Published:Updated:

இளமை இதோ...இதோ !

வயது நிர்ணய நிர்வாக நிபுணர் கௌசல்யா நாதன் உங்களை மெருகேற்றும் மேக்னெட் தொடர்

இளமை இதோ...இதோ !

வயது நிர்ணய நிர்வாக நிபுணர் கௌசல்யா நாதன் உங்களை மெருகேற்றும் மேக்னெட் தொடர்

Published:Updated:
##~##

தங்கள் குழந்தையை 'கொழு கொழு’ பாப்பாவாக்க ஆசைப்படும் அம்மாக்களுக்கு... ஒரு செய்தி. பெண் குழந்தைகள்... எட்டு வயதுக்கு மேலும் அதே பருமனோடு வளர்வது, ஆரோக்கியமானது அல்ல. ஏனெனில், அது அவர்களை சீக்கிரமே பருவமடைய தயார்படுத்தும் காரணி ஆகலாம்.

பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவமடைவதால் என்னென்ன சிக்கல்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீக்கிரம் பருவமடைவதே... ஹார்மோன் உள்ளிட்ட உடல் சிக்கல்களின் விளைவுதான். இது ஒருபுறமிருக்க, இதனால் அக் குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சிக்கல்களும் அதிகம்.

ஒன்பது, பத்து வயதுச் சிறுமியை, 'பூப்படைந்துவிட்டாள்' என்பதற்காகவே, சட்டென பருவப்பெண்ணாகப் பார்க்கும் சமூகத்தின் பார்வை, அவளுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் அதிகம். 'வீட்டை விட்டு வெளியே விளையாடப் போகக் கூடாது...’, 'ஆம்பளப் பசங்ககூட பேசக் கூடாது...’ போன்ற திடீர் கட்டுப்பாடுகள்... பிஞ்சு வயதில் அதிகமான பொறுப்புகளை சுமத்துவதுடன், மாதத்தில் 'மூன்று’ நாட்கள் அந்தக் குழந்தை படும் வேதனையும், மனதளவில் ரொம்பவே தளர்த்தும். கூடவே, அவளை அந்தச் சூழலுக்குத் தள்ளும் உறவுகளின் மீது, வெறுப்பு உணர்வு ஏற்படும்.

இளமை இதோ...இதோ !

உடலும், மனமும் சேர்ந்து வளர்வதே, ஆரோக்கியமான வளர்ச்சி. எனவே, சிறுவயதிலேயே பூப்படையும் பெண் குழந்தைகளை, அதற்கான வயதும், பக்குவமும் வரும் வரை குழந்தையாகவே நடத்துவது முக்கியம். உடலில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் குறித்த குழப்பத்திலும், பயத்திலும் இருக்கும் பெண் பிள்ளைகளை, அம்மாக்களும், ஆசிரியைகளும், சமூகமும் கைபிடித்துக் கரையேற்ற வேண்டும். அறிவியல் ரீதியாகவும், அன்பாகவும்... 'இதுதான் பெண்ணின் உடல்கூறுகள்' எனப் புரிய வைக்க வேண்டும்.

இந்தப் பதின்பருவத்தில் அக்குள், பிறப்பு உறுப்பில் ஏற்படும் ரோம வளர்ச்சி (pubic hair), மார்பக வளர்ச்சி, பருக்கள் போன்றவை... குழந்தை, குமரியாகிறாள் என்பதற்கான அறிகுறிகள். இவற்றை 'செகண்டரி செக்ஷ§வல் கேரக்டர்ஸ் (secondary sexual characters)’ என்பார்கள். இது, பொதுவாக ஏழு வயதுக்கு மேல் ஏற்படும். மிக அரிதாக, அதற்கும் முன்பாக இந்த மாற்றங்கள் தென்பட்டால், மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

பொதுவாக, 16 வயதுக்கு மேல்தான் இந்த ப்யூபிக் ஹேர்-ஐ பெண் குழந்தைகள் அகற்ற வேண்டும். புருவத்தை ட்ரெட்டிங், ட்வீஸிங் செய்வதும்கூட அப்படியே! மிக சென்சிட்டிவ்வான இடங்களில் வளரும் இந்த ரோமங்களை அகற்றும் முயற்சியில், ரேஸர், கத்தரி என்று அந்தக் குழந்தைகள் உபயோகிப்பது ஆபத்தானது என்பது ஒரு காரணம். பரவலாக அறியப்படாத இன்னொரு காரணமும் இருக்கிறது. 16

இளமை இதோ...இதோ !

வயதிலோ, அதற்குப் பின்னரோ குறிப்பிட்ட பெண்ணுக்கு ஏற்படும் சில உடல்நலக் கோளாறுகளுக்கான காரணத்தைக் கண்டறிய, இந்த ரோமத்தின் வளர்ச்சியும் பரிசீலிக்கப்படும். பெண்மைக்கான முழுமையான வளர்ச்சியையும் இதை வைத்தே கண்டறிய முடியும்.

பருக்கள்... பருவப் பெண்கள் தங்களின் பரம எதிரியாகப் பார்ப்பவை! 'என் பெண்ணுக்கு வாங்கிக் கொடுக்காத கிரீமே கிடையாது. ஆனா, அவளுக்குப் பரு பிரச்னை சரியாகல’ என்று புலம்பும் அம்மாக்களே... கவனிக்க... உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முகத்தில் பருக்கள் தோன்றுவது இயல்பானதே. குறிப்பாக 9-லிருந்து 16 வயது வரையிலான பருவத்தையும் பருவையும் பிரிக்க முடியாது என்பதே உண்மை. இது ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பொதுவானது. ஆனால், இந்த இயல்பை எதிர்த்து, பருவைக் கிள்ளுவது, கிரீம்கள் உபயோகிப்பது எல்லாம் தவறு. அதிகபட்சம் 22 வயதுக்குப் பிறகு இவை தானே சரியாகிவிடும். அதற்குப் பிறகும் தொடர்ந்தால்... சரும மருத்துவரை அணுகலாம்.

பருக்களுக்கான கிரீம்கள் மட்டுமல்ல.. சிவப்பழகு கிரீம்கள், மாய்ஸ்ச்சரைஸர் கிரீம்கள் என எந்த கிரீம்களும் 16 வயது வரை வேண்டவே வேண்டாம். சில அம்மாக்கள் தங்களின் பெண் குழந்தைகளை 10 வயதிலேயே ஃபேர்னெஸ் கிரீம்கள் உபயோகிக்க அனுமதிப்பதையும், அவற்றை வாங்கித் தருவதையும் பார்க்கும்போது, வேதனையாக உள்ளது. 16 வயதில்தான் பெண்களின் சரும வளர்ச்சி முழுமை அடையும். அதற்கு முன்பாக கிரீம்களை உபயோகிப்பது.. சரும அலர்ஜியையும், முதிர்ந்த தோற்றத்தையும் ஏற்படுத்திவிடும் ஜாக்கிரதை.!

'பதினெட்டு வயசுப் பட்டாம்பூச்சி... படிதாண்டத் துடிக்கும் பருவப் பட்சி..!’ பற்றி அடுத்த இதழில் பேசுவோம்!

- இளமை வளரும்...

பருக்களை தடுக்க இயற்கை வழி!

'முகத்தில் உள்ள பருக்களைப் போக்க... 'கிரீம்'கள் பயன்படுத்தக் கூடாது என்றால்... வேறு வழி?’ என கேட்கும் தாய்மார்களே, உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்...

வாரத்துக்கு ஒரு முறை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து, எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் நறுமணங்கள் சேர்க்கப்படாத தூய எண்ணெயாக இருக்க வேண்டியது அவசியம்.

'ஆயிலி ஸ்கின்’ உள்ள குழந்தைகளின் முகத்தில் எண்ணெய் தடவுவதை தவிர்த்தல் வேண்டும். பர்கர், பீட்ஸா, சமோசா போன்ற உணவு வகைகளைத் தவிர்த்தல் வேண்டும்.

பருக்கள் உள்ளவர்கள், தினமும் மூன்று தடவை முகத்தைக் கழுவ வேண்டும். தினமும் ஏதாவது ஒரு ஃப்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும். உணவில் பீட்ரூட், கேரட், வெள்ளரி போன்ற காய்கறிகளைச் சேர்த்தல் மிக அவசியம்.

பொதுவாக, வீட்டில் உள்ள ஒவ்வொருவரும், தனித்தனி துண்டுகளைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, முகம் துடைப்பதற்கு மட்டுமாவது வேறு துண்டுகளை பயன்படுத்துவது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism