Published:Updated:

ஆச்சி குடும்பத்தை அசத்திய மட்டன் சுக்கா!

பி.ஆண்டனிராஜ் படம்: எல்.ராஜேந்திரன்

ஆச்சி குடும்பத்தை அசத்திய மட்டன் சுக்கா!

பி.ஆண்டனிராஜ் படம்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
##~##

''தமிழ்நாட்டு சமையல் மட்டுமில்ல... கேரளா, ஆந்திரா, கர்நாடகா சமையலும் எனக்கு அத்துப்படி. என்னைப் பெண் பார்க்க வந்தப்போ, இந்தச் சமையலாலதான் அவங்கள அசத்தினேன்...''

- 'ஜாடிக்கேத்த மூடி' போல சிண்ட்ரெல்லாவின் பேச்செல்லாம், சமையல் மணக்கிறது! இவர், சமையல் பொருட்கள் தயாரிப்பில் பிரபலமாக இருக்கும் 'ஆச்சி’ மசாலா நிறுவன அதிபர் பத்மசிங் ஐசக் - தெல்மா ஐசக் ஆகியோரின் மூத்த மகன் அஸ்வின் பாண்டியனை சமீபத்தில் கைப்பிடித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பி.இ., எம்.பி.ஏ. முடிச்சுட்டு, எம்.என்.சி கம்பெனியில வேலை கிடைச்ச சமயத்துலதான், பெண் பார்க்க வந்தாங்க. அவங்க டிரெயின்ல சென்னை திரும்பினப்போ, 'டின்னரை கடை யில் எங்கயும் சாப்பிடா தீங்க'னு சொல்லி. பரோட்டா வும், திருநெல்வேலி ஸ்டைல்ல மட்டன் சுக்கா வும் செஞ்சு கொடுத்தேன். மட்டன் சுக்காவுக்கு மொத்த வோட்டும் விழ... டிரெயின்லயே 'இவதான் நம்ம மருமகள்'னு முடிவு செஞ்சுட்டாங்களாம்!''  என்று பெருமையும், வெட்கமுமாக சொல்லும் கம்ப்யூட்டர்இன்ஜினீய ரான சிண்ட்ரெல்லா,

ஆச்சி குடும்பத்தை அசத்திய மட்டன் சுக்கா!

''எங்க நிறுவனத்துக்கான டி.வி., பத்திரிகை விளம்பரங்களை இனி நானே வடிவமைக்கப் போறேன். எங்க கம்பெனி முழுக்க கம்ப்யூட்டரைஸ்டா இருக்கறதால... நெட்வொர்க்கிங் தொடர்பான பிரச்னைகளையும் நானே பார்த்துக்கறேன்'' என்று பொறுப்பான மருமகளாகப் பேசினார்!

அவருடைய அசத்தல் மட்டன் சுக்கா ரெசிபி...

தேவையானவை: மட்டன் - 1/2 கிலோ, தயிர்  - 1/2 கப், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒன்றரை ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் - 1 கப், சீரகத்தூள் - 1/2 ஸ்பூன், எண்ணெய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மட்டனை நன்றாகக் கழுவிய பின், மிளகாய்த்தூள், தயிர், இஞ்சி - பூண்டு பேஸ்ட், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை பொன் நிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் மட்டன் கலவையை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். பின் அதைக் குக்கரில் போட்டு, மூன்று விசில் விட்டு இறக்கவும். குக்கரைத் திறந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். சுவையான மட்டன் சுக்கா ரெடி !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism