Published:Updated:

புது வீடு !

கு.ராமகிருஷ்ணன் படங்கள்: கே.குணசீலன்

புது வீடு !

கு.ராமகிருஷ்ணன் படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
##~##

மிகச்சிறிய மனையில்கூட, வசதியான வீட்டை உருவாக்க முடியும். நுட்பமான திட்டமிடலும், அழகான ரசனையும்தான் அதற்குத் தேவை. இடம் ஒரு பிரச்னையே அல்ல. கல்வித்துறையில் பணியாற்றும் ராஜராஜன் - அன்புச்செல்வி தம்பதி, தஞ்சாவூரில் கட்டியிருக்கும் அவர்களின் வீடு, இதற்கு சாட்சி.

1,107 சதுரடி மட்டுமே கொண்ட மனை இது. ஆனாலும்... பங்களா பாணியில் ஹை சீலிங் ஹால், மாடுலர் கிச்சன், கச்சிதமான டைனிங் ஹால், பாத்ரூமுடன் கூடிய பெட்ரூம், பொதுவான டாய்லெட் - பாத்ரூம், கார் நிறுத்துவதற்கான பெரிய போர்டிகோ, வராண்டா என 900 சதுரடியில் தரைத்தளத்தையும்... பிரமிடு சீலிங் கொண்ட படிப்பறை, உடற்பயிற்சிக் கூடம், டாய்லெட் - பாத்ரூமுடன் கூடிய பெட்ரூம், விருந்தினர்களை உபசரிக்கும் கூடம், அனைத்து அறைகளுக்கும் செல்வதற்கான பொதுவான நடைபாதை என 925 சதுர அடியில் முதல்தளத்தையும் உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வீட்டில் எந்த செங்கல்லை எடுத்து வைத்தாலும் அதற்கு ஒரு பயன்பாடு இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான தாரக மந்திரம்'' என சிலாகிப்போடு பேசத் துவங்கினார் கட்டுமானப் பொறியாளரான ராஜாமணி.

புது வீடு !

''வீட்டின் முகப்புப் பகுதியில் இடதுபுறம் 14X10 அளவிலான ஃபோர்டிகோ... இதன் தரைப்பகுதியில்தான் போர்வெல் அமைத்துள்ளோம். முகப்பின் நடுப்பகுதியில் வாசல்... உள்ளே நுழைந்தால் 8X6 அளவிலான வராண்டா. இதன் இடது பக்கச் சுவரின் கீழ்ப்பகுதியில் கதவுடன் கூடிய செப்பல் கப்போர்ட். வராண்டா தாண்டினால் 16X10 அளவிலான ஹால். பார்ப்பதற்கு இது பெரியதாகவே காட்சி அளிக்கும். காரணம், ஹாலும் வராண்டாவும் சந்திக்கும் இடத்தில் நிலைக்கதவை அமைக்காமல், வராண்டாவின் உள்பகுதியில் 3 அடி தள்ளி நிலைக்கதவு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹாலுக்கு 18 சதுரடி கூடுதலாக இடம் கிடைத்துள்ளது. இந்த ஹாலின் முழு பரப்புக்குமே 20 அடி உயரத்தில் ஹை சீலிங் அமைத்துள்ளோம். ஹாலில் இருந்தபடியே மாடியில் இருப்பவர்களிடம் முகம் பார்த்து பேசலாம். ஹாலிலேயே மாடிப்படிகள் அமைத்துள்ளோம். இவை அனைத்தும் கிரானைட். இதன் கைப்பிடி, ஸ்டெயினல் ஸ்டீல். இது நிச்சயம் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும்.

ஹாலில் இருந்து வலதுபுறம் சென்றால், படுக்கை அறை. இதன் ஒட்டுமொத்த நீளம் 16 அடி. இந்தப்

புது வீடு !

படுக்கை அறையில் உள்ள ஜன்னல்... மாடம் போன்ற அமைப்பில் உள்ளது. இதன் வெளிப்புற விளிம்பில் கிரில் அமைக்கப்பட்டுள்ளதால், உள்கூட்டின் கீழ்ப்பகுதியில் புத்தகங்கள் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

படுக்கை அறையுடன் இணைந்த டாய்லெட் - பாத்ரூமின் அளவு 8X4. இங்கு சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் பற்றியும் சொல்லியாக வேண்டும். பொதுவாக சுவரின் கீழ்ப்பகுதியில் டார்க் கலரிலும், மேல்பகுதியில் லைட் கலரிலும்தான் ஒட்டுவார்கள். இங்கு சற்று வித்தியாசமாக கீழ்ப்பகுதியிலும், மற்றும் மேல்பகுதி கார்னரிலும் டார்க் கலரிலும்... நடுவில் லைட் கலரிலும் டைல்ஸ் ஒட்டியிருக்கிறோம். இதன் கதவுகள், தேக்கு மரம்போல் காட்சி அளித்தாலும் இதெல்லாம் பிளைவுட்டால் செய்யப்பட்டது. மற்ற அறைகளில் உள்ள கப்போர்டுகளுக்கும் இதேபோல தேக்கு மர பாலிஷ் போட்டிருக்கிறோம். ஹாலைத் தாண்டினால்... மாடுலர் கிச்சன். இதன் அளவு 8X8. ஒரே இடத்துல நின்றவாறே இந்தக் கிச்சனின் அனைத்துப் பகுதிகளையும் தொட முடியும். காய்கறி நறுக்க, மளிகை சாமான் எடுக்க, பாத்திரம் கழுவ, கேஸ் ஸ்டவ்வை கவனிக்க என்று இதில் எந்த ஒரு வேலைக்காகவும் ஒரு சில அடி தூரம்கூட நடந்து போக வேண்டியதில்லை. சிலிண்டர், சமையல் பாத்திரங்கள், மளிகை சாமான்... எந்த ஒரு பொருளுமே வெளியில் வைக்க வேண்டாம். அடுப்புத்தட்டின் கீழ்ப்பகுதியில் கதவுகளைக் கொண்ட விதவிதமான இழுப்பறைகள் அமைத்திருக்கிறோம்.

சமையலறையுடன் இணைந்தவாறு, 8X8 அளவிலான டைனிங் ஹால் உள்ளது. இங்கு மார்பிளால் ஆன டைனிங் டேபிள் பயன்படுத்தியிருக்கிறோம். டைனிங் ஹாலைத் தாண்டினால், கொல்லைப்புறப் பகுதி. அங்கே வீட்டோடு இணைந்த டாய்லெட் - பாத்ரூம். இது, செப்டிங் டேங்கின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

ஹாலில் உள்ள மாடிப்படிகளில் ஏறி முதல் தளத்துக்குச் சென்றால், 3 அடி அகலமுள்ள நடைபாதை. இங்கிருந்து மற்ற எல்லா அறைகளுக்கும் செல்லலாம். 14X10 அளவிலான படிப்பறையில், பிரமிடு கோபுரம்போல் சீலிங் அமைத்துள்ளோம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு வீட்டுக்கு ஒரு நல்ல 'லுக்’, கூடவே வெயில் இறங்காமல் இருக்க... இந்த சீலிங் உதவும். அடுத்ததாக, உடற்பயிற்சி அறை. இதன் அளவு 8X6. தரைத்தளத்தில் உள்ளது போலவே இங்கும் ஒரு படுக்கை அறை உள்ளது. குடும்ப விழாக்களின்போது, சுமார் 30 பேர் அமர்ந்து உணவருந்தும் அளவுக்கான ஒரு பெரிய கூடமும் உள்ளது. இதன் அளவு 23X8. இதை மற்ற நாட்களில் தியான அறையாகவும் பயன்படுத்தலாம். இந்தக் கூடத்தை தாண்டினால், வெளிப்புறம். இங்குதான் மொட்டை மாடிக்குச் செல்வதற்கான படி அமைத்துள்ளோம்.

புது வீடு !
புது வீடு !

தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள அனைத்துப் பகுதியிலுமே, தரையில் வெர்டிஃபைட் டைல்ஸ் போட்டிருக் கிறோம். கிரானைட்டைவிட, இதற்கு செலவு குறைவு. ஹால் மற்றும் படிப்பறையின் சீலிங்கில் ஜிப்சத்தால் தங்க நிறத்தில் அழகிய வேலைப் பாடுகளுடன் பார்டர் கட்டியிருக்  கிறோம். சீலிங் கின் மையப் பகுதியிலும் இதுபோல் அமைத் துள்ளோம்.

1,825 சதுரடி கொண்ட இந்த வீட்டுக்கான செலவு

புது வீடு !

18.25 லட்சம். சதுர அடிக்கு

புது வீடு !

1,000. இதைத்தவிர மொட்டைமாடி டைல்ஸ், கிரானைட், கிளாஸ் வொர்க், பிளைவுட், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், அலங்கார மின்விளக்குகள் ஆகியவற்றுக்கு தனியாக

புது வீடு !

5 லட்சம் செலவாகியிருக்கிறது!'' என்று ஒரே மூச்சில் வீட்டைப் பற்றி சொல்லி முடித்தார் ராஜாமணி.

புது வீடு !

சிக்கனமான இடத்தில்... வெகு சிறப்பாக நம் கனவு இல்லத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது உங்களுக்கும் வந்திருக்குமே!

                              - கட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism