Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

Published:Updated:
குட்டீஸ் குறும்பு !

வாசகிகள் பக்கம்    

ஓவியங்கள்: ஹரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 'ஹலோ சேர்... வெரி ஸாரி!’

குட்டீஸ் குறும்பு !
##~##

இரண்டரை வயதாகும் என் பேரன் ஆதித்யாவுக்கு, தப்பு செய்தால் 'ஸாரி’ கேட்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தவன், உற்சாகத்தில் ஹாலில் இருந்த நாற்காலிகளை எல்லாம் கீழே தள்ளித் தள்ளி விளையாடினான். ''அப்படி விளையாடாதே ஆதி... அது தப்பு!'' என்று அவனைக் கண்டித்தேன். உடனே அவன் ஓடிப்போய் ஒவ்வொரு நாற்காலியையும் தொட்டுத் தடவி, ''அடி பட்டுருச்சா...? ஸாரி... வெரி ஸாரி!'' என்று மழலையில் உருக, முதலில் சிரித்து, பின் நெகிழ்ந்து அவனைக் கட்டி அணைத்தேன்!

- வி.ராஜேஸ்வரி, அபிராமபுரம்

'வீசி’ங் பிராப்ளம்!

குட்டீஸ் குறும்பு !

முதல் வகுப்புப் படிக்கும் என் மகளுக்கு புதிதாக ஒரு பென்சில் பாக்ஸ் வாங்கி வந்து கொடுத்தேன். அதை ஆசையாகத் தொட்டுப் பார்த்தவள், ''ஸ்கூலுக்கு இது வேணாம்மா'' என்றாள் சோகத்துடன். நான் புரியாமல் காரணம் கேட்க, அதற்கு அவள் சொன்ன பதிலில் இன்னும் சிரிப்பு அடங்கவில்லை எனக்கு. ''அம்மா... எனக்குப் பக்கத்துல உட்கார்ந்திருக்க ஃப்ரெண்டுக்கு 'வீசிங் பிராப்ளம்’ இருக்குனு அவங்க அம்மா மிஸ்கிட்ட சொன்னாங்க. அவ இந்த புது பாக்ஸை எடுத்து வீசி... அது உடைஞ்சு போயிட்டா..? அதனால அவளுக்கு 'வீசி’ங் பிராப்ளம் சரியான உடனே எடுத்துட்டு போறேன்மா'' என்றாள் பொறுப்பாக. வீசிங், வீசுவது இரண்டையும் சிரிப்பின் இடையே அவளுக்கு விளக்கிச் சொன்னேன். இப்போது உங்களுக்கும் சிரிப்புதானே?!

- சி.ஜெயபூரணி, சென்னை-52

'கத்தரிக்கோலுக்கு அடிபட்டிருச்சா?’

குட்டீஸ் குறும்பு !

என் கால்கள் நிலைப்படியில் இடித்து காயம் ஆனதால் கட்டுப் போட்டிருந்தேன். அதைப் பார்த்த என் பேரன், ''எதுக்கு பாட்டி கால்ல கட்டுப் போட்டிருக்கே?'' என்றான். விஷயத்தைச் சொன்னேன். இரண்டு நாட்கள் கழித்து நான் துணி வெட்டிக் கொண்டிருந்தேன். வெட்டும்போது கை வலிக்காமல் இருக்க, கத்தரிக்கோலின் கை பிடிக்கும் பகுதியில் துணியால் கட்டியிருந்ததைக் கவனித்த என் பேரன், ''என்ன பாட்டி... கத்தரிக்கோலும் நிலைப்படியில் இடிச்சுக்குச்சா..? கட்டுப் போட்டிருக்கு..?'' என்று கேட்க, இடியெனச் சிரித்தேன் நான்!

- பி.சரோஜா, பெங்களூரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism