சமீபத்துல துபாய்ல ஐஎம்ஜி வேர்ல்டுனு ஒரு தீம் பார்க் திறந்திருக்காங்க. முழுக்க முழுக்க கார்ட்டூன் கேரக்டர்ஸ்... நிறைய தீம்ஸ்... நிறைய ரைடுனு பயங்கர சுவாரஸ்யமா இருக்கும். எனக்கு கார்ட்டூன்ஸ் ரொம்பப் பிடிக்கும். அங்கே போயிட்டா வயசை மறந்து ரசிப்போம். நிறைய ஷாப்பிங் பண்ணலாம். ஸ்பைடர் மேன் 6 பேக்ஸ் சூட்கேஸ், அயர்ன்மேன் சூட்கேஸை எல்லாம் அங்கேயிருந்து வாங்கிட்டு வந்தோம். அங்கேயே பாலிவுட் தீம் பார்க் ஒண்ணும் திறந்திருக்காங்க. ஆனா 2017-க்குப் பிறகுதான் பார்வையாளர்களுக்கு அனுமதி. இப்பவே புக் பண்ணிட்டோம்.

எனக்கும் கணேஷுக்கும் சாகச விளையாட்டுகள் ரொம்பப் பிடிக்கும். டிராவல், சாகசம், வித்தியாசமான சாப்பாடு... இதையெல்லாம் ட்ரை பண்றதுல எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி ஆர்வம் உண்டு. ஃபெராரி வேர்ல்ட் போனோம். அங்கே உலகத்தின் அதிவேக சவாரி இருக்கு. 260 கிலோமீட்டர் வேகத்துல அதுல ரைடு போன அனுபவம் செம த்ரில்லிங்கானது. அட்லாண்ட்டிஸும், அன்டர் வாட்டர் அக்வேரியமும் போனோம். அப்புறம் ஸ்கை டைவிங் போனோம். அதுக்கு முதல்ல பயிற்சி கொடுப்பாங்க. எப்படி குதிக்கணும், எங்கே நிறுத்தணும்னு எல்லாம் சொல்வாங்க. அப்புறம் பறக்கணும். குதிக்கணும். அதை வீடியோ எடுக்கவும் புக் பண்ணியிருந்தோம். இதுக்கான ஸ்பெஷல் பயிற்சியாளரும் இருக்காங்க. குதிக்கறதுக்கு முன்னாடி ‘உங்க கடைசி வார்த்தையை சொல்லுங்க’ன்னு எனக்கு பயிற்சி கொடுத்தவர் சொன்னாரு. ‘மவனே நீ கீழே வா... உனக்கு வச்சுக்கறேன் கச்சேரி’னு நினைச்சுக்கிட்டே ஒருவழியா குதிச்சேன். துபாய்ல ஸ்கை டைவிங் பண்றதுல ஒரு சிறப்பு இருக்கு. பாம் ஜுமைராவோட மொத்த அழகையும் ரசிச்சுக்கிட்டே டைவிங் பண்ணலாம். கடலோட குளிர்ச்சி.... மேல மேல பறக்கும் போது எக்ஸ்ட்ரா குளிர்ச்சினு கிட்டத்தட்ட மைனஸ் டிகிரியில ஸ்கை டைவிங் பண்ணின எக்ஸ்பீரியன்ஸை இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் விரைக்குது. கணேஷ் எல்லா ஃபோட்டோவுலயும் கேமராவையே பார்ப்பார்.  ‘குதிக்கிறபோதுகூட எப்படிப்பா கேமராவுக்கு போஸ் கொடுக்கறே’னு அவரைக் கலாய்ப்பேன்.

வானிலே  தேனிலவு!

இதை தவிர பாலைவனத்துல ஒரு லாங் வாக் போனோம். குளோபல் வில்லேஜ்னு ஒரு ஷாப்பிங் ஏரியாவுல எல்லா நாட்டுப் பொருட்களும் கிடைக்கும். அங்கே ஷாப்பிங் பண்ணினோம். பாப்பரொட்டி பன் துபாயோட ஸ்பெஷல் உணவு.  துபாய் போறவங்க பாப்பரொட்டியும் துபாய் டீயும் சாப்பிட மிஸ் பண்ணிட்டாங்கன்னா துபாய் போறதே வேஸ்ட்.

பாலைவனப் பிரதேசம்... ஷாப்பிங் பிரியர்களுக்கான நாடு.... இப்படி துபாயை பத்தின தவறான அபிப்ராயங்களை எல்லாம் ஒதுக்கி வச்சிடுங்க. ரெண்டு முறை ஹனிமூன் ட்ரிப் போயிட்டு, மூணாவது முறைக்கும் அட்வான்ஸ் புக்கிங் பண்ணிட்டுக் காத்திட்டிருக்கிற அனுபவத்துல சொல்றேன். ஹனிமூன் போக தி பெஸ்ட் நாடுகள்ல என்னோட முதல் சாய்ஸ் துபாய்தான்...’’ - காதலுடன் சொல்கிறார் நிஷா.

- ஆர்.வைதேகி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு