Published:Updated:

ஆயுளைப் பெருக்கும் ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆயுளைப் பெருக்கும்  ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்!
ஆயுளைப் பெருக்கும் ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்!

கோயில்

பிரீமியம் ஸ்டோரி
ஆயுளைப் பெருக்கும்  ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்!

ஷ்டமி, நவமி, அமாவாசை, பிரதமை, மரணயோகம், கரிநாள், சனிக்கிழமை போன்ற நாட்களிலும்... புரட்டாசி, மார்கழி மாதங்களிலும் இந்து மதத்தில் திருமணங்கள் நடத்தப்படுவதில்லை. ஆனால், இன்னொரு இடத்தில் நாள், கிழமை, திதியைப் பற்றி கவலைப்படாமல் ஆண்டு முழுவதும், இடைவெளியின்றி, தினம் தினம் லட்சக்கணக்கான திருமணங்கள் நடந்தபடி இருக்கின்றன. ஆச்சர்யம் என்னவென்றால், மணமக்கள் இளம் வயதினராகவும் இருக்கிறார்கள்; பல்செட் மாட்டிக்கொள்ளும் `குடுகுடு’ வயதிலும் இருக்கிறார்கள். அந்த மணக்கோலத்தை ஒரு எட்டு பார்த்து வரலாமா?

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் இருக்கிறது, ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் சுவாமி திருக் கோயில். சிவபெருமானின் அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயம், தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்டது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய சமயக் குரவர்களால் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியை இயற்றிய அபிராமி பட்டர் வாழ்ந்ததும் இங்கேதான். 63 நாயன்மார்களில் குங்கிலிய நாயனார், காரி நாயனார் ஆகிய இருவரும் இங்கு தங்கி, சிவத் தொண்டாற்றி முக்தி அடைந்துள்ளனர்.

இந்தக் கோயிலில் நூற்றுக்கணக்கான ஆயுஷ்ய ஹோம திருமணங்கள் தினந்தோறும் நடப்பதற்கு என்ன காரணம்? கணேச குருக்கள் சொல்கிறார்... ``தேவர்களாலும் அசுரர்களாலும் திருப்பாற்கடலைக் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை, விநாயகரை வழிபடாமல் பருக முயன்ற காரணத்தால் அமிர்தம் இருந்த கலசத்தை விநாயகர் மறைத்து வைத்துவிட்டார். சற்று நேரத்தில் அந்தக் கலசமே லிங்க வடிவ மாக மாறிவிட்டது. அதனால்தான் அமிர்தம் + கடம் `அமிர்தகடேஸ்வரர்’ என்ற இந்தத் திரு நாமம் மூலவருக்கு வந்தது. கலசம் திருடிய விநாயகர், இங்கு `கள்ள வாரண விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணுவின் தியானத்தில் உண்டான சக்தியே அபிராமி அம்மையாக திகழ்கிறார்.

சிவ பக்தியில் சிறந்த தனது பக்தன் மார்க்கண் டேயனுக்கு, என்றும் 16 வயது சிரஞ்சீவியாக இருக்க வரம் அளித்தவர் சிவபெருமான். அவனைக் கொல்ல வந்த எமனை சம்ஹாரம் செய்தார். அதனால் பூமி பாரம் தாங்க முடியா மல் முறையிட்டாள் பூமாதேவி. பிறகு ஈஸ்வரன், எமனுக்கு அனுக்கிரஹம் செய்து உயிர்ப்பித்தார். அப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற தலம் இது. நவக்கிரஹங்களை அடக்கியாளும் புண்ணியமூர்த்தியாக ஈஸ்வரன் திகழ்வதால், இந்தத் தலத்தில் நவக்கிரஹங்களுக்கு தனி சந்நிதி கிடையாது.

தீர்க்க ஆயுளைக் கொடுக்கக்கூடிய தலம் என்பதால், ஒருவர் பிறந்த தமிழ் வருடம், மாதம், நட்சத்திரம் இவற்றைக் கணக்கில்கொண்டு, அதே நாளில் அவரது 59-வது வயது முடிந்து 60-ம் வயதில் உக்ரரத சாந்தி பூஜையும், 60 வயது முடிந்து 61-ல் சஷ்டியப்த பூர்த்தியும், 70 வயது முடிந்து `பவளவிழா’ எனப்படும் பீமரத சாந்தி பூஜையும், 80 வயது முடிந்து சதாபிஷேகமும் செய்யப்படுகின்றன. அதாவது ஆயிரம் பிறைகளைக் கண்டவருக்கு `சதாபிஷேகம்’ எனப்படும் முத்துவிழா நடத்தப்படுகிறது (75 வயதில் செய்யப்படும் விஜயரத சாந்தி பூஜை இன்னும் பிரபலம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

ஆயுளைப் பெருக்கும்  ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்!

இத்தகைய பரிகார பூஜைகளையும் திரு மணங்களையும் செய்துகொள்வதால் நீடித்த ஆயுளை இறைவன் அருள்வார் என்ற நம்பிக் கையும், மனதளவில் அவர்களுக்கு உற்சாகமும் ஏற்படுவதால், நாளுக்கு நாள் இத்தகைய திருமணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

பாலாஜி குருக்களிடம் பேசியபோது, ``30 ஆண்டுகளுக்கு முன் மிகக் குறைந்த அளவில் ஆயுஷ்ய ஹோம பூஜை மட்டும்தான் இங்கு நடந்திருக்கிறது. காலப்போக்கில் சுற்றிலும் உள்ள ஊர்களில் உள்ளவர்கள், தோஷ நிவர்த்திக்காக இந்தக் கோயிலில் ஆயுஷ்ய ஹோம திருமணத்தை நடத்திவந்தார்கள். அதனால், இந்தக் கோயிலில் ஆயுஷ்ய ஹோம திருமணங்கள் நடத்துவது கொஞ்சம் கொஞ் சமாகப் பிரபலம் அடைந்தது. பெற்றோருக்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சேர்ந்து திருமணத்தை நடத்திவைக்கும் சந்தோஷம் அளப்பரியது. இப்போது இங்கே சாதாரண விடுதிகள் முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை இருக்கின்றன. கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள வீடுகளிலும் பெரும்பாலானவை விடுதிகளாக மாறி இருக்கின்றன. வருவோருக்கு சுவையான சாப்பாட்டுக்கும் பிரச்னை இல்லை. மிகக்குறைந்த கட்டணத்தில் திருமணம் நடத்தும் வசதி இங்கு இருப்பதால், அதுபோன்ற திருமணத்தைக் காண வருபவர்களும் தங்கள் பெற்றோருக்கு இதேபோல் திருமணம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். இந்துக்கள் மட்டுமல்ல... முஸ்லிம், கிறிஸ்தவர்கள்கூட இங்கு வந்து இதுபோன்ற திருமணங்களைச் செய்துகொள்கிறார்கள் என்பதுதான் கூடுதல் சிறப்பு.

என் அனுபவத்தில் 60-ம் வயதில் உக்ரரத சாந்தி பூஜை நடத்தி, திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் சிலருக்கு 100 வயதில் கனகாபிஷேக பூஜையும் செய்து வைத்திருக்கிறேன். தமிழகம் கடந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லியிலிருந்தும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய பகுதிகளிலிருந்தும்கூட ஏராளமான பக்தர்கள் இங்கு திருமணத்தின் பொருட்டு வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் அமிர்தகடேஸ்வரரின் அருளாசிதான் காரணம்’’ என்கிறார்.

- மு.இராகவன்

படங்கள்: க.சதீஷ்குமார்

ஆயுளைப் பெருக்கும்  ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்!

கல்யாணச் செலவு எவ்வளவு?

ஆயுளைப் பெருக்கும்  ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்!


ந்தத் திருமண வைபவத்தைப் பொறுத்தமட்டில் அவரவர் விருப்பத்துக்கும், தகுதிக்கும், வசதிக்கும் ஏற்ப தாராளமாகவோ, சிக்கனமாகவோ நடத்திக்கொள்ளலாம் என்கிறார்கள்.

கோயில் நிர்வாகம் சார்பில் நிர்ணயித்துள்ள திருப்பணி கட்டணம்: திருமணத்தை சுற்றுப்பிராகாரத்தில் நடத்த ரூ.1,501

ஸ்ரீகால சம்ஹார மூர்த்தி மேடையில் நடத்த    - ரூ.2,001

சங்கு மண்டபத்தில் நடத்த    - ரூ.3,000

நந்தி மேடையில் நடத்த    ரூ.3501

ஆயுஷ்ய ஹோமம் - 1 கால பூஜைக்கு - ரூ.4,000

உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் 1 கால பூஜைக்கு - ரூ.5,000. 2 கால பூஜைக்கு - ரூ.10,000.

சிவாச்சாரியார்கள் சார்பில் நிர்ணயித்துள்ள கட்டணம்:

இந்தக் கோயிலுக்கு பூஜைசெய்ய 8 சிவாச்சாரியார் குடும்பத்தினர் பரம்பரையாக இருந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களுடன் பணிபுரிய பலரை சம்பளத் துக்கு வைத்திருக்கிறார்கள். தங்கும் விடுதி, உணவு விடுதி, வெப்சைட் வசதி என சகலமும் அவர்களிடமுள்ளன. ஒரு கால பூஜை, இரு கால பூஜை என வகைப்படுத்தி 16, 32, 64 என கலசங்களை வேறுபடுத்தி குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக அவரவர் வசதிக்கு ஏற்ப வாங்குகிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் தம்பதியினருக்கு காணொளி காட்சி மூலம் திருமணத்தை நடத்திவைக்கும் நவீன வசதிகூட இவர்களிடம் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆயுளைப் பெருக்கும்  ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்!

திருக்கடையூர்... எந்த மார்க்கத்தில், எவ்வளவு தூரம்?

ஆகாய மார்க்கமாக சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 250 கி.மீ தொலைவிலும், திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து 140 கி.மீ தொலைவிலும் இந்த ஆலயம் உள்ளது.

ரயிலில் செல்லவேண்டு மானால், மயிலாடுதுறை சந்திப் பிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. தரை மார்க்கமாக மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ., சிதம்பரத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் 38 கி.மீ., காரைக்காலிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு